Home
News

தினசரி 2ஜிபி டேட்டா தரும் பிஎஸ்என்எல் ரூ.249 திட்டம் அறிமுகம்.! வேலிடிட்டி எத்தனை நாள் தெரியுமா?

பிஎஸ்என்எல் நிறுவனம் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு போட்டியாக தொடர்ந்து புதிய சலுகைகள் மற்றும் புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக மலிவு விலையில் அசத்தலான திட்டங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம்.

 எஃப்ஆர்சி ரூ.249 திட்டம்

எஃப்ஆர்சி ரூ.249 திட்டம்

இந்நிலையில் எஃப்ஆர்சி ரூ.249 திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். இந்த திட்டம் பயனர்களுக்கு தினசரி 2ஜிபி
டேட்டா,வரம்பற்ற குரல் அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின்திட்டத்தின் வேலிடிட்டி 60 நாட்கள் ஆகும். எனவே பிஎஸ்என்எல் பயனர்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்வது மிகவும் நல்லது.

மார்ச் 31, 2021 வரை மட்டுமே

மார்ச் 31, 2021 வரை மட்டுமே

அதேபோல் இந்த புதிய திட்டம் ஆனது மார்ச் 31, 2021 வரை மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இதுபோன்ற அதிக டேட்டா நன்மையை தரும் திட்டங்களை அறிமுகம் செய்தால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள் எனபிஎஸ்என்எல் நினைக்கிறது.

ள் வழங்கும்

அண்மையில் இதுபோன்ற பல்வேறு மலிவு விலை திட்டங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் திட்டங்களில் மற்ற டெலிகாம் நிறுவனங்கள் வழங்கும் OTT நன்மையை வழங்கவில்லை என்றாலும் கூட, இது போன்ற அசத்தலான டேட்டா மற்றும் வாய்ஸ் கால் சலுகைகளை வழங்கி வருகிறது.

 7 மில்லியன் பிராட்பேண்ட் பயனர்கள்

7 மில்லியன் பிராட்பேண்ட் பயனர்கள்

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் சிறந்த பிராட்பேண்ட் சேவையை வழங்கி வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் இந்தியாவில் 7 மில்லியன் பிராட்பேண்ட் பயனர்களை கொண்டுள்ளது. இதில் ஃபைபர் பயனர்கள் 1 மில்லியன் மட்டுமே ஆவார்கள். மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம்
கடந்த வாரம் அறிமுகம் செய்த புதியபிராட்பேண்ட் திட்டங்களை பற்றி பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.299 டிஎஸ்எல் பிராட்பேண்ட் நன்மைகள்

பிஎஸ்என்எல் ரூ.299 டிஎஸ்எல் பிராட்பேண்ட் நன்மைகள்

பிஎஸ்என்எல் ரூ.299 டிஎஸ்எல் பிராட்பேண்ட் திட்டமானது 100ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த டேட்டா நன்மையை 10Mbps வேகத்தில் பயன்படுத்த முடியும். பின்பு 100ஜிபி தீர்ந்ததும் டேட்டா வேகம் 2Mbps ஆக குறைக்கப்படும். குறிப்பாக இந்த திட்டம் ஆறு மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் பயனர்கள் ரூ.399 திட்டத்திற்கு மாற்றப்படுவர். அதேபோல் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை தவிர அனைத்து வட்டங்களிலும் இந்த திட்டம் கிடைக்கும்.

பிஎஸ்என்எல் ரூ.399 டிஎஸ்எல் பிராட்பேண்ட் நன்மைகள்

பிஎஸ்என்எல் ரூ.399 டிஎஸ்எல் பிராட்பேண்ட் நன்மைகள்

பிஎஸ்என்எல் ரூ.399 டிஎஸ்எல் பிராட்பேண்ட் திட்டமானது 200ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த டேட்டா நன்மையை
10Mbps வேகத்தில் பயன்படுத்த முடியும். பின்பு 200ஜிபி தீர்ந்ததும் டேட்டா வேகம் 2Mbps ஆக குறைக்கப்படும்.

பிஎஸ்என்எல் ரூ.599 டிஎஸ்எல் பிராட்பேண்ட் நன்மைகள்

பிஎஸ்என்எல் ரூ.599 டிஎஸ்எல் பிராட்பேண்ட் நன்மைகள்

பிஎஸ்என்எல் ரூ.555 டிஎஸ்எல் பிராட்பேண்ட் திட்டமானது 500ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த டேட்டா நன்மையை 10Mbps வேகத்தில் பயன்படுத்த முடியும். பின்பு 500ஜிபி தீர்ந்ததும் டேட்டா வேகம் 2Mbps ஆக குறைக்கப்படும்.

ன்று பிராட்பேண்ட் திட்டங்களும் இந்தியாவுக்குள்

மேலே கூறப்பட்டுள்ள இந்த மூன்று பிராட்பேண்ட் திட்டங்களும் இந்தியாவுக்குள் உள்ள எந்தவொரு நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற குரல்அழைப்பை வழங்குகின்றன. பின்பு ரூ. 299 மற்றும் ரூ. 399 பிராட்பேண்ட் திட்டங்களுக்கு ரூ.500 பாதுகாப்பு முன்பணம் செலுத்த வேண்டும்.அதேபோல் ரூ.299 மற்றும் ரூ.555 பிராட்பேண்ட் திட்டங்களை தற்போதைய மற்றும் புதிய பயனர்கள் பயன்படுத்த முடியும் என்பதுகுறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
BSNL FRC 249 Plan Launced: 60 Days Validity: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X