Home
News

இந்த 4 திட்டங்கள் போதும்.. தினமும் 3ஜிபி டேட்டா, வாய்ஸ் கால்கள்.. அள்ளி வழங்கும் BSNL.. மிஸ் பண்ணாதீங்க..

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியது முதல் பல வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் சிம் வாங்கி மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்து வருகின்றனர். அதுவும் பிஎஸ்என்எல் நிறுவனம் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தாமல் இப்போது கூட மலிவு விலையில் திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது.

சரி இப்போது விஷயத்துக்கு வரும் பிஎஸ்என்எல் நிறுவனம் கம்மி விலையில் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. இப்போது அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

இந்த 4 திட்டங்கள் போதும்.. அள்ளி வழங்கும் BSNL.. மிஸ் பண்ணாதீங்க..

பிஎஸ்என்எல்ரூ. 199 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 199 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 60ஜிபி டேட்டா நன்மை உள்ளது. மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை இதில் உள்ளது

குறிப்பாக தினமும் இலவசமாக 100 எஸ்எம்எஸ் (SMS) நன்மையை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர ஹார்டி கேம்ஸ் (Hardy Games), அரினா கேம்ஸ் (Arena Games), கேம் ஆன் ஆஸ்ட்ரோடெல் (Gameon Astrotell), கேமியம் (Gameium), லிஸ்டன் பாட்காஸ்ட் (Lystn Podocast), ஜிங்க் மியூசிக் (Zing Music) மற்றும் வாவ் என்டேர்டைன்மெண்ட் (WOW Entertainment) போன்ற சலுகைகள் இதில் கிடைக்கும்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 249 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 45 நாட்கள் ஆகும். எனவே பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை இதில் உள்ளது. இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது இந்த திட்டம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் (BSNL rs 299 prepaid plan) தினசரி 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். எனவே பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தை பயன்படுத்த முடியும்.

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை வழங்குகிறது. அதேபோல் தினமும் 100எஸ்எம்எஸ் இதில் கிடைக்கும். ஆனால் பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஒடிடி நன்மைகள் எதுவும் வழங்கப்படவில்லை.

இந்த 4 திட்டங்கள் போதும்.. அள்ளி வழங்கும் BSNL.. மிஸ் பண்ணாதீங்க..

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL rs 599 prepaid plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை வழங்குகிறது இந்த திட்டம்.

மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் , ஜிங்க் (Zing), பிஆர்பிடி (PRBT) மற்றும் ஆஸ்ட்ரோடெல் (Astrotell), வாவ் என்டேர்டைன்மெண்ட் (WOW Entertainment) உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Four Prepaid plans that offer more offers at affordable rates: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X