BSNL ஃபேன்சி நம்பர்.. பிரீமியம் மொபைல் எண்கள் இன்று முதல் விற்பனை.. 1 ஃபேன்சி நம்பர் விலை எவ்வளவு பாருங்க?
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) என்ற அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) தொலைத்தொடர்பு நிறுவனம் இன்று முதல் தமிழ்நாடு வட்டத்திற்குள் பயன்படுத்த கிடைக்கும் ஃபேன்சி நம்பர் (BSNL fancy numbers) கொண்ட பிரீமியம் மொபைல் எண்களை விற்பனை (premium mobile numbers sale) செய்கிறது. இந்த முறை தமிழ்நாடு வட்டம் முழுக்க வாங்க கிடைக்கும் டாப் 20 எண்களை அதன் விலை விவரத்துடன் BSNL நிறுவனம் அதன் பிரத்தியேகமான மின்-ஏலம் தளம் (e-Auction site) வழியாக விற்பனை செய்ய துவங்கியுள்ளது. இது பற்றிய கூடுதல் விபரங்கள் இதோ.
இந்த முறை எந்த பேன்சி எண்களுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற விபரத்தை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம். பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் புதிய பிஎஸ்என்எல் வானிட்டி நம்பர் (BSNL vanity number) அல்லது பிஎஸ்என்எல் ஃபேன்சி நம்பர் (BSNL fancy number) அல்லது பிஎஸ்என்எல் பிரீமியம் நம்பர்களை (BSNL premium number) வாங்க மக்கள் இப்போது பிரத்தியேகமான eauction.bsnl.co.in என்ற வலைப்பக்கத்தை நேரடியாக பார்வையிடலாம்.

BSNL ஃபேன்சி நம்பர்.. பிரீமியம் மொபைல் எண்கள் இன்று முதல் விற்பனை:
இந்த முறை BSNL நிறுவனம் தமிழ்நாடு வட்டத்திற்குள் (BSNL Tamil Nadu circle) கிடைக்கும் பிரீமியம் ஃபேன்சி எண்களாக 20 எண்களை பட்டியலிட்டுள்ளது. இதை மக்கள் தற்போது ஏலம் மூலம் வாங்க முயலலாம். இதில் குறைந்தபட்ச தொகையாக ரூ. 2000 முதல் அதிகபட்சமாக ரூ. 50,000 வரையில் புதிய ஃபேன்சி எங்களை பிஎஸ்என்எல் பட்டியலிட்டுள்ளது. இந்த முறை BSNL என்ன மாதிரியான பேன்சி எண்களை விற்பனை செய்கிறது என்பது இங்கே.
டாப் 20 பிரீமியம் ஃபேன்சி நம்பர்களின் விபரம்:
1. ஃபேன்சி எண் 9482194822 ஆரம்ப விலை ரூ.2,000
2. ஃபேன்சி எண் 8762060000 ஆரம்ப விலை ரூ.3,000
3. ஃபேன்சி எண் 9483993849 ஆரம்ப விலை ரூ.3,000
4. ஃபேன்சி எண் 8277111999 ஆரம்ப விலை ரூ.4,000
5. ஃபேன்சி எண் 9481020304 ஆரம்ப விலை ரூ.5,000
6. ஃபேன்சி எண் 9483070707 ஆரம்ப விலை ரூ.5,000
7. ஃபேன்சி எண் 9481801008 ஆரம்ப விலை ரூ.5,000
8. ஃபேன்சி எண் 9483118311 ஆரம்ப விலை ரூ.5,000
9. ஃபேன்சி எண் 9480301111 ஆரம்ப விலை ரூ.7,000
10. ஃபேன்சி எண் 8762812345 ஆரம்ப விலை ரூ.7,000
11. ஃபேன்சி எண் 8277234567 ஆரம்ப விலை ரூ.10,000
12. ஃபேன்சி எண் 8762762762 ஆரம்ப விலை ரூ.10,000
13. ஃபேன்சி எண் 8277582775 ஆரம்ப விலை ரூ.10,000
14. ஃபேன்சி எண் 8277200000 ஆரம்ப விலை ரூ.13,000
15. ஃபேன்சி எண் 8277155555 ஆரம்ப விலை ரூ.15,000
16. ஃபேன்சி எண் 8277444444 ஆரம்ப விலை ரூ.20,000
17. ஃபேன்சி எண் 8277511111 ஆரம்ப விலை ரூ.20,000
18. ஃபேன்சி எண் 8277111111 ஆரம்ப விலை ரூ.22,000
19. ஃபேன்சி எண் 8277177777 ஆரம்ப விலை ரூ.25,000
20. ஃபேன்சி எண் 8277199999 ஆரம்ப விலை ரூ.50,000
BSNL ஃபேன்சி பிரீமியம் எண்களை எப்படி ஏலத்தில் வாங்குவது?
பட்டியலிடப்பட்டுள்ள இந்த 20 பிரீமியம் நம்பர்களை வாங்க நீங்கள் நேரடியாக eauction.bsnl.co.in வலைத்தளம் சென்று, Login/Register என்பதை கிளிக் செய்க. தற்போது பயன்பாட்டில் உள்ள உங்களுடைய மொபைல் எண் மற்றும் ஈமெயில் விபரங்களை உள்ளிடவும். லாகின் கணக்கை உருவாக்கி உள்நுழையவும். உங்களுக்கு விருப்பனமான பிரீமியம் நம்பரை தேர்வு செய்து பதிவு கட்டணத்தை செலுத்தவும்.
இந்த பதிவு கட்டண தொகை திரும்ப பெறத்தக்கது. நீங்கள் தேர்வு செய்த எண்ணிற்கான குறைந்தபட்ச ஏலத்தொகையை குறிப்பிடுங்கள். அதிக தொகை கொடுத்து ஏலம் எடுப்பவருக்கு அந்த எண் சொந்தமாகும். ஏலத்தில் வென்றவருக்கு அடுத்த சில நாட்களில் அந்த பிரீமியம் எண் பயன்பாட்டிற்காக வழங்கப்படும். உங்களுக்கும் ஃபேன்சியான மொபைல் எண் வேண்டுமென்றால், இந்த முறையை பின்பற்றிப்பாருங்கள்.


Click it and Unblock the Notifications








