ஜூலை 27 கடைசி.. BSNL ஸ்பெஷல் ரீசார்ஜ்.. ரூ.1 க்கு 1 GB.. ரூ.400 க்கு 400GB டேட்டா.. 40 நாட்கள் வேலிடிட்டி!
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் அதன் குவாண்டம் 5ஜியின் (Quantum 5G) கீழ் .. நாடு முழுவதும் வணிக ரீதியான 5ஜி சேவைகளை விரைவில் தொடங்க தயாராகி வருகிறது. இதற்காக அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த டெலிகாம் நிறுவனம் ஆனது போதுமான அளவு டவர்களை நிறுவுவதன் மூலம், அமைப்பதன் மூலம் தனது நெட்வொர்க் திறனையும் அதிகரித்து வருகிறது.
இதற்கிடையில் 90,000 டவர்கள் செயல்படுத்தப்பட்டது என்கிற மைல்கல்லை கொண்டாடும் வகையில், பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு வரையறுக்கப்பட்ட கால விளம்பர சலுகையை அறிவித்து இருந்தது. இது "பிஎஸ்என்எல் ஃபிளாஷ் சேல்" என்று அழைக்கப்படுகிறது. இதன் கீழ் 1ஜிபி டேட்டா ரூ.1 க்கு அணுக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதாவது பிஎஸ்என்எல் ஃபிளாஷ் சேல்-ன் கீழ் ஒரு ஸ்பெஷல் திட்டம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்றும், அதன் விலை ரூ.400 என்றும், 40நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டத்தின் கீழ் 400ஜிபி அளவிலான ஹை-ஸ்பீட் 4ஜி டேட்டா கிடைக்கும் என்றும்.. அதாவது ரூ.1 க்கு 1ஜிபி டேட்டா என்கிற கணக்கின் கீழ் 400 ஜிபி கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த ஸ்பெஷல் திட்டம் ஆனது ஜூலை 27 ஆம் தேதி வரை மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக ரூ.400 க்கு 400ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் முந்திக்கொள்ளவும். இது ஒரு டேட்டா ரீசார்ஜ் என்பதால், பயனர்கள் ஏற்கனவே உள்ள திட்டத்துடன் இணைந்து தான் இதைரீசார்ஜ் செய்ய முடியும்.
மேலும் ரூ.400 திட்டத்தின் கீழ் வெறும் டேட்டா நன்மை மட்டுமே கிடைக்கும். அதாவது இது வாய்ஸ் காலிங் அல்லது எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்காது என்று அர்த்தம். இருப்பினும் ரூ.400 திட்டத்தின் கீழ் கிடைக்கும் 400ஜிபி டேட்டாவை 40 நாட்களுக்கு முன்பே நீங்கள் பயன்படுத்தி விட்டீர்கள் என்றால்.. 400ஜிபிக்கு பிறகு, இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 40கேபிபிஸ் ஆககுறைக்கப்படும். அதாவது இது அன்லிமிடெட் டேட்டாவை வழங்கும் திட்டமாகவே இருக்கும்.
நினைவூட்டும் வண்ணம் கடந்த ஜூன் மாதத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது சமூக ஊடக பக்கம் வழியாக தனது 5ஜி சேவையின் பெயரை (BSNL 5G Service Name) அறிவித்து இருந்தது. பிஎஸ்என்எல் நிறுவனம் இதை க்யூ-5ஜி (Q-5G) என அழைக்கிறது. இது குவாண்டம் 5ஜி (Quantum 5G) என்பதன் சுருக்கமாகும். இதை விளம்பரப்படுத்தும் நோக்கத்தின் கீழ் தான் இந்த பிளாஷ் சேல் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் தொடர்பான மற்ற சமீபத்திய அப்டேட்களை பொறுத்தவரை, இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் தங்கள் பிராட்பேண்ட் திட்டங்களை அப்கிரேட் செய்ய வழிவகுக்கும் வாட்ஸ்அப் செயல்முறையை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இனிமேல் நீங்கள் ஒரு ஆப்பை திறக்கவோ அல்லது வலைத்தளத்தில் லாக்-இன் செய்யவோ தேவையில்லை.மாறாக ஒரு எளிய "ஹாய்" (Hi) என்கிற மெசேஜை அனுப்பினால் போதும்.
இது எவ்வாறு செயல்படும்? நீங்கள் ஒரு பிஎஸ்என்எல் எப்டிடிஎச் (BSNL FTTH - ஃபைபர் பிராட்பேண்ட்) அல்லது லேண்ட்லைன் பயனராக இருந்தால், வாட்ஸ்அப் வழியாக 1800-4444 என்கிற எண்ணுக்கு மெசேஜ் அனுப்புவதன் மூலம் உங்கள் திட்டத்தை அப்கிரேட் செய்யலாம். அதாவது உங்கள் திட்டத்தை மாற்றலாம். இதை உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
நீங்கள் "ஹாய்" என்று மெசேஜ் அனுப்பியவுடன், படிப்படியான விருப்பங்களுடன் ஒரு மெனுவை காண்பீர்கள். நீங்கள் செய்ய வேண்டியது: எப்டிடிஎச் / லேண்ட்லைனை கிளிக் செய்யவும். பின்னர் "பிளான் அப்கிரேட்" என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும், அதனை தொடர்ந்து உங்கள் புதிய திட்டத்தைத் தேர்வு செய்யவும். கடைசியாக "டன்" என்பதை கிளிக் செய்யவும். அவ்வளவுதான் - புதிய திட்டம் புதுப்பிக்கப்படும்!


Click it and Unblock the Notifications








