BSNL கும்பமேளா.. FREE சிம் கார்டுகள்.. குளிர்ந்துபோன கஸ்டமர்கள்.. பைசா செலவு இல்ல.. அந்தந்த சர்க்கிளில் வருது!
இந்தியாவில் எந்த சர்க்கிளில் இருந்தாலும், அவர்களுக்கு இலவச சிம் கார்டுகளை (Free SIM Cards) மத்திய தொலைத்தொடர்பு துறையின் கீழ் செயல்படும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் கொடுக்கிறது. நீங்கள் தமிழ்நாட்டில் இருந்து வந்தாலும் சரி, கேரளாவில் இருந்து வந்தாலும் சரி, உங்களுக்கு சிம் கார்டுகள் கிடைக்கும். அதேபோல சிம் கார்டுகளை தொலைத்துவிட்டாலும், புது சிம் கார்டு வழங்கப்படுகிறது. இது எந்த கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது? கும்பமேளாவில் பிஎஸ்என்எல் கொடுக்கும் சேவைகள் எப்படி? உள்ளிட்ட முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் நிறுவனம் உள்நாட்டு தொழில்நுட்பத்தின் மூலம் 4ஜி சேவையை கொடுத்து வருகிறது. ஏற்கனவே, பல்வேறு மாநிலங்களில் 4ஜி சேவையை தொடங்கிவிட்டது. அடுத்த சில மாதங்களில் நாடு முழுவதும் இந்த சேவைகள் கிடைக்க இருப்பதால், சிம் கார்டு விற்பனை அதிகரித்து இருக்கிறது. இதனிடையே பிஎஸ்என்எல் நிறுவனமும் பல்வேறு திட்டங்களை செய்துவருகிறது.

அதன்படி, கோடிக்கணக்கான பக்தர்கள் கூடும் மகா கும்பமேளா நிகழ்வில் இலவச சிம் கார்டுகளை கொடுப்பது மட்டுமல்லாமல், அங்கு வரும் பக்தர்களுக்கு தடையில்லா சேவையை உறுதி செய்து வருகிறது. இப்போது, பிரயாக்ராஜின் பல்வேறு பகுதிகளில் வாடிக்கையாளர் சேவை மையங்களை அமைத்துள்ளது. இந்த மையங்கள் மூலம் இலவச சிம் கார்டுகள் வழங்கப்பட்டுவருகின்றன.
அதேபோல ரீசார்ஜ்களும் செய்யப்படுகின்றன. இந்த மையங்களில் பக்தர்கள் இலவ சிம் கார்டுகளை வாங்கி கொள்ளலாம். பல்வேறு மாநிலத்தில் இருந்து பக்தர்கள் வருவார்களே, அவர்களுக்கு எப்படி சிம் கார்டு வழங்க முடியும் என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால், பிஎஸ்என்எல் நிறுவனம் நாட்டின் எந்த சர்க்கிள்களில் இருந்து வந்தாலும் அந்தந்த சர்கிள்களிலேயே சிம் கார்டுகளை கொடுக்கிறது.
ஆகவே, நேரடியாக அந்த சர்க்கிளில் இருந்தே உங்களுக்கு இணைப்பு வழங்கப்படுகிறது. பக்தர்கள் மட்டுமல்லாமல், பல லட்ச கணக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் பாதுகாப்பு படையினருக்கும் இந்த பிஎஸ்என்எல் சேவைகள் பக்க பலமாக இருக்கின்றன. அதேபோல கோடிக்கணக்கான பக்தர்கள் கூடும் இடத்தில் யாரேனும் சிம் கார்டுகளை தொலைத்தாலும், அவர்களுக்கும் சேவை இருக்கிறது.
இவர்களுக்கு சிம் கார்டுகள் வழங்கப்படுகிறது. இதுபோக பிரயாக்ராஜின் லால் சாலை செக்டார்-2 பகுதியில் முகாம் அலுவலகத்தை பிஎஸ்என்எல் அமைத்துள்ளது. மேலும், கும்பமேளா பகுதியில் 90 பிடிஎஸ் டவர்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் வை-பை ஹாட்ஸ்பாட்கள், அதிவேக இன்டர்நெட், பல்க் எஸ்எம்எஸ் சேவை, வாய்ஸ் கால்கள், எம்2எம் சிம் கார்டு சேவைகள் தடையில்லாமல் கிடைக்கின்றன.
இதுபோக பாதுகாப்பு படையினருக்காக சாட்டிலைட் போன்கள் சேவையும் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கோடிக்கணக்கான பக்தர்கள், லட்சக்கணக்கான பாதுகாப்பு படையினர், பல்லாயிர கணக்கான தொண்டு நிறுவனத்தினரை எளிதாக தொடர்பில் இருக்கும்படி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், கஸ்டமர்கள் தடையில்லாமல், நாடு முழுவதும் இணைப்பில் இருக்கலாம்.
பிஎஸ்என்எல் போலவே ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்களுக்கும் அந்த பகுதிகளில் முகாம்கள் மற்றும் தடையில்லா சேவையை உறுதி செய்வதற்காக தற்காலிக டவர்கள் போன்றவற்றை செய்துள்ளது. இதனால், டெலிகாம் கஸ்டமர்கள் எந்தவொரு இடையூறும் இல்லாமல் தங்களது சேவைகளை பெற்று கொள்ளலாம்.
உத்தர பிரதே மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடந்துவருகிறது. 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த புனித நிகழ்வில் கோடிக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். பிப்ரவரி 26ஆம் தேதி வரையில் இந்த கும்பமேளா நடக்கிறது. கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தில் பக்தர்கள் நீராடுவது இதில் சிறப்பாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications