பிஎஸ்என்எல் ரூ.49 மற்றும் ரூ.108 திட்டங்களில் அதிரடி திருத்தம்.! என்னென்ன நன்மைகள் கிடைக்கும்.!

|

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து சிறப்பான சலுகைகள் மற்றும் அட்டகாசமான திட்டங்களை வழங்கி வருகிறது. குறிப்பாக மலிவு விலையில் இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ள திட்டங்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

அதன் தற்போதுள்

தற்சமயம் வெளிவந்த தகவலின்படி பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் தற்போதுள்ள திட்டங்களில் குறிப்பிட்ட மாற்றங்களை செயல்படுத்தத துவங்கியுள்ளது. அதன்படி இந்நிறுவனம் வரும் டிசம்பர் 1-ம் தேதி நடைமுறைக்கு வரும் வண்ணம் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை திருத்தியுள்ளது.

 பிஎஸ்என்எல்-இன் புதிய

இப்போது கூறப்பட்ட பிஎஸ்என்எல்-இன் புதிய திருத்தங்களை பொறுத்தவரை, எஸ்.டி.வி 49 திட்டத்துக்கான கிடைக்கும் தன்மை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு பிஎஸ்என்எல்-இன் ரூ.108 வவுச்சருக்கான செல்லுபடியாகும் காலமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரூ.399-க்கு 3300 ஜிபி டேட்டா: ஜியோ, பிஎஸ்என்எல், ஏர்டெல் சிறந்த பிராட்பேண்ட் திட்டங்கள்!ரூ.399-க்கு 3300 ஜிபி டேட்டா: ஜியோ, பிஎஸ்என்எல், ஏர்டெல் சிறந்த பிராட்பேண்ட் திட்டங்கள்!

 இன்னும் 90 நாட்க

அதாவது எஸ்.டி.வி 49 திட்டம் ஆனது நவம்பர் 29-ம் தேதி அன்று காலாவதியாகும் என்று கருதப்பட்டது. ஆனாலும் இந்நிறுவனம் அதன் கிடைக்கும் தன்மையை இன்னும் 90 நாட்கள் நீட்டித்துள்ளது. குறிப்பாக சந்தாதாரர்களிடமிருந்த அதிகரித்த தேவை காரணமாக இந்த நடவடிக்கை நிகழ்த்தப்பட இருக்கலாம்.

நிறுவனத்தின் இந்த ரூ.49

குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த ரூ.49 திட்டம் ஆனது இந்த மாதம் துவகத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இது விலையை மீறிய சில நல்ல நன்மைகளை வழங்குகிறது. 90 நாட்களுக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ஒரு விளம்பர திட்டமாக அறிமுகம் செய்யப்பட்ட பிஎஸ்என்எல் எஸ்.டி.வி 49 திட்டம் ஆனது இந்தியாவுக்குள் உள்ள எந்தவொரு நெட்வொர்க்குக்கும் 100 நிமிடங்களை இலவசமாக வழங்குகிறது. இதன் இலவச நிமிடங்களுக்கு பிறகு, ஹோம் எல்எஸ்ஏ மற்றும் எம்டிஎன்எல் நெட்வொர்க்குடன் டெல்லி, மும்பை உள்ளிட்ட தேசிய ரோமிங்கில் நிமிடத்திற்கு 45 பைசா என்கிற கணக்கில் குரல் அழைப்புகளுக்கான கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 எஸ்.டி.வி 49 திட்டத்தில் அழைப்பு

இந்த எஸ்.டி.வி 49 திட்டத்தில் அழைப்பு நன்மைகளை தவிர்த்து, எந்தவொரு ஆபரேட்டருக்கும் அனுப்பக்கூடிய 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் 2 ஜிபி அளவிலான டேட்டா நன்மையும் கிடைக்கிறது. ஆனால் இந்த இலவசங்கள் அனைத்தும் ரீசார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து 28 நாட்கள் செல்லுபடியாகும்.

ர்க் உள்ளிட்

அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.108 வவுச்சர் ஆனது டெல்லி, மும்பை தொலைதொடரபு வட்டங்களில் உள்ள எம்.டி.என்.எல் நெட்வொர்க் உள்ளிட்ட எந்தவொரு நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற குரல் அழைப்பு வசதியை வழங்குகிறது. மேலும் இது ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டாவுடன் வருகிறது. டேட்டா வரம்பு தீர்ந்த பின்னர் இணைய வேகம் 80 கே.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படும். அதேபோல் பிஎஸ்என்எல் திட்டத்தின் முழு செல்லுபடியாகும் காலத்திற்கும் மொத்தமாக 500 இலவச எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகின்றன.

மேலும் இந்த திட்டம்

அதேசமயம் பிஎஸ்என்எல் ரூ.108 வவச்சர் ஆனது ஒரு நாளைக்கு 250 நிமிடங்களுக்கு குரல் அழைப்பு நன்மைகளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் வழங்கும் இலவசங்களின் செல்லுபடியாகும் காலம் 45 நாட்கள் என்றால் கூட, திட்டத்தின் செல்லுபடியாகும் கால் 90 நாட்கள் ஆகும் என்பதை நினைவில் கொள்ளவும்.

 திருத்தத்திற்குப்

இப்போது அறிவிக்கப்பட்ட இந்த திருத்தத்திற்குப் பின்பு, ரூ.108 வவுச்சர் மற்றும் எஸ்.டி.வி. 49 ஆகிய திட்டங்கள் வரும் பிப்ரவரி 28,2021 வரை ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்று கூறப்படுகிறது. திருத்தப்பட்ட திட்டங்கள் டிசம்பர் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அணுக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

போஸ்ட்பெய்ட் பிளஸ்

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டங்களுடன் நேரடியாக போட்டியிடும் புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்களை கூட அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
BSNL Extends the Validity and Availability of STV49 and STV108 Plans: Here the Details!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X