1 ரூபாய் 33 பைசாவிற்கு 1ஜிபி; மிரட்டலான ஆபரை அறிவித்தது பிஎஸ்என்எல்.!

ரஷ்யாவில் நடக்கும் பிபா உலக கோப்பை கால்பந்து திருவிழாவை இன்னும் சிறப்பிக்கும் வண்ணம், அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமானது ஒரு புதிய எஸ்டிவி பிளானை அறிவித்துள்ளது.

|

ரஷ்யாவில் நடக்கும் பிபா உலக கோப்பை கால்பந்து திருவிழாவை இன்னும் சிறப்பிக்கும் வண்ணம், அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமானது ஒரு புதிய எஸ்டிவி பிளானை அறிவித்துள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த புதிய திட்டமானது ஜூன் 14 முதல் ஜூலை 15 வரை செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது பிபா உலகக் கோப்பை கொண்டாட்டம் நடக்கும் முழு காலத்திற்கும் செல்லுபடியாகும். இதன் விலை நிர்ணயம் என்ன.? நன்மைகள் என்ன.? என்பதை பற்றி விரிவாக காண்போம்.

மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.!

மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.!

ரூ.149/-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் இந்த பிபா உலக கோப்பை டேட்டா திட்டமானது தினமும் 4ஜிபி அளவிலான டேட்டா நன்மையை வழங்கும். மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 112 ஜிபி அளவிலான டேட்டா அணுக கிடைக்கும்.

அனைத்து பிஎஸ்என்எல் வட்டாரங்களிலும்.!

அனைத்து பிஎஸ்என்எல் வட்டாரங்களிலும்.!

இதுவொரு பிபா விளம்பர திட்டம் என்பதை மீண்டும் நினைவுறுத்தி விரும்புகிறோம். மற்றொரு கவனிக்க வேண்டிய விஷயம் - இது மும்பை மற்றும் தில்லி வட்டாரத்திற்கு செல்லுபடியாகாது. இந்த இரண்டு வட்டங்களை தவிர்த்து, இதர நாடு முழுவதும் உள்ள அனைத்து பிஎஸ்என்எல் வட்டாரங்களிலும் இந்தத் திட்டம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்.

ஒரு பாணியாக உருமாறியுள்ளது..!

ஒரு பாணியாக உருமாறியுள்ளது..!

இந்த திட்டத்துடன் பிஎஸ்என்எல்-ன் எந்த விதமான குரல் அழைப்பு அல்லது எஸ்எம்எஸ் நன்மைகளும் கிடைக்காது. இதுவோரு டேட்டா நன்மையை மட்டும் வழங்கும் ஒரு பிளான் ஆகும். சமீப காலமாக ஒரு பெரிய விளையாட்டு நிகழ்வின் போது இதுபோன்றே டேட்டா-ஒன்லி திட்டங்களை அறிமுகம் செய்வது இந்திய டெலிகாம் துறையில் ஒரு பாணியாக உருமாறியுள்ளது.

51 நாட்களுக்கு செல்லுபடியாகும்.!

51 நாட்களுக்கு செல்லுபடியாகும்.!

கடந்த ஏப்ரல் மாதத்தில், அரசு நடத்தும் இந்த டெலிகாம் நிறுவனம் ரூ.248/- என்ற ஒரு கட்டணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அது ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவை 51 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்கியது. இப்போது பிபா கோப்பைக்கான ரூ.149/- ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

ப்ரீபெய்ட் பயனர்கள்.!

ப்ரீபெய்ட் பயனர்கள்.!

துரதிருஷ்டவசமாக, பிஎஸ்என்எல் தன்னுடைய ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்காக மட்டுமே இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. விருப்பமுள்ள ப்ரீபெய்ட் பயனர்கள் பிஎஸ்என்எல் போர்ட்டில் அல்லது பிற ரீசார்ஜ் போர்ட்டல்களில் நாளை முதல் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். மேலும் பல தொலைத்தொடர்பு அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்தின் டெலிகாம் பிரிவின் கீழ் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
BSNL FIFA Season STV Plan Offers 112GB Data for 28 Days Under Rs 150. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X