கஸ்டமர்களை கையில் பிடிக்க முடியல.. BSNL Flash Sale.. இலவச டேட்டா, பிராட்பேண்ட் திட்டங்களில் டிஸ்கவுண்ட்!
பிஎஸ்என்எல் (BSNL) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) ஆனது கூடிய விரைவில் ஒரு ஃபிளாஷ் விற்பனையை (BSNL Flash Sale) நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல், தனது சோஷியல் மீடியா அக்கவுண்ட் மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது
மேலும் பிஎஸ்என்எல் பிளாஷ் சேலின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கும் என்றும் 'டீஸ்' செய்துள்ளது. பிஎஸ்என்எல்-ன் படி, இந்த ஃபிளாஷ் விற்பனையில் இலவச டேட்டா (Free Data), பிராட்பேண்ட் சலுகைகள் (Broadband Offers) அல்லது தள்ளுபடிகள் (Discounts) வழங்கப்படும்.

பிஎஸ்என்எல்-ன் இந்த பிளாஷ் விற்பனை ஆனது - இந்தியாவில் பிஎஸ்என்எல் இன் 5ஜி சேவை (BSNL Q-5G) குறித்த சமீபத்திய அறிவிப்பு மற்றும் போஸ்ட்பெய்டு மற்றும் ப்ரீபெய்டு சிம் கார்டுகளை வீட்டு வாசலுக்கே வந்து டெலிவரி செய்யும் சேவையின் தொடக்கம் ஆகியவைகளை தொடர்ந்து வெளியாகி உள்ளது. ஒருவேளை இந்த விற்பனை மேற்கண்ட சேவைகளின் அடிப்படையில் கூட திட்டமிடப்பட்டு இருக்கலாம்.
பிஎஸ்என்எல் ஃபிளாஷ் சேல் விவரங்கள் (BSNL Flash Sale Details): எக்ஸ் தளம் வழியாக பிஎஸ்என்எல் நிறுவனம் பதிவிட்டுள்ள, அதன் ஃபிளாஷ் விற்பனை குறித்த ஒரு வீடியோ கிளிப் ஆனது, "பெரிதாக ஒன்று வரப்போகிறது! எதிர்பாராததை அனுபவிக்க நீங்கள் தயாரா?" என்று கூறுகிறது, இருப்பினும் இந்த ஃபிளாஷ் விற்பனையின் தேதி இன்னும் மறைக்கப்பட்டுள்ளது; இது "விரைவில் வருகிறது" என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விற்பனையின் போது பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு இலவச டேட்டா, பிராட்பேண்ட் சலுகைகள் அல்லது ரீசார்ஜ் திட்டங்களில் பெரிய தள்ளுபடிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய தொலைத்தொடர்புத் துறையில், பிஎஸ்என்எல் தனது சந்தாதாரர்களின் எண்ணிக்கையை இழந்து வரும் நிலையில் இந்த ஃபிளாஷ் சேல் வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது
டிராய் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட சமீபத்திய தொலைத்தொடர்பு சந்தா தரவின்படி, பிஎஸ்என்எல் நிறுவனம் ஆனது கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 0.2 மில்லியன் சந்தாதாரர்களை இழந்துள்ளது. மேலும், அதே காலகட்டத்தில் 1.8 மில்லியன் ஆக்டிவ் யூசர்களின் வீழ்ச்சியும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மிகவும் சமீபத்தில் தான் (ஜூன் 19) பிஎஸ்என்எல் தனது 5ஜி சேவையின் பெயரை (BSNL 5G Service Name) அறிவித்து இருந்தது. பிஎஸ்என்எல் நிறுவனம் இதை க்யூ-5ஜி (Q-5G) என அழைக்கிறது. இது குவாண்டம் 5ஜி (Quantum 5G) என்பதன் சுருக்கமாகும்.
இது குறித்த எக்ஸ் தள பதிவில், இந்தப் பெயர் குடிமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மற்றும் இது பிஎஸ்என்எல் இன் 5ஜி நெட்வொர்க்கின் சக்தி, வேகம் மற்றும் எதிர்காலத்தை பிரதிபலிக்கிறது என்றும் பிஎஸ்என்எல் கூறியுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன/
மேலும், பிஎஸ்என்எல் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் க்யூ-5ஜி ஸ்டேபிள் வயர்லெஸ் அணுகல் (FWA) சேவையையும் அறிமுகப்படுத்தியுள்ளது, இது "அதிக வேகமான" நெட்வொர்க் ஸ்பீட் மற்றும் சிம் இல்லாத செயல்பாட்டை உறுதியளிக்கிறது. குவாண்டம் 5ஜி எப்டபுள்யூஏ சேவையானது வணிகங்கள் மற்றும் நிறுவனங்களை இலக்காகக் கொண்ட ஒரு இன்டர்நெட் லீஸ் லைன் ஆக இருக்கும். இது சிம் அல்லது வயர்கள் தேவையில்லாத முதல் 5ஜி எப்டபுள்யூஏ என்று பிஎஸ்என்எல் நிறுவனம் கூறுகிறது.
இந்த சேவை "உள்நாட்டில் உருவாக்கப்பட்ட" தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கூற்றுப்படி, குவாண்டம் 5ஜி எப்டபுள்யூஏ ஆனது "வாய்ஸ் இல்லாமல் அதிவேக டேட்டாவை மட்டுமே" செயல்படுத்தும் மற்றும் இந்தியாவில் பிஎஸ்என்எல் குவாண்டம் 5ஜி எப்டபுள்யூஏ-வின் விலைகள் மாதத்திற்கு ரூ.999 முதல் தொடங்கும்.


Click it and Unblock the Notifications