BSNL பேஸிக் பிளான் மீது சுண்டி இழுக்கும் புது ஆபர்.. 1 மாசத்துக்கு FREE.. 3 மாசத்துக்கு ரூ.100 டிஸ்கவுண்ட்!
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் ஏற்கனவே "படுசூடாக" வியாபாரம் செய்து வருகிறது. இந்நிறுவனம் அதன் ரூ.1 ப்ரீடம் திட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்து, இந்த திட்டம் 2025 டிசம்பர் 31 ஆம் தேதி வரை கிடைக்கும் என்று அறிவித்து, தொடர்ச்சியான முறையில் புதிய கஸ்டமர்களை ஈர்த்து வருகிறது.
இதற்கிடையில் மலிவு விலையில் ஹோம் பிராட்பேண்ட் திட்டத்தை தேடும் வாடிக்கையாளர்களை "சுண்டி இழுக்கும்" படியான ஒரு ஆபரை அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல்-ன் ஃபைபர் பேஸிக் திட்டத்தின் மீது தான் ஆபர் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது 3300ஜிபி அல்லது 3.3டிபி டேட்டாவை 60 எம்பிபிஎஸ் ஸ்பீடில் வழங்கும் திட்டமாகும்.

இதுகுறித்த எக்ஸ் தள பதிவில் பிஎஸ்என்எல் நிறுவனமானது ரூ.399 க்கு ஃபைபர் பேஸிக் திட்டத்திற்கு அப்கிரேட் ஆவதன் மூலம் முதல் மாத சேவை இலவசமாக பெறுங்கள் மற்றும் 3 மாதங்களுக்கு ரூ.100 தள்ளுபடியையும் பெறுங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.499 மதிப்புள்ள திட்டம் ரூ.399 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்று அர்த்தம்.
மேலதிக விவரங்களுக்கு 1800-4444 என்கிற எண்ணிற்கு வாட்ஸ்அப் வழியாக "Hi" என்று மெசேஜ் அனுப்பவும் என்றும் பிஎஸ்என்எல் நிறுவனம் கேட்டு கொண்டுள்ளது. பிஎஸ்என்எல் மீண்டும் அறிமுகம் செய்துள்ள ரூ.1 திட்டத்தை பொறுத்தவரை - இது நாடு முழுவதும் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களிலும் உள்ள புதிய கஸ்டமர்களுக்கு கிடைக்கும்; 2025 டிசம்பர் 31 ஆம் தேதி வரை கிடைக்கும்.
அதாவது ஏற்கனவே பிஎஸ்என்எல் சேவையின் கீழ் உள்ள பயனர்கள் இந்த ரூ.1 திட்டம் ரீசார்ஜ் செய்ய கிடைக்காது. நன்மைகளை பொறுத்தவரை பிஎஸ்என்எல்-ன் ரூ.1 ஃப்ரீடம் திட்டம் ஆனது 30 நாட்கள் செல்லுபடியாகும். மேலும் ரூ.1 ரீசார்ஜ் மூலம், பயனர்கள் தினசரி 2 ஜிபி அதிவேக (4ஜி) டேட்டா, இந்தியா முழுவதும் வரம்பற்ற லோக்கல் மற்றும் நேஷனல் ரோமிங் கால்களை ஆகியவற்றையும் பெறுகிறார்கள்.
கூடுதலாக, பயனர்கள் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்களையும் பெறுவார்கள். முதலில் இந்த திட்டம் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை என்கிற காலக்கட்டத்திற்குள் ரீசார்ஜ் செய்ய கிடைத்தது. பின்னர் பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த திட்டத்தின் செல்லுபடியை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து செப்டம்பர் 15, 2025 வரை கிடைக்கும்படி செய்திருந்தது. தற்போது 2025 டிசம்பர் 31 வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை நீங்கள் லாங் வேலிடிட்டி திட்டத்தை தேடினால் - நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்குக் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ரூ.2399 திட்டத்தை தேர்வு செய்யலாம். இது 365 நாட்கள் அல்லது 12 மாதங்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வரும் திட்டமாகும். அதாவது மாதத்திற்கு ரூ.200 என்கிற (ரூ.200 x 12 மாதங்கள் = ரூ.2399) செலவில் கிடைக்கும் ஒரு லாங் வேலிடிட்டி பிளானாகும்
பிஎஸ்என்எல் ரூ.2399 திட்டத்தின் நன்மைகள்: பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2399 திட்டமானது டெய்லி 2ஜிபி டேட்டாவை வழங்கும். ஆக இந்த திட்டத்தின் கீழ் (செல்லுபடியாகும் காலம் முழுவதும்) மொத்தம் 730ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். இதோடு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளும் கிடைக்கும்.
ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ஒருமுறை தங்கள் பிஎஸ்என்எல் மொபைல் நம்பரை ரீசார்ஜ் செய்ய விரும்பாதவர்கள் அல்லது மாதாந்திர ரூ.200 க்கு மேலான தொகையை ரீசார்ஜ்ஜிற்காக செலவு செய்ய விரும்பாதவர்கள் - கண்களை மூடிக்கொண்டு ரூ.2399-ஐ ரீசார்ஜ் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








