Home
News

நாளை கடைசி நாள்.. நான்கு திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டாவை அள்ளித் தரும் BSNL.. இந்த சான்ஸை தவறவிடாதீங்க!

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் அவ்வப்போது ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த எக்ஸ்ட்ரா டேட்டா நன்மை பயனுள்ள வகையில் இருக்கிறது. மேலும் இந்நிறுவனம் சில வாரங்களுக்கு முன்பு நான்கு திட்டங்களில் கூடுதல் டேட்டா சலுகையை வழங்கியது. அதாவது ரூ.225, ரூ.347, ரூ.485 மற்றும் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டங்களில் தான் எக்ஸ்ட்ரா டேட்டா நன்மையை வழங்கியது பிஎஸ்என்எல்.

ஆனால் இந்த எக்ஸ்ட்ரா டேட்டா நன்மை நாளை (ஜனவரி 31) முடிவடையும். ஆகவே எக்ஸ்ட்ரா டேட்டா விரும்பும் பயனர்கள் இந்த திட்டங்களில் இப்போதே ரீசார்ஜ் செய்வது நல்லது. மேலும் இப்போது இந்த நான்கு திட்டங்களில் வழங்கப்படும் எக்ஸ்ட்ரா டேட்டா நன்மையை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

நான்கு திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டாவை அள்ளித் தரும் BSNL..

பிஎஸ்என்எல் ரூ.225 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 225 prepaid plan) முன்பு தினமும் 2.5ஜிபி டேட்டா நன்மையை வழங்கியது. ஆனால் தற்போது இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே இந்த பிஎஸ்என்எல் ரூ.225 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.225 ப்ரீபெய்ட் திட்டம். இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படும்.

பிஎஸ்என்எல் ரூ 347 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 347 Prepaid plan) ஆனது 50 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இந்த திட்டம் முன்பு தினமும் 2ஜிபி டேட்டா வழங்கியது. ஆனால் இந்த திட்டத்தில் தற்போது ரீசார்ஜ் செய்தால் தினமும் 2.5ஜிபி டேட்டா கிடைக்கும். ஆகவே நீங்கள் இந்த ரூ 347 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் 125ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை பிஎஸ்என்எல் ரூ 347 ப்ரீபெய்ட் திட்டத்தில் உள்ளன. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 485 Prepaid Plan) முன்பு தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்கியது. ஆனால் தற்போது இந்த திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 72 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 180ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும்.

நான்கு திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டாவை அள்ளித் தரும் BSNL..

பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2399 Prepaid Plan) முன்பு தினமும் 2ஜிபி டேட்டா வழங்கியது. ஆனால் தற்போது இந்த திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

அதுவும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Extra Data Offer for Rs.225, Rs.347, Rs.485, and Rs.2399 Prepaid Plans Will End Tomorrow
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X