கேபிள் TV கதையை முடித்த BSNL.. 600+ டிவி சேனல்கள்.. 2 OTT சந்தா.. ரூ.625 சில்வர் ஜூபிலி.. அன்லிமிடெட் டேட்டா!
கேபிள் டிவி, டிடிஎச் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சில்வர் ஜூபிலி திட்டத்துக்கு மாறும்படியான 600+ லைவ் டிவி சேனல்கள் கிடைக்கிறது. பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டத்தை பெறும் வாடிக்கையாளர்கள் பைசா செலவில்லாமல், இந்த டிவி சேனல்களை பெறலாம். தனி இணைப்பு தேவையில்லை
பிஎஸ்என்எல் நிறுவனம் ஐஃஎப்டிவி (IFTV) வழியாக லைவ் டிவி சேனல்களை கொடுத்து வருகிறது. இந்த இன்ட்ராநெட் ஃபைபர் டிவி (Intranet Fiber TV) சேவைக்கு தனியாக இணைப்பு தேவையில்லை. கூடுதல் கட்டணமும் தேவையில்லை. பிஎஸ்என்எல் ஃபைபர் டூ தி ஹோம் (Fibre to the Home) திட்டத்தை பெற்றுள்ள வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக கொடுக்கப்படுகிறது.

இந்த 600+ டிவி சேனல்களையும் டிடிஎச் போல டிஷ் இல்லாமலும், கேபிள் டிவியை போல தனியாக இணைப்பு இல்லாமலும் பெற்று கொள்ளலாம். நேரடியாக ஃபைபர் டூ தி ஹோம் வழியாக கொடுக்கப்படுவதால், எச்டி சேனல்களின் ஸ்ட்ரீமிங்கும் கிடைக்கும். மேலும், 127 பிரீமியம் டிவி சேனல்களும் இந்த ஃபைபர் டூ தி ஹோம் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் பெறலாம்.
பிஎஸ்என்எல் ஃபைபர் சில்வர் ஜூபிலி திட்டம் ரூ. 625 (BSNL Fibre Silver Jubilee Plan Rs 625): பிஎஸ்என்எல் வலைத்தளம் மற்றும் நிறுவனத்தின் ஆப் வழியாக இந்த திட்டத்தை பெறலாம். இதில் 600+ லைவ் டிவி சேனல்கள் மற்றும் 127 பிரீமியம் டிவி சேனல்கள் கிடைப்பது கூடுதல் சலுகைகளாகவே இருக்கிறது. முக்கிய சலுகையாக ஃபைபர் டேட்டா இருக்கிறது.
ஃபைபர் டூ தி ஹோம் இணைப்பு வழியாக 75 எம்பிபிஎஸ் வேகத்தில் பிராட்பேண்ட் டேட்டா கொடுக்கப்படும். இந்த வேகத்தில் ஒரு மாதத்துக்கு அதிகபட்ம் 2500 ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம். மேலும், 2500 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 4 எம்பிபிஎஸ் வேகத்துக்கு டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் டேட்டாவை (Unlimited Data) கொண்டுள்ளது.
அன்லிமிடெட் லோக்கல் & எஸ்டிடி கால்கள் (Unlimited Local & STD Calls) இந்த ஃபைபர் டூ தி ஹோம் திட்டத்தில் கிடைத்துள்ளது. 600+ லைவ் டிவி சேனல்கள் மற்றும் 127 பிரீமியம் டிவி சேனல்களுக்கு இணைய வசதி தேவையில்லை. ஆனால், இந்த திட்டத்தில் கிடைக்கும் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) மற்றும் சோனிலிவ் (SonyLIV) ஓடிடி ஆப்களுக்கு இணைய வசதி தேவைப்படும். மார்ச் 31 ஆம் தேதி வரையில் பெறலாம்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தை போலவே ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) நிறுவனங்களும் ஃபைபர் மற்றும் ஏர் ஃபைபர் திட்டங்களில் லைவ் டிவி சேனல்களை கொடுக்கின்றன. ஆனால், இந்த பிஎஸ்என்எல் சில்வர் ஜூபிலி திட்டத்தில் கிடைக்கும் சலுகைகள் அதிகமாக இருக்கின்றன. மேலும், ஜியோ மற்றும் ஏர்டெல்லில் ஆண்ட்ராய்டு பாக்ஸ் வழியாக டிவி சேனல்கள் கிடைக்கும்.
பிஎஸ்என்எல்லில் ஃபைபர் இணைப்பு வழியாகவே இன்ட்ராநெட் ஃபைபர் டிவியாக சேனல்களை பார்த்து கொள்ளலாம். ஜியோ நிறுவனத்தில் 2 மாதங்களுக்கு ஜியோஹோம் (JioHome) திட்டம் சலுகை முறையில் கொடுக்கப்படுகிறது. அதாவது, 2 மாதங்களுக்கு கட்டணம் இல்லாமல், 1000+ லைவ் டிவி சேனல்கள் மற்றும் 10+ ஓடிடி ஆப்களின் சந்தாவை பெறலாம்.
மேலும், 30 எம்பிபிஎஸ் வேகத்தில் ஃபைபர் டேட்டா கிடைக்கும். ஒரு மாதத்துக்கு அதிகபட்சம் 1000 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். இந்த 1000 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். இதிலும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி கால்கள் வை-பை வழியாக கொடுக்கப்படும். ஆனால், 2 மாதங்களுக்கு பிறகு குறைந்தபட்சம் ரூ.599 செலுத்தி தொடரலாம்.
இந்த விலையுடன் ஜிஎஸ்டி கட்டணம் இருக்கும். இதேபோல ஏர்டெல் நிறுவனமும் ரூ.599 திட்டத்தின் வழியாக 30 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை கொடுக்கும் ஃபைபர் திட்டத்தில் எச்டி சேனல்கள் (HD Channels) உள்பட 350+ டிவி சேனல்கள் மற்றும் 22+ ஓடிடி சந்தாவை கொடுக்கிறது. ஆனால், முதல்முறை பெறும்போது குறைந்தது 3 மாதங்களுக்கு பெற வேண்டும்.
இதில் ஜிஎஸ்டி கட்டணம் மற்றும் இன்ஸ்டாலேஷன் கட்டணம் இருக்கும். இந்த கட்டணங்களில் இருந்து ரூ.1,000 சலுகையை இப்போது ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படி பிஎஸ்என்எல், ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் கேபிள் டிவிக்கு மாற்றாக ஐஃஎப்டிவி (IFTV) மற்றும் ஐபிடிவி (IPTV) சேனல்களை கொடுக்க தொடங்கி இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








