Just In
- 1 hr ago
முரட்டுத்தனமான ஸ்மார்ட்வாட்ச் மாடலை கம்மி விலையில் இறக்கிவிட்ட Noise.! என்னென்ன அம்சங்கள்?
- 3 hrs ago
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- 4 hrs ago
பட்ஜெட் விலை Poco எக்ஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி வெளியானது.! ரெடியா இருங்க.!
- 5 hrs ago
பிரபஞ்சத்தின் மறுபக்கத்தில் இருந்து வந்த ரேடியோ சிக்னல்.! திறமையாகக் கண்டுபிடித்த இந்தியர்கள்.!
Don't Miss
- News
EV துறையில் 2030-க்குள் 5 கோடி வேலை வாய்ப்புகள்.. பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
- Finance
Economic survey 2023:அரசின் மூலதன செலவு இலக்கு எட்டப்படலாம்.. ஆய்வறிக்கையில் குட் நியூஸ்!
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 5 ராசிக்காரங்க வெற்றிப்படிக்கட்டில் வேகமா ஏறப்போறாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Sports
2வது டி20ல் நடந்த குளறுபடி.. கடைசி நேரத்தில் இந்தியா வைத்த கோரிக்கை.. அதிகாரி அதிரடி நீக்கம்- விவரம்
- Movies
தளபதி 67 அறிவிப்பிற்கு வாழ்த்து சொன்ன வாரிசு பட தயாரிப்பாளர்.. என்ன சொன்னார் தெரியுமா?
- Automobiles
பெட்டி பெட்டியா வெளிநாடுகளுக்கு பயணித்த சூப்பர் மீட்டியோர்650! ராயல் என்பீல்டு அதோட வேலைய காட்ட தொடங்கிருச்சு!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
BSNL பயனர்கள் ஷாக்! தலைகீழா நின்றாலும் இனி இந்த ரீசார்ஜ் திட்டங்கள் கிடைக்காது.. கடைசி வாய்ப்பு
சுதந்திர தின சலுகையின் கீழ் தொடங்கப்பட்ட பிராட்பேண்ட் திட்டங்களை பிஎஸ்என்எல் விரைவில் நீக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. BSNL ஃபைபர் பயனர்களுக்கு 75 நாட்கள் செல்லுபடியாகும் மலிவு திட்டங்களை ரீசார்ஜ் செய்வதற்கான கடைசி வாய்ப்பு இது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ரூ.775 மற்றும் ரூ.275 ரீசார்ஜ் திட்டம்
BSNL சுதந்திர தின சலுகையின் கீழ் இரண்டு வரையறுக்கப்பட்ட பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ரூ.775 மற்றும் ரூ.275 என்ற விலையில் இரண்டு திட்டங்களும் கிடைக்கிறது. தற்போது இதில் இடம்பெற்றுள்ள ரூ.775 திட்டத்தை தான் பிஎஸ்என்எல் நீக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களாக இருந்தால் உடனே ரீசார்ஜ் செய்வது நல்லது.

சுதந்திர தின சலுகை
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) விரைவில் அதாவது டிசம்பர் 14, 2022 முதல் ரூ.775 பிராட்பேண்ட் திட்டத்தை நிறுத்தவுள்ளது. இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக பிஎஸ்என்எல் இந்த ஆண்டு தொடக்கத்தில் மேலே குறிப்பிட்டுள்ள ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்தது.

2000 ஜிபி டேட்டா
பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த ரீசார்ஜ் திட்டத்தில்150 எம்பிபிஎஸ் டேட்டா வேகத்துடன் கூடிய 2000 ஜிபி இணையம், கூடுதல் ஓடிடி நன்மைகள் என பல சலுகைகளை வழங்குகிறது. இந்த திட்டமானது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே தொடங்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இரண்டு ரீசார்ஜ் திட்டங்களும் நிறுத்தமா?
சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக ஒரே நேரத்தில் 2 பிராட்பேண்ட் திட்டங்களை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ.775 மற்றும் ரூ.275 ஆகும். இந்த இரண்டு திட்டங்களையும் பிஎஸ்என்எல் அகற்றும் என கூறப்படுகிறது. இந்த திட்டங்களில் கிடைக்கும் நன்மைகளை சற்று விரிவாக பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.775 ஃபைபர் பிராட்பேண்ட் திட்டம்
ரூ.775 ஃபைபர் பிராட்பேண்ட் திட்டமானது 150 எம்பிபிஎஸ் இணைய வேகத்துடன் 2000GB (2TB) இணைய சேவை வழங்குகிறது. 75 நாட்கள் வேலிடிட்டியுடன் இந்த திட்டம் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் கிடைக்கும் 2000ஜிபி டேட்டாவை பயன்படுத்திய பிறகு இதன் இணைய வேகம் 10 எம்பிபிஎஸ் ஆகக் குறைக்கப்படும்.
அதேபோல் இந்த திட்டத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார், லயன்ஸ் கேட், ஷெமரூ, ஹங்காமா, சோனி லைவ், ஜீ5, வூட் மற்றும் யப் டிவி ஆகிய ஓடிடி ஸ்ட்ரீமிங் தள நன்மைகளும் கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ.275 ஃபைபர் பிராட்பேண்ட் திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.275 ஃபைபர் பிராட்பேண்ட் திட்டமானது 75 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் 3300GB (3.3TB) டேட்டா வழங்கப்படுகிறது. இரண்டு திட்டங்களிலும் இணைய வேகம் என்பது மாறுபடும். பிஎஸ்என்எல் இந்த ரீசார்ஜ் திட்டத்தில் 30 எம்பிபிஎஸ் வேகத்தில் இணையத்தை வழங்குகிறது. இணைய வரம்பு முடிந்த பிறகு இதன் வேகம் 4 எம்பிபிஎஸ் ஆகக் குறைக்கப்படும்.

மிக மலிவு விலை ரீசார்ஜ் திட்டம்
பிஎஸ்என்எல் வழங்கும் பிற திட்டங்களுடன் இந்த ரூ.775 மற்றும் ரூ.275 திட்டங்களை ஒப்பிட்டு பார்க்கையில், இது மிகவும் மலிவு விலை ரீசார்ஜ் திட்டமாகும். இந்த திட்டங்களில் அதிவேக இணையம் வழங்கப்படுகிறது. பல்வேறு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த ரீசார்ஜ் திட்டங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

உடனே ரீசார்ஜ் செய்யவும்
எனவே இந்த ரூ.775 மற்றும் ரூ275, BSNL திட்டத்தை ரீசார்ஜ் செய்ய திட்டமிட்டிருந்தால் உடனே ரீசார்ஜ் செய்யவும். டிசம்பர் 14 ஆம் தேதி முதல் இந்த திட்டம் கிடைக்காது என கூறப்படுகிறது. புதிய பிஎஸ்என்எல் ஃபைபர் இணைப்பை பெற நீங்கள் விரும்பினால் BSNL இன் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்லலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470