Home
News

கொத்தா 600GB டேட்டா கொடுத்த BSNL.. ஒரே அசத்தல் பிளான் 365 நாளுக்கு நன்மை.. ஆடிப்போன Jio, Airtel, Vi..

அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தில் 10 இல்லை, 100 இல்லை, மொத்தமாக 600GB டேட்டா நன்மையை வழங்குவதாக அறிவித்து மக்களை வியப்படைய செய்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ள இந்த புதிய 600GB டேட்டா கிடைக்கும் திட்டத்தின் விலை மற்றும் முழு நன்மை விபரங்களை இப்போது பார்க்கலாம். இந்த புதிய BSNL திட்டத்தால் ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்கள் கடுப்பில் உள்ளனர்.

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் நிறுவனங்கள் கடுமையான விலை ஏற்றத்தை நடைமுறைப்படுத்தின. இதனால், மக்கள் பல இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். பல வாடிக்கையாளர்கள் அதிக விலையை கண்டிக்கும் விதமாக அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் மலிவு விலையில் அதிக நன்மைகளை அடங்கிய திட்டங்களை வழங்குகின்றன.

கொத்தா 600GB டேட்டா கொடுத்த BSNL.. ஒரே அசத்தல் பிளான் 365 நாளுக்கு..

கொத்தா 600GB டேட்டா கொடுத்த BSNL.. ஒரே அசத்தல் பிளான் 365 நாளுக்கு நன்மை:

அதில் குறிப்பிட்டு கூறும் வகையில் BSNL நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்துள்ள திட்டம் தான் பிஎஸ்என்எல் ரூ. 2999 திட்டம் (BSNL Rs 2999 Plan). இந்த திட்டம் 1 வருடம் செல்லுபடியாகும் வேலிடிட்டி (BSNL 1 year validity plan) உடன் வருகிறது. அதாவது முழுமையாக ஒரு ஆண்டிற்கான சேவையை 365 நாட்களுக்கு எந்தவித தடையும் இல்லாமல் இந்த திட்டம் வழங்குகிறது. இந்த திட்டம் 600GB டேட்டா நன்மையை வழங்குகிறது.

ஹெவி டேட்டா பயனர்களுக்கு (heavy data user plan) இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதம். 600GB டேட்டா தீர்ந்த பிற்பாடு, இணைய வேகம் 40Kbps ஆக குறைக்கப்பட்டு, அன்லிமிடெட் டேட்டா இலவசமாக (unlimited data benefits) வழங்கப்படும். BSNL வழங்கும் 600GB டேட்டா நன்மை திட்டம் இப்போது இந்திய மக்களிடம் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (Unlimited coice calls) நன்மையை வழங்குகிறது.

பிஎஸ்என்எல் ரூ. 2999 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2999 Prepaid Plan):

இத்துடன் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் (SMS) நன்மையையும் மக்கள் பெறுகிறார்கள். இது தவிர பிஎஸ்என்எல் ரூ. 2999 திட்டம் உங்களுக்கு OTT நன்மை மற்றும் இதர இலவச நன்மைகளையும் இந்த திட்டத்துடன் வழங்குகிறது. இந்த பிஎஸ்என்எல் ரூ. 2999 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2999 Prepaid Plan) 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் EROS NOW Entertainment சந்தாவை வழங்குகிறது.

ஈரோஸ் நொவ் எண்டெர்டைன்மெண்ட் (Eros Now Entertainment) மூலம் பயனர்கள் பல டிவி சேனல் (TV channels) உள்ளடக்கங்களை வழங்குகிறது. திரைப்படங்கள் (movies) மற்றும் சில ஆன்லைன் நிகழ்ச்சிகளை கண்டு மகிழ இந்த திட்டம் ஏற்றது. இந்த பிஎஸ்என்எல் ரூ. 2999 திட்டம் (BSNL Rs 2999 Plan) இலவச BSNL டியூன்ஸ் (free BSNL tunes) சந்தாவையும் வழங்குகிறது.

இந்த திட்டத்தில் கிடைக்கும் டேட்டா நன்மை தினசரி வரம்பு எதுவும் இல்லாமல் பயன்படுத்த கிடைப்பதனால், நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்திக்கொள்ளலாம். கூடுதல் டேட்டா தேவைப்படும் பொழுது, பிஎஸ்என்எல் இன் டேட்டா வவுச்சர்களை (BSNL data vouchers) பயன்படுத்தி டேட்டா பேலன்சை அதிகரித்துக்கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
BSNL Gave 600GB Data in Bulk One Amazing Plan With Benefits For 365 Days Even Jio, Airtel, Vi Dont have such plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X