இந்த 4 BSNL திட்டங்களை மிஸ் பண்ணாதீங்க.. தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. அன்லிமிடெட் சலுகைகள்..
தனியார் டெலிகாம் நிறுவனங்களை விட கம்மி விலையில் அதிக நன்மைகளைத் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். அதேபோல் இந்நிறுவனம் நாட்டில் சில முக்கிய இடங்களில் 4ஜி சேவையை வழங்கி உள்ளது. விரைவில் பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் கடந்த சில மாதங்களில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அதிக வாடிக்கையாளர்கள் இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது குறைந்த விலையில் அதிக நன்மைகளைத் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இப்போது அந்த திட்டங்களின் பட்டியலைப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 249 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா நன்மை வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 45 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 299 Prepaid Plan) தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். இதுதவிர பல அசத்தலான சலுகைகள் இதில் கிடைக்கும்.
அதன்படி பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை வழங்குகிறது. மேலும் தினமும் 100எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.
பிஎஸ்என்எல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தில் (bsnl rs 499 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 75 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 150ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு சிறப்பான நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் மற்றும் கேமிங் சேவைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL rs 599 prepaid plan) தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். பின்பு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை வழங்குகிறது இந்த திட்டம்.
இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ் , ஜிங்க் (Zing), பிஆர்பிடி (PRBT) மற்றும் ஆஸ்ட்ரோடெல் (Astrotell), வாவ் என்டேர்டைன்மெண்ட் (WOW Entertainment) உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக அதிக டேட்டா நன்மையை இந்த திட்டம் வழங்குவதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








