OTT, வாய்ஸ் கால்ஸ், ஒவ்வொரு மாதமும் 6500GB டேட்டா வழங்கும் BSNL திட்டம்.. எந்த பிளான்.. என்ன விலை?
வீட்டில் இருந்து வேலை அல்லது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இணையத்தை அதிகமாக நம்பியிருப்பவர்களுக்கு, BSNL ஒரு புதிய சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது உங்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு மாதத்திற்கு 6500GB டேட்டா நன்மையை வழங்குகிறது. ஆம், அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited), இந்தியாவின் பல்வேறு வாடிக்கையாளர் தளத்தை குறிவைத்து, பரந்த அளவிலான பிராட்பேண்ட், போஸ்ட்பைட், ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. இப்போது OTT நன்மை, அன்லிமிடெட் அழைப்பி நன்மை மற்றும் 6.5TB டேட்டாவுடன் வரும் புதிய திட்டத்தை பற்றி அறிந்துகொள்வோம்.
இந்த புதிய திட்டத்தை பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் பிஎஸ்என்எல் பைபர் அல்ட்ரா ஓடிடி நியூ பிளான் (BSNL Fibre Ultra OTT New Plan) என்ற பெயரின் கீழ் அறிமுகம் செய்துள்ளது. இதுவொரு பிரீமியம் விருப்பமாகத் தனித்து நிற்கிறது. மாதந்தோறும் ரூ. 1,799 கட்டணத்துடன், பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் இருந்து வாங்க கிடைக்கும் விலை அதிகமான திட்டமாக இது உள்ளது. ஆனால் நல்ல காரணத்திற்காக.

OTT, வாய்ஸ் கால்ஸ், ஒவ்வொரு மாதமும் 6500GB டேட்டா வழங்கும் BSNL திட்டம்:
இந்தத் திட்டம் அதிக டேட்டா பயன்படுத்தும் வடிக்கையாளர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதன் முக்கிய நன்மைகளில் ஒன்று, அது வழங்கும் அதிக வேக இணையம், 300Mbps என்ற அதிவேகத்தில் டேட்டா நன்மை கிடைக்கிறது. இந்த திட்டத்தின் சந்தாதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 6500 ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. எளிமையாக சொன்னால், இந்த திட்டம் 6.5TB டேட்டாவை ஒவ்வொரு மாதமும் வழங்குகிறது.
பிஎஸ்என்எல் பைபர் அல்ட்ரா ஓடிடி நியூ பிளான் (BSNL Fibre Ultra OTT New Plan):
இந்த தாராளமான டேட்டா வரம்பு மீறப்பட்டால், சேவை நிறுத்தப்படாது. ஆனால் 20Mbps குறைந்த வேகத்தில் உங்களுக்கு அன்லிமிடெட் டேட்டா நன்மை கிடைக்குமென்று BSNL தெரிவித்துள்ளது. கூடுதலாக, BSNL இந்தத் திட்டத்தில் பல OTT நன்மைகளை இணைத்துள்ளது. அதன் சந்தாதாரர்களின் பொழுதுபோக்குத் தேவைகளை பூர்த்தி செய்கிறது. வாடிக்கையாளர்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), யூப் டிவி பேக் ( YuppTV Pack)
இலவச OTT நன்மைகள்:
இதில் சோனி லிவ் (Sony Liv) மற்றும் ஜீ5 (Zee5), லைன்ஸ் கேட் பிளே (Lionsgate Play), ஷெமரூ மீ (ShemarooMe) மற்றும் எபிக்கான் (EpicON) உள்ளிட்ட பிரபலமான OTT தளங்களின் தொகுப்புக்கு இலவசமாக கிடைக்கிறது. இந்த பரந்த அளவிலான பொழுதுபோக்கு விருப்பங்கள், சந்தாதாரர்களுக்கு எண்ணற்ற உள்ளடக்கங்களை வழங்குகிறது. இந்தத் திட்டம் டேட்டா மற்றும் OTT சந்தாவை தாண்டி, இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை வழங்குகிறது.
அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை:
இது உள்ளூர் மற்றும் STD அழைப்புகளையும் உள்ளடக்கியுள்ளது. கூடுதலாக, ஒரு இலவச ஸ்டாண்டர்ட் தொலைபேசி இணைப்பு வழங்கப்படுகிறது. தொடர்புகொள்வதற்கு ஒரு நிலையான இணைப்பை விரும்புவோர் அல்லது லேண்ட்லைன் கனெக்ஷன் தேவைப்படுபவர்களுக்கு இந்த தொகுப்பின் மதிப்பு லாபகரமானதாக இருக்கிறது. பிஎஸ்என்எல் வட்டத்தில் 300Mbps வேகத்துடன் இணைய சேவையை அனுபவிக்க விரும்புவோருக்கு, ஹெவி டேட்டா யுஸர்களுக்கும் இந்த திட்டம் ஒரு சிறந்த திட்டமாக அமைகிறது.


Click it and Unblock the Notifications








