BSNL அல்ட்ரா அறிவிப்பு.. 6500GB டேட்டா.. யாரும் தரமுடியாத கம்மி விலையில்.. Jio, Airtel, Vi-லாம் மிரண்டுடுச்சு!
இந்திய அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) இந்தியாவில் உள்ள அனைவரையும் ஒரே ஒரு புதிய திட்டத்தின் மூலம் வாய்பிளக்க வைத்துள்ளது. ஒட்டுமொத்த இந்திய மக்கள் மட்டுமின்றி, இந்தியாவில் தலைசிறந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் தனியார் டெலிகாம் நிறுவனங்களான ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற நிறுவனங்களையும் அதன் புதிய பிஎஸ்என்எல் அல்ட்ரா (BSNL Ultra) திட்டத்தின் மூலம் மிரளவைத்துள்ளது. காரணம், பிஎஸ்என்எல்-ன் புதிய திட்டம் 6500GB டேட்டாவை வழங்குகிறது. இதுபற்றிய கூடுதல் விபரம் இதோ.
இதற்கு முன்பு, இந்தியாவில் உள்ள எந்தவொரு தொலைத்தொடர்பு நிறுவனமும் இத்தகைய திட்டத்தை அறிமுகம் செய்ததில்லை என்றே கூட நாம் தைரியமாக கூறலாம். பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் இந்திய மக்களை தன் வசம் ஈர்ப்பதற்கான வேலைகளை 200% சரியாக செய்து வருகிறது. ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பைட் பயனர்களை கவர்ந்த பிஎஸ்என்எல் இப்போது வைஃபை பயனர்களை கவர துவங்கியுள்ளது.

அசத்திடீங்க BSNL.. ஒரே பிளானில் 6500GB டேட்டா நன்மை.. Jio, Airtel, Vi-லாம் மிரண்டுடுச்சு:
மலிவு விலையில் இப்போது பிஎஸ்என்எல் நிறுவனம் நம்ப முடியாத பல பிராட்பேண்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த பிராட்பேண்ட் திட்டங்கள் 25 Mbps வேகம் முதல் 300 Mbps வேகம் வரையிலான ஹை-ஸ்பீட் டேட்டாவை இப்போது நாட்டில் வழங்க துவங்கியுள்ளது. இந்த திட்டங்களில், பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது மிக உயர்ந்த பிரீமியம் பிராட்பேண்ட் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
BSNL-ன் பிரீமியம் பிராட்பேண்ட் திட்டம்:
பிரீமியம் என்ற வார்த்தைக்கு ஏற்ற நன்மைகளை இந்த திட்டம் கண்மூடித்தனமாக வாரி வழங்குகிறது. இந்த திட்டம் ஒரு மாதத்திற்கு 6.5TB டேட்டா நன்மையை வழங்குகிறது. இது நவீன இணைய பயனர்களின் உயர்ந்த டேட்டா தேவைகளை பூர்த்தி செய்கிறது. இந்த பிரீமியம் திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் பிஎஸ்என்எல் ஃபைபர் அல்ட்ரா ஓடிடி (BSNL Fibre Ultra OTT) என்ற பெயருடன் இப்போது வழங்கி வருகிறது.
பிஎஸ்என்எல் ஃபைபர் அல்ட்ரா ஓடிடி திட்டம் (BSNL Fibre Ultra OTT Plan):
இந்தத் திட்டம், 6500GB டேட்டா அல்லது 6.5TB டேட்டாவை வழங்குவது மட்டுமின்றி பல OTT நன்மைகளை உள்ளடக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிஎஸ்என்எல் ஃபைபர் அல்ட்ரா ஓடிடி திட்டம் (BSNL Fibre Ultra OTT Plan) ரூ. 1799 என்ற மாதாந்திர விலையில் வருகிறது. BSNL ஃபைபர் அல்ட்ரா OTT திட்டம் 300 Mbps வேகத்துடன் 6.5TB வரையிலான டேட்டா நன்மையை எந்தவித தடையுமின்றி வழங்குகிறது.
6500 GB டேட்டாவுடன் Disney+ Hotstar போன்ற ஏராளமான OTT சந்தா:
ஒருவேளை, 6500 GB டேட்டாவையும் ஒரு பயனர் 30 நாட்களுக்கும் பயன்படுத்தி தீர்த்துவிட்டால், நியாயமான பயன்பாட்டு கொள்கை (FUP) வரம்பை எட்டிய பிறகு, வேகம் 20 Mbps ஆக குறைக்கப்பட்டு அன்லிமிடெட் டேட்டா நன்மை வழங்கப்படும். இந்த திட்டத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), யூப் டிவி பேக் (YuppTV pack), சோனி லிவ் (SonyLIV), ஜீ 5 (ZEE5), லயன்ஸ் கேட் பிளே (Lionsgate Play),
பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் சேவை வாங்கினால் கிடைக்கும் இலவசங்கள்:
ஷேமாரு மீ (ShemarooMe) மற்றும் எபிக்கான் (EpicON) உள்ளிட்ட பல்வேறு ஓவர்-தி-டாப் (OTT) நன்மைகளை இந்த திட்டம் உங்களுக்கு வழங்குகிறது. BSNL வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் சேவைகளை (BSNL Bharat Fiber connections) எளிதாகப் பெற, ஆன்லைன் பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்தி, நிறுவல் கட்டணத்தை BSNL இப்போது ரத்து செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
3000GB டேட்டா திட்டமும் BSNL இடம் இருக்கிறதா?
மார்ச் 31, 2025 வரை வீடுகள் மற்றும் அலுவலகங்களில் BSNL பிராட்பேண்ட் இணைப்புகளை வாடிக்கையாளர்கள் இலவசமாக பெறலாம் என்று அறிவித்துள்ளது. இதேபோல், பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் மலிவு விலையில் 3000GB டேட்டா கிடைக்கும் திட்டங்கள் போன்ற பல திட்டங்களை வழங்குகிறது. கூடுதல் விபரங்கள் அல்லது சந்தேகங்களுக்கு பிஎஸ்என்எல்-ன் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தை பார்வையிடுங்கள்.


Click it and Unblock the Notifications








