அள்ளிக்கொடுக்கும் BSNL.. ஒரே பிளான் மாதம் தோறும் 1300GB டேட்டா.. 6 மாத வேலிடிட்டி.. எந்த திட்டம்? என்ன விலை?
பிஎஸ்என்எல் (BSNL) என்று சுருக்கமாக அழைக்கப்படும் அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) தொலைத்தொடர்பு நிறுவனம், தற்போது இந்திய மக்களுக்காக ஒரு நம்ப முடியாத சலுகையை அறிமுகம் செய்துள்ளது. அதிக இன்டர்நெட் சேவை தேவைப்படும் வா வாடிக்கையாளர்களுக்காக வின்டர் போனன்ஸா (Winter Bonanza offer) என்ற புதிய சிறப்பு சலுகையின் கீழ் பிஎஸ்என்எல் நிறுவனம் இலவச டேட்டா நன்மையை வழங்கவுள்ளது. இதன் படி 6 மாத காலத்திற்கு ஒவ்வொரு மாதமும் 1300GB டேட்டாவை பிஎஸ்என்எல் வழங்குகிறது. இது என்ன திட்டம்? என்று விபரங்கள் இங்கே.
இன்டர்நெட் பயனர்களை குறிவைத்து பிஎஸ்என்எல் நிறுவனம் புதிதாக வின்டர் போனன்ஸா ஆஃபர் (Winter Bonanza offer) என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் 6 மாத காலத்திற்கு இலவச இன்டர்நெட் சேவையை (free BSNL internet for 6 months) அறிமுகம் செய்கிறது. இந்த திட்டத்தின் கீழ் 1300GB ஹை-ஸ்பீட் டேட்டாவை (high speed data) ஒவ்வொரு மாதமும் பயனர்கள் பயன்படுத்தலாம்.

அள்ளிக்கொடுக்கும் BSNL.. ஒரே பிளான் மாதம் தோறும் 1300GB டேட்டா:
பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் பாரத் பைபர் பிராட்பேண்ட் சேவையின் (BSNL's Bharat Fiber broadband service) கீழ் 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும் பிஎஸ்என்எல் ரூ 1999 திட்டத்தை (BSNL FTTH Rs 1999 Plan) அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் தற்போது இந்தியாவில் உள்ள பல இடங்களில் அணுக கிடைக்கிறது. இருப்பினும் டெல்லி மற்றும் மும்பையில் மட்டும் இந்த திட்டம் பயன்படுத்த கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தை தற்போது பயனர்கள் வாங்கினால், இன்டர்நெட் கனெக்ஷன் உடன் இலவச லேண்ட்லைன் இணைப்பும் கூடுதலாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) நன்மை 6 மாத காலத்திற்கு பயன்படுத்த கிடைக்கிறது. இந்த திட்டம் ஒவ்வொரு மாதத்துக்கும் 1300GB டேட்டாவை வழங்குகிறது. இதன் வேகம் 25Mbps ஆக இருக்கும்.
பிஎஸ்என்எல் ரூ 1999 திட்டத்தை (BSNL FTTH Rs 1999 Plan):
ஒருவேளை உங்களுக்கு வழங்கப்படும் ஒவ்வொரு மாத 1300GB டேட்டாவை நீங்கள் அந்த 30 நாள் காலத்திற்குள் முடித்துவிட்டால், உங்கள் இன்டர்நெட் வேகம் 4Mbps ஆக குறைக்கப்பட்டு அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படும் என்று பிஎஸ்என்எல் (BSNL) தகவல் தெரிவிக்கிறது. இத்துடன் பிஎஸ்என்எல் நிறுவனம் சமீபத்தில் பிஎஸ்என்எல் ரூ. 599 திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய பிஎஸ்என்எல் ரூ. 599 திட்டம் (BSNL Rs 599 Plan) 84 நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டி (validity) உடன் வருகிறது. இந்த திட்டம் தினசரி 3GB டேட்டா (3GB data per day) நன்மையோடு வருகிறது. இந்த திட்டம் மொத்தமாக 252GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் (SMS) நன்மையை வழங்குகிறது.
பிஎஸ்என்எல் ரூ. 599 திட்டம் (BSNL Rs 599 Plan):
தினசரி 3GB டேட்டா நன்மையை தேடும் வாடிக்கையாளர்களுக்கு இந்த பிஎஸ்என்எல் ரூ 599 திட்டம் மிகச் சிறந்த திட்டமாக பார்க்கப்படுகிறது. 6 மாத காலத்திற்கு ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு 1300GB டேட்டாவுடன் அன்லிமிடெட் அழைப்பு நன்மை வேண்டுமென்றால் BSNL FTTH 1999 Plan திட்டத்தை ரீசார்ஜ் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். இன்டர்நெட் கனெக்ஷனிற்கு இலவச இன்ஸ்டாலேஷன் சேவையும் உண்டு.


Click it and Unblock the Notifications








