கேபிள் TV கதையை முடித்துவிட்ட BSNL.. இலவசமாக 500+ சேனல்.. இந்திய மக்களுக்காக புதுசா 3 சேவை.. நோட் பண்ணுங்க..
பிஎஸ்என்எல் (BSNL) என்று மக்களால் அழைக்கப்படும் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) தற்போது இந்தியாவில் மூன்று புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. பிஎஸ்என்எல் இன்ட்ராநெட் டிவி (BSNL Intranet TV - BiTV), நேஷனல் Wi-Fi ரோமிங் (National Wi-Fi Roaming Facility), இன்ட்ராநெட் ஃபைபர் அடிப்படையிலான டிவி (BSNL Intranet Fibre-based TV - IFTV) ஆகிய மூன்று சேவைகளை மில்லியன் கணக்கான இந்தியர்களுக்கு வழங்க தயாராகிவிட்டதாக BSNL அறிவித்துள்ளது. இந்த சேவைகளை எப்படி பெறுவதென்று பார்க்கலாம்.
இந்த மூன்று முக்கியமான சேவைகளை புதுச்சேரியில் (Puducherry) இருந்து தொடங்கி பிஎஸ்என்எல் நிறுவனம் இந்தியாவில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் பெரிய மாற்றத்தை தொலைத்தொடர்பு துறையில் (telecom industries) கொண்டுவந்துள்ளது. இந்தியர்களுக்கான இணைப்பு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை தொலைத்தொடர்பு சேவையின் மூலம் மேம்படுத்த, இந்த மூன்று புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக BSNL அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் இந்த சேவைகளை பைலட்டாக (pilot) அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேபிள் TV கதையை முடித்துவிட்ட BSNL.. இலவசமாக 500+ சேனல்:
1. பிஎஸ்என்எல் இன்ட்ராநெட் டிவி (BSNL Intranet TV - BiTV):
BSNL நிறுவனம் அதன் முதல் இன்ட்ராநெட் டிவி (BiTV) சேவையை அறிமுகப்படுத்துகிறது. புதுச்சேரியில் உள்ள மொபைல் பயனர்களுக்கு இப்போது, 300-க்கும் மேற்பட்ட நேரடி டிவி சேனல்கள் (TV channel), மூவீஸ் (Movies), வெப் சீரிஸ் (Web series) மற்றும் டாக்குமெண்டரி (Documentries) போன்ற சேவைகளை கட்டணமின்றி முற்றிலும் இலவசமாக வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆம் மக்களே, 300-க்கும் மேற்பட்ட டிவி சேனல்களை இப்போது BSNL இலவசமாக வழங்குகிறது.
ஓடிடி பிளே (OTTplay) உடன் இணைந்து வழங்கப்படும் இந்தச் சேவையானது, தடையற்ற ஸ்ட்ரீமிங்கிற்காக BSNL இன் மொபைல் இன்ட்ராநெட்டைப் பயன்படுத்துகிறது. 2025 ஜனவரியில் உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கும் BiTV சேவை விரிவுபடுத்தப்படும் என்றும், விரைவில் இந்த சேவை இந்தியா முழுக்க பயன்படுத்த கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் பழைய PRBT அமைப்புகளை இந்த தீர்வுடன் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் நவீன பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்க துவங்கியுள்ளது.
2. பிஎஸ்என்எல் நேஷனல் வைஃபை ரோமிங் வசதி (BSNL National Wi-Fi Roaming Facility):
BSNL தனது நேஷனல் வைஃபை ரோமிங் வசதியை அக்டோபர் 2024 இல் அறிமுகப்படுத்தியுள்ளது. மனதிப்பட்டு கிராமத்தில் (Manadipattu village) தொடங்கி, பிற கிராமப்புறங்களுக்கு இந்த சேவை விரிவுபடுத்தப்படுகிறது. இந்தச் சேவை தொடங்கப்பட்டதன் மூலம், இந்த கிராமம் முழுமையாக வைஃபை (Wi-Fi) வசதியைப் பெற்ற இந்தியாவின் இரண்டாவது இடமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சேவையானது BSNL மற்றும் BSNL அல்லாத வாடிக்கையாளர்களை நாடு முழுவதும் உள்ள Wi-Fi ஹாட்ஸ்பாட்களின் நெட்வொர்க் மூலம் அதிவேக இணையத்தை அணுக அனுமதிக்கிறது. BSNL FTTH மற்றும் மொபைல் பயனர்கள் தங்களின் தற்போதைய திட்டங்கள் மூலம் எளிதாக இத்துடன் இணைக்க முடியும், அதே நேரத்தில் BSNL அல்லாத வாடிக்கையாளர்கள் UPI வழியாக பணம் செலுத்தலாம்.
3. இன்ட்ராநெட் ஃபைபர் அடிப்படையிலான டிவி (Intranet Fibre-based TV - IFTV):
BSNL இன் IFTV சேவை, 2024 அக்டோபரில் முதன்முதலில் நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. இப்போது புதுச்சேரியில் உள்ள அனைத்து BSNL FTTH வாடிக்கையாளர்களுக்கும் இந்த சேவை பயன்படுத்த கிடைக்கிறது. இந்தச் சேவையானது 500-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களை வழங்குகிறது. இந்த் 500-க்கும் மேற்பட்ட சேனல்களும் இலவசமாக கிடைக்கிறது. அனைத்து BSNL FTTH வாடிக்கையாளர்களும் இந்த சேவையை இலவசமாகப் பெற முடியும்," என்று BSNL கூறியது.


Click it and Unblock the Notifications








