பிஎஸ்என்எல் ரூ.247 திட்டம்: தினசரி 3ஜிபி டேட்டா.! எத்தனை நாட்கள் வேலிடிட்டி?

|

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு போட்டியாக பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து அருமையான சலுகைகள் மற்றும் அட்டகாச திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம்.

 கடந்த காலத்தில் ரூ.200-க்கு கீழ் ஒரு நாளைக்கு

இந்த பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த காலத்தில் ரூ.200-க்கு கீழ் ஒரு நாளைக்கு 3ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குவதைக் கூட நாம் பார்த்தோம். இருந்தபோதிலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் முக்கிய குறைபாடு 4ஜி சேவைகள் இல்லாதது தான். மற்ற நிறுவனங்கள் சிறப்பான 4ஜி சேவைகளை வழங்கி வருகிறது.

 400 ரூபாய்க்கு வழங்குகின்றன

மேலும் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற டாப் 3 டெலிகாம் நிறுவனங்கள் 3ஜிபி அளவிலான தினசரி டேட்டா திட்டங்களை சுமார் 400 ரூபாய்க்கு வழங்குகின்றன. அதேசமயம் பிஎஸ்என்எல் அதை வெறும் ரூ.250-க்கு குறைவான விலையில் வழங்குகிறது.

ஆசையாக ஆர்டர் பண்ண பார்சல் வீட்டுக்கு வந்தது: திறந்து பார்த்தா?- அதிர்ந்து போன தம்பதி

80 கே.பி.பி.எஸ் ஆக

அதன்படி பிஎஸ்என்எல் எஸ்.டி.வி 247 திட்டமானது ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான அதிகவேக டேட்டாவை வழங்குகிறது. பின்பு குறிப்பிட்ட வரம்பை மீறியபின் இணைய வேகம் 80 கே.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படும். தவிர இது ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது.

இந்த திட்டத்தை வரம்பற்ற

பிஎஸ்என்எல் எஸ்.டி.வி 247 திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 30 நாட்கள் ஆகும், இருப்பினும் விளம்பர சலுகையின் ஒரு பகுதியாக தற்போது 40 நாட்கள் என்கிற செல்லுபடியை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் ஹோம் மற்றும் தேசிய ரோமிங் வட்டங்களில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் தேசிய அழைப்பு நன்மைகள் கிடைக்கும். ஆனால் இந்த திட்டத்தை வரம்பற்ற அழைப்பு நன்மையை வழங்கும் ஒரு எஸ்டிவி என்று பிஎஸ்என்எல் கூறுகிறது. ஆனால் இது ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் என்கிற வரம்பை கொண்டுள்ளது.

 எஸ்.டி.வி 247 திட்டம் ஆனது

எனவே பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இருந்து ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் எஸ்.டி.வி 247 திட்டம் ஆனது மொத்தம் 120 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் என்று அர்த்தம். பின்பு இந்த விலையில் மற்ற டெலிகாம் நிறுவனங்கள் வெறும் 50 ஜிபி அளவிலான டேட்டா நன்மைகளையே வழங்குகின்றன.

வேண்டியது என்னவென்றால்,

ஆனால் பிஎஸன்எல் பயனர்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால், பிஎஸ்என்எல் எஸ்.டி.வி 247 திட்டத்தின் கீழ் அணுக கிடைக்கும் கூடுதல் செல்லுபடியாகும் விளம்பர சலுகையானது வருகிற நவம்பர் 30, 2020 அன்று முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

யோ, வி

இப்போது ஏர்டெல், ஜியோ, வி நிறுவனங்களிடமிருந்து ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் 3 ஜிபி தினசரி டேட்டா திட்டங்களைப் பார்ப்போம். முதலில் ஜியோவின் ரூ.349 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பற்றி பார்க்கையில், இது தினசரி 3 ஜிபி டேட்டா, வரம்பற்ற ஜியோ டூ ஜியோ குரல் அழைப்பு, 1,000 ஜியோ அல்லாத எஃப்யூபி நிமிடங்கள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது.

வோடபோன் ஐடியா

அடுத்து ஏர்டெல் மற்றும் வி(வோடபோன் ஐடியா) இரண்டு ரூ.398 ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டுள்ளன. இவைகள் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா, எந்த நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி, தினசரி 100 எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளை வழங்குகின்றன.

Most Read Articles
Best Mobiles in India

English summary
BSNL giving 3GB data every day for less than Rs 250 And More Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X