BSNL, Airtel, Vi திட்டம்: ரூ.399 விலையில் எவ்வளவு நன்மைகளா? இதில் எது பெஸ்ட்?
இந்தியாவில் மிகவும் மலிவான விலையில் திட்டங்களை வழங்கும் தொலைத்தொடர்பு நிறுவனம் எது என்ற கேள்வியை உங்களிடம் நாங்கள் கேட்டால், உங்களின் பதில் என்னவாக இருக்கும்? பெரும்பாலானோர், யோசிக்காமல் உடனே அது ரிலையன்ஸ் ஜியோ என்று தான் கூறுவார்கள். ஆனால், உண்மையில், இந்தியாவில் மிகவும் மலிவான விலையில் சிறந்த திட்டங்களை வழங்குவது அரசுக்குச் சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) நிறுவனம் மட்டும் தான்.

BSNL வழங்கும் திட்ட நன்மைகள்
என்னதான் BSNL நிறுவனம் மலிவு விலையில் சிறந்த நன்மைகளை வழங்கும் பல திட்டங்களை தன் வசம் வைத்துள்ளது என்றாலும் கூட, இன்னும் நிறுவனம் 4ஜி நோக்கி கால் பதிக்காமல் 3ஜி சேவையில் இயங்குகிறது என்பது மட்டுமே ஒரு சிறிய குறைபாடாக இருக்கிறது. இருப்பினும் BSNL வழங்கும் திட்டங்கள் பயனர்களைக் கவரக்கூடியதாக இருக்கிறது. BSNL வழங்கும் ரூ.399 திட்டம் போல், அதே விலையில் தனியார் நிறுவனங்களால் வழங்கப்படும் திட்டங்களைப் பற்றி இங்கே பார்க்கப்போகிறோம்.

ரூ.399 விலையில் மற்ற நெட்வொர்க் என்ன வழங்குகிறது?
இருப்பினும், தனியார் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களிடமிருந்து பயனர்கள் அதே விலையிலான திட்டங்களைப் பெறுவதை விட BSNL இன் திட்டங்கள் அதிக நன்மைகளை வழங்குவதை நீங்களே இப்போது தெரிந்துகொள்ளலாம். பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.399 திட்டத்தையும், அதே விலையில் ஏர்டெல் மற்றும் விஐ வழங்கும் ரூ.399 விலை திட்டத்தில் நிறுவனங்கள் என்ன வழங்குகிறது என்பதையும் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ 399 ப்ரீபெய்ட் திட்டம்
BSNL அதன் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தை 80 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. மலிவு விலையில் நடுத்தர கால திட்டத்தை எதிர்பார்க்கும் ஒருவருக்கு இது ஒரு நல்ல தேர்வாகும். இந்தத் திட்டத்தில் பயனர்கள் தினசரி 1ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். அதன் பிறகு வேகம் 80 கேபிபிஎஸ் ஆகக் குறைக்கப்படுகிறது. இதில் அன்லிமிடெட் குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் என மொத்த பலன்களும் 80 நாட்களுக்குத் தொகுக்கப்பட்டுள்ளது. இலவச BSNL ட்யூன்ஸ் மற்றும் லோக்துன் உள்ளடக்கமும் உள்ளது.

பாரதி ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்
பாரதி ஏர்டெல் அதன் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தை 28 நாட்கள் குறுகிய கால வேலிடிட்டியுடன் வழங்குகிறது. இதில் பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினமும் 100 SMS மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளுடன் தினசரி 2.5GB டேட்டாவைப் பெறுகிறார்கள். இந்த திட்டத்தின் கூடுதல் பலன்களில் மூன்று மாதங்களுக்கு Disney+ Hotstar மொபைலின் முக்கிய ஓவர்-தி-டாப் (OTT) நன்மையும் இதில் கிடைக்கிறது.

வோடபோன் ஐடியா ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியாவும் மேலே குறிப்பிட்டுள்ள ஏர்டெல் திட்டத்தைப் போன்ற பலன்களை வழங்குகிறது. ஆனால் இங்கு ஏர்டெல் திட்டத்திற்கும் Vi இன் திட்டத்திற்கும் உள்ள வித்தியாசம் கூடுதல் நன்மைகளில் மட்டுமே பிரதிபலிக்கிறது. Vi வழங்கும் இந்த ப்ரீபெய்ட், ஹீரோ அன்லிமிடெட் நன்மைகள் மற்றும் மூன்று மாதங்களுக்கு Disney+ Hotstar மொபைலின் இலவச OTT சந்தா மற்றும் Vi Movies & TV VIP அணுகலுடன் வருகிறது.

Vi Hero அன்லிமிடெட் நன்மை
Vi Hero அன்லிமிடெட் நன்மைகளின் கீழ் வீகென்ட் டேட்டா ரோல்ஓவர், டேட்டா டிலைட்ஸ் மற்றும் ஆள் நைட் பிங்கே போன்ற மூன்று நன்மைகள் கிடைக்கிறது. Vi இன் இந்த கூடுதல் நன்மைகளை நாம் வேறு எந்த தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தாலும் ஒப்பிட முடியாதவை. இங்குள்ள அனைத்து திட்டங்களையும் நீங்கள் கவனித்தால், BSNL திட்டம் நீண்ட செல்லுபடியுடன் வருகிறது. அதே நேரத்தில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 399 ரூபாய்க்குப் பெரிய OTT நன்மை மற்றும் அதிக தினசரி டேட்டாவுடன் குறுகிய செல்லுபடியாகும் திட்டங்களை வழங்குகின்றன. இதில் எது உங்களின் தேர்வு என்பதைத் தெரியப்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications