மோதி பார்க்கலாம் வாங்க: பிஎஸ்என்எல்லா., ஏர்டெல்லா?- அனைத்து திட்டத்துக்கும் இனி இது இலவசம்: பிஎஸ்என்எல் அதிரடி

|

ஈராஸ் நவ் தனது அறிவிப்பில் பிஎஸ்என்எல்-ன் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அதன் ப்ரீமியம் உள்ளடக்கத்தை வழங்க இருப்பதாக உறுதி செய்திருக்கிறது. பிஎஸ்என்எல் ஆனது ஈராஸ் நவ் ப்ளஸ் மெம்பர்ஷிப்பை அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களின் சில பயனர்களுக்கு எஸ்டிவி செயலில் இருக்கும் வரை மட்டும் வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்

இந்த நிலையில் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) அதன் ப்ரீபெய்ட் திட்டங்களை போன்றே அதன் போஸ்ட்பெய்ட் திட்டங்களிலும் ஈராஸ் நவ் உள்ளடக்கத்தை தற்போது நிறுவனம் வழங்க இருக்கிறது. ஈராஸ் நவ் தனது ஒப்பந்த விரிவாக்கம் குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல் ஈராஸ் நவ் பிஎஸ்என்எல் உடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு அதன் உள்ளடக்கத்தை ப்ரீபெய்ட் திட்டங்களுடன் வழங்குகிறது. ஈராஸ் நவ் மூலம் பயனர்கள் 12000-க்கும் மேற்பட்ட திரைப்பட தலைப்புகள், ப்ரீமியம் அசல், இசை வீடியோக்கள் உள்ளிட்ட பல அணுகலை வழங்குகிறது.

பிஎஸ்என்எல் மற்றும் ஈராஸ் நவ் கூட்டு

பிஎஸ்என்எல் மற்றும் ஈராஸ் நவ் கூட்டு

பிஎஸ்என்எல் மற்றும் ஈராஸ் நவ் இடையேயான கூட்டு அறிவிப்பானது, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் போஸ்ட்பெய்ட் திட்டங்களில் ஈராஸ் நவ் சலுகையை வழங்குவதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. முன்னதாக எஸ்டிவி செயலில் இருக்கும் வரை பிஎஸ்என்எல் அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட சில ப்ரீபெய்ட் திட்டங்களுடன் ஈராஸ் நவ் பிளஸ் மெம்பர்ஷிப்பை நிறுவனம் வழங்கியது. பிஎஸ்என்எல் இந்தியாவில் உள்ள இருபத்தி இரண்டு தொலைத் தொடர்பு வட்டங்களில் செயல்படுகிறது. ஈராஸ் நவ் இந்தியாவில் பல மொழிகள் ஆதரவோடு அணுகலை வழங்கி வருகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களில் மட்டுமே ஈராஸ் நவ்

தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களில் மட்டுமே ஈராஸ் நவ்

பிஎஸ்என்எல் தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களில் மட்டுமே ஈராஸ் நவ் உள்ளடக்கத்தை இலவசமாக வழங்குகிறது. ஈராஸ் நவ் உள்ளடக்கிய ப்ரீபெய்ட் திட்டங்கள் குறித்து பார்க்கையில், இது ரூ.78 திட்டத்தில் 8 நாட்கள் வேலிடிட்டியையும் ரூ.98 ரீசார்ஜ் திட்டத்தில் 24 நாட்கள் வேலிடிட்டி பேக்கையும் வழங்குகிறது. அரசாங்கத்திற்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனம் மற்றும் தனியார் ஓடிடி தளத்தின் இந்த கூட்டு அறிவிப்பானது அரசாங்கத்ததுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களை அதிகரிக்கச் செய்வதோடு தனியார் ஓடிடி தளத்திற்கான பார்வையாளர்களையும் அதிகரிக்க செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயர்வு

ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயர்வு

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து மலிவு விலையில் சிறப்பான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. ஆனால் சமீபத்தில் வோடபோன் ஐடியா, ஏர்டெல் நிறுவனங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயர்வை அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும் தொடர்ந்து மலிவு ப்ரீபெய்ட் திட்டங்களில் அதிக நன்மைகளை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் திட்டத்தில் 425 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்கியுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் 60 நாட்கள் வேலிடிட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 425 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டம்

ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டம்

ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டம் ஒரு வருடத்திற்கு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் விஐபி மற்றும் அமேசான் பிரைம் வீடியோ மெம்பர்ஷிப் போன்ற ஓடிடி அணுகலை வழங்குகிறது. விங்க் மியூசிக் மற்றும் ஷா அகாடமி படிப்புகளுக்கான அணுகலை ஒரு வருடத்திற்கான ப்ரீமியம் சந்தா அணுகலை வழங்குகிறது. கடந்த ஆண்டு, தொற்று நோய் பரவல் காரணமாக அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக பல்வேறு திரைப்படங்கள், சீரிஸ்கள் ஓடிடி தளங்களில் வெளியானது இதனால் ஓடிடி அணுகலுக்கான தேவை அதிகரிக்கத் தொடங்கியது.

பிரபலமான நன்மைகளுடன் ஓடிடி சந்தாக்கள்

பிரபலமான நன்மைகளுடன் ஓடிடி சந்தாக்கள்

இந்த திட்டங்களால் வழங்கப்படும் பிரபலமான நன்மைகளில் ஓடிடி சந்தாக்கள் மற்றும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். ஓடிடி சந்தாக்கள் போன்ற கவர்ச்சிகரமான பலன்களை போஸ்ட்பெய்ட் திட்டங்களில் வழங்கி வருகிறது தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல். ஓடிடி ஸ்ட்ரீமர்களுக்கான ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.499 போஸ்ட்பெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.499 போஸ்ட்பெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.499 போஸ்ட்பெய்ட் திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்களுடன் 75 ஜிபி டேட்டா நன்மையை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில் ஒரு வருடத்திற்கான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் விஐபி மற்றும் அமேசான் பிரைம் வீடியோ மெம்பர்ஷிப் போன்று ஓடிடி சந்தா அணுகலை வழங்குகிறது. விங்க் மியூசிக் மற்றும் ஷா அகாடமி படிப்புகளுடன் இணைத்து ஒரு வருடத்திற்கான ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ரீமியத்திற்கான சந்தாவை வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.999 போஸ்ட்பெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.999 போஸ்ட்பெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.999 போஸ்ட்பெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற குரல் அழைப்புகள் தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் 150 ஜிபி ரோல் ஓவர் டேட்டா நன்மைகளுடன் வருகிறது. இந்த திட்டம் ஒரு வருடத்திற்கு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் விஐபி மற்றும் அமேசான் பிரைம் வீடியோ மெம்பர்ஷிப் போன்ற ஓடிடி சந்தாக்களை வழங்குகிறது. விங்க் மியூசிக் மற்றும் ஷா அகாடமி படிப்புகள் போன்று ஒரு வருடத்திற்கான ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் சந்தாவை வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.1599 போஸ்ட்பெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.1599 போஸ்ட்பெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.1599 போஸ்ட்பெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற குரல் அழைப்பு, உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் 500 ஜிபி டேட்டா ரோல்ஓவர் உள்ளிட்ட பலன்களை வழங்குகிறது. இந்த திட்டம் ஒரு வருடத்திற்கு தேவையான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் விஐபி மற்றும் அமேசான் பிரைம் வீடியோ மெம்பர்ஷிப் போன்ற ஓடிடி அணுகலை வழங்குகிறது. இது விங்க் மியூசிக் மற்றும் ஷா அகாடமி படிப்புகள் அணுகலை வழங்குகிறது. குடும்ப உறுப்பினர்களுக்கான ஆட் ஆன் இலவச சலுகையை வழங்குகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Bsnl Going to Offer its Premium EROS Now Membership Subscription For Postpaid plans

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X