பிஎஸ்என்எல் வழங்கும் புதிய அதிரடி டேட்டா ஆஃபர்.!
அரசு நடத்தும் டெலிகாம் ஆபரேட்டரான பிஎஸ்என்எல் சென்னையில் (இது தமிழ்நாடு முழுவதும் பொருந்தும்) அதன் புதிய நுழைவு-நிலை ரோமிங் கட்டணத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
பிஎஸ்என்எல், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுகளில் கூட இலவசத் தரவு, கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் அனுபவங்களை அனுபவிக்கும் வகையில் ஒரு பண்டிகை-சீசன் வாய்ப்பை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் தற்போது புதிய அதிரடி டேட்டா ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது.
இந்த திட்டம் பொறுத்தவரை பல்வேறு பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்குப் பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் ரூ.74-க்கு ரீசார்ஜ் செய்தால் 1ஜிபி டேட்டா மற்றும் 100எஸ்எம்எஸ் பயன்படுத்த முடியும்.

ஜனவரி 1:
இந்த திட்டத்துடன் ரூ.10 டால்க் டைம் அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு முன்னிட்டு இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டது, எனவே வாடிக்கையாளர்கள் டிசம்பர் 24 முதல் ஜனவரி 1வரை மட்டுமே இந்த திட்டத்தைப் பயன்படுத்த
முடியும்.

ரோமிங் :
அரசு நடத்தும் டெலிகாம் ஆபரேட்டரான பிஎஸ்என்எல் சென்னையில் (இது தமிழ்நாடு முழுவதும் பொருந்தும்) அதன் புதிய நுழைவு-நிலை ரோமிங் கட்டணத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரீசார்ஜ்:
இந்த பிராந்தியத்தில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் ரூ.186 அல்லது ரூ.485 அல்லது ரூ.666/- என்கிற காம்போ திட்டங்களுடன் இந்த கட்டண ரோமிங் ரீசார்ஜை பெறலாம் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. ரூ.45/- மதிப்புள்ள இந்த ரோமிங் காம்போ வவுச்சரின் நன்மைகளை விரிவாக காண்போம்.

இலவச வரம்பற்ற ரோமிங்:
பிஎஸ்என்எல் அறிவித்துள்ள ரோமிங் திட்டமான ரூ.45/- ஆனது, பிஎஸ்என்எல் சேவை இல்லாத வட்டங்களான மும்பை மற்றும் தில்லி ஆகியவற்றில் இலவச வரம்பற்ற ரோமிங் அழைப்புகளை வழங்குகிறது.

ரூ.45/- வழியாக :
ஆக தில்லி மற்றும் மும்பை வட்டாரங்களில் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்க முடியாத பிஎஸ்என்எல் திட்டங்களான ரூ.186, ரூ.485 மற்றும் ரூ.666/- ஆகியவைகள் இப்போது ரூ.45/- வழியாக அந்த நன்மைகளை வழங்கும் என்று அர்த்தம்.

மூன்று கட்டணத் திட்டங்களில் ஒன்று ;
மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று கட்டணத் திட்டங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர் புதிய ரூ.45/- ரோமிங் காம்போ வவுச்சரை ரீசார்ஜ் செய்யவதின் மூலம் மும்பை மற்றும் தில்லியில் இலவச அழைப்புகளை மேற்கொள்ளலாம்.

ரூ.10/- டால்க் டைம்
இந்த ரீசார்ஜ் திட்டமானது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்பதும் மேலும் இது பிரதான பேலன்சில் ரூ.10/- என்கிற டால்க் டைம் வழங்கும் என்றும் பிஎஸ்என்எல் நிறுவனம் குறிப்பிடுகிறது. அறியாதோர்களுக்கு, தில்லி மற்றும் மும்பை வட்டங்களில் அரசு நடத்தும் தொலைத் தொடர்பு நிறுவனமான எம்.டி.என்.எல் நிறுவனம் அதன் சேவைகளை வழங்கி வருகிறதென்பது குறிப்பிடத்தக்கது.

வாபஸ்:
இந்த காம்போ வவுச்சர் அறிமுகத்தின் விளைவாக பிஎஸ்என்எல் வழங்கி வந்த வீக்லி காம்போ வவுச்சர்களான ரூ.81, ரூ.148 மற்றும் ரூ.62/- ஆகியவைகள் அதே வட்டத்தில் உடனடியாக திரும்ப பெற்றுக்கொண்டுள்ளது என்பதும், இந்த மாற்றங்கள் டிசம்பர் 23, 2017 முதல் செயல்படுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications