BSNL தான் கெத்து.. 29.4 லட்சம் புது பயனர்கள்.. கடுப்பில் Jio, Airtel, Vi.. BSNL-க்கு மக்கள் மாற இதான் காரணமா?
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற முக்கிய தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் தங்கள் மொபைல் கட்டணங்களை சுமார் 15 சதவிகிதம் அதிகரித்தன. இதனால், ஏராளமான வாடிக்கையாளர்கள் மலிவானவிலையில் அதிக ரீசார்ஜ் விருப்பங்கள் வழங்கும் அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) என்றழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) நெட்வொர்க்கிற்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகின்றனர். இந்த போக்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) தரவுகளால் உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
BSNL நிறுவனம் கடந்த 2024 ஜூலை மாதத்தில் மொத்தமாக சுமார் 29.4 லட்சம் புதிய பயனர்களை ஈர்த்துள்ளதாக தகவல்கள் தெரிவகிக்கின்றன. அதே நேரத்தில், ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற நிறுவனங்களில் உள்ள வாடிக்கையாளர் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக TRAI தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை தனியார் நிறுவனங்கள் எத்தனை லச்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது என்பது இங்கே.

BSNL தான் கெத்து.. 29.4 லட்சம் புது பயனர்கள்.. கடுப்பில் Jio, Airtel, Vi:
அதே காலகட்டத்தில், பிஎஸ்என்எல் இன் மொபைல் பயனர் அடிப்படை 8.851 கோடிக்கு விரிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் குறிக்கிறது. இந்த வளர்ச்சி ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ ஆகியவற்றால் சந்திக்கப்பட்ட இழப்புகளுடன் கூர்மையாக மாறுபடுகிறது. ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ வாடிக்கையாளர் எண்ணிக்கையை முறையே 47.576 கோடி, 38.732 கோடி மற்றும் 21.588 கோடிக்கு குறைந்துள்ளன.
இந்த மாற்றங்கள் சந்தைப் பங்கு சதவீதங்களை குறிப்பிடத்தக்க வகையில் பாதித்துள்ளன. ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ இன் பங்குகள் முறையே 40.68 சதவிகிதம், 33.12 சதவிகிதம் மற்றும் 18.46 சதவிகிதம் என குறைந்துள்ளன. மாறாக, பி.எஸ்.என்.எல். இன் சந்தைப் பங்கு சட்டென அதிகரித்து, 7.59 சதவிகிதத்திற்கு உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது மக்கள் எப்படி தனியார் விலை ஏற்றதால் அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்புக்கு குறுகிய காலத்தில் மாறியுள்ளனர் என்பதை காண்பிக்கிறது.
ஜூலை மாதத்தில் 25.6 லட்சம் புதிய 4ஜி மற்றும் 5ஜி பயனர்களை சேர்த்ததன் மூலம் ஏர்டெல் தனது இழப்புகளை சில அளவுகளில் ஈடுசெய்ய முடிந்தது. இருப்பினும், ஜியோ தனது 4ஜி/5ஜி வாடிக்கையாளர் அடிப்படையில் 7,60,000 குறைவை எதிர்கொண்டது. மேலும் வோடபோன் ஐடியா தனது இணைக்கப்பட்ட 3ஜி/4ஜி பயனர் எண்ணிக்கையில் 11 லட்சம் குறைவை பதிவு செய்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், விஐ இன்னும் 5ஜி சேவைகளை நாட்டில் வழங்க துவங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
தமிழகத்தில் BSNL 4G முழுமையாக எப்போது வருது? BSNL-க்கு மக்கள் மாற இதுதான் காரணமா?
இது விரைவாக வளர்ந்து வரும் தொலைத்தொடர்பு துறையில் வாடிக்கையாளர் தேர்வுகளை பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது. தனியார் டெலிகாம் நிறுவனங்களின் கடுமையான விலை ஏற்றத்தை கண்டிக்கும் விதமாக மக்கள் இப்போது தொடர்ந்து பிஎஸ்என்எல் நெட்வொர்க்கிற்கு மாறிவருகின்றனர். குறிப்பாக, பல முக்கிய நகரங்களில் இப்போது பிஎஸ்என்எல் 4ஜி சேவை பயன்படுத்த கிடைப்பதனால், மக்கள் குடும்பம் குடும்பமாக BSNL-க்கு மாறி வருகிறார்கள்.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை அக்டோபர் 20, 2024 ஆம் தேதிக்குள் முழுமையாக அறிமுகம் செய்துவிடும் என்று பிஎஸ்என்எல் தரப்பில் இருந்து அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஒருவேளை கால தாமதம் ஏற்பட்டாலும் கூட, தீபாவளி பண்டிகைக்கு முன்பாக பிஎஸ்என்எல் அதன் 4ஜி சேவையை தமிழகத்தில் முழுமையாக அறிமுகம் செய்யுமென்று உறுதியளித்துள்ளது. இப்போது குஜராத் மற்றும் கேரளாவில் BSNL 4G முழுமையாக பயன்படுத்த கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications