BSNL போட்டான் பாரு.. ரூ.499 போதும்.. 3 மாதம் வேலிடிட்டி.. பிரீமியம் OTT சந்தா.. லைவ் கிரிக்கெட் ஸ்ட்ரீமிங்!
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் எப்டிடிஎச் (FTTH) கஸ்டமர்களுக்கு மாதாந்திரம் வெறும் ரூ.499 விலைக்கு 3 மாத வேலிடிட்டியுடன் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பிரீமியம் ஓடிடி ஆப்கள், எச்டி ரொசொலூஷனில் லைவ் கிரிக்கெட் ஸ்டீரிமிங் கொடுத்து உள்ளது. இந்த புதிய ஆட்-ஆன் திட்டத்தின் முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
எப்டிடிஎச் கஸ்டமர்களுக்கு ஃபைபர் டேட்டா, லைவ் டிவி சேனல்கள் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது. இந்த திட்டங்களை வைத்திருக்கும் கஸ்டமர்கள் ரூ.499 செலுத்தி மூன்று ஓடிடி ஆப்களுடன் லைவ் கிரிக்கெட் ஸ்ட்ரீமிங் சலுகையையும் பெற்று கொள்ளலாம். இது ஆட்-ஆன் திட்டம் போல இருப்பதால், ஏற்கனவே எப்டிடிஎச் திட்டம் இருக்க வேண்டும்.

பிஎஸ்என்எல் எப்டிடிஎச் ஆட் ஆன் பேக் ரூ. 499 விவரங்கள் (BSNL FTTH Add On Pack Rs 499 Details): இந்த ஆட் ஆன் திட்டத்தை பெறுவதற்கு 18004444 என்கிற வாட்ஸ்அப் எண்ணுக்கு Hi என்று மெசேஜ் செய்து புக் செய்து கொள்ளலாம். பிஎஸ்என்எல் எப்டிடிஎச் போர்டல் வழியாகவும் புக்கிங் செய்து கொள்ளலாம். இப்படி பெற்றவுடன் 3 மாதங்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படும்.
இந்த நாட்கள் முழுவதும் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சோனிலிவ் (SonyLIV) மற்றும் ஜீ5 (Zee5) ஆகிய ஓடிடி ஆப்களின் சந்தா கொடுக்கப்படும். இதில் டி20 உலக கோப்பை (T20 World Cup) மற்றும் ஐபிஎல் 2026 (IPL 2026) போட்டிகளை பார்த்து கொள்ளலாம். இப்படி ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் இந்த திட்டத்தை பெற்றலாம். முழு ஐபிஎஸ் சீசனையும் பார்த்து கொள்ளலாம்.
இதுபோக ஓடிடி ஆப்களின் கிடைக்கும் மூவிக்கள் மற்றும் ஷோக்களையும் பார்த்து கொள்ளலாம். இந்த திட்டத்தை பெற்றால், ஒரே நேரத்தில் 2 டிவைஸ்களில் பார்த்து கொள்ள முடியும். ஆகவே, மொபைல் மற்றும் டிவியில் பார்த்து கொள்ளலாம் அல்லது 2 டிவிகள் அல்லது 2 மொபைல்களில் ஒரே நேரத்தில் ஸ்ட்ரீமிங் செய்து கொள்ளலாம். கிரிக்கெட் பிரியர்களுக்கு பக்காவாக உள்ளது.
இந்த புதிய திட்டம் போல ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கும் புதிய வருடாரந்திர திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இது வழக்கமாக கிடைக்கும் வருடாந்திர திட்டத்தைவிட மலிவான விலைக்கு கிடைக்கிறது. பிஎஸ்என்எல் ரூ.2026 திட்டமே ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு புதிதாக கிடைக்கிறது. இதில் 365 நாட்களுக்கு வேலிடிட்டி, வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் கிடைக்கும்.
பிஎஸ்என்எல் ரூ.2026 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs. 2026 Prepaid Plan): நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டாவை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்து உள்ளது. 365 நாட்களுக்கு 1,095 ஜிபி டேட்டா கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. தினசரி டேட்டாவே அதிகமாக இருப்பதால், 4ஜி சேவையை பெறும் கஸ்டமர்களுக்கு அதிவேக டேட்டா மட்டுமல்லாமல், அதிகப்படியான டேட்டாவும் கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், தினமும் கொடுக்கப்படும் 3 ஜிபி டேட்டா முடிந்து போன பிறகு 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) கஸ்டமர்களுக்கு பயன்படுத்த கிடைக்கும். மற்ற சலுகைகள் வழக்கம்போக இருக்கும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் (Roaming Voice) கிடைக்கிறது. 100 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் தினமும் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








