BSNL ரூ.96 வசந்தம் கோல்டு திட்டத்தின் வேலிடிட்டி நீட்டிப்பு! 500ஜிபி வரை கிடைக்கும் டேட்டா திட்டம்!

|

சென்னை மற்றும் தமிழக வட்டங்களில் ப்ரீபெய்ட் பிளான் வவுச்சர் வசந்தம் தங்கம் கிடைப்பதை பிஎஸ்என்எல் நீட்டித்துள்ளது. தற்பொழுது பிஎஸ்என்எல் இல் கிடைக்கும் இந்த வசந்தம் கோல்ட் பிளான் திட்டமானது ரூ.96 விலையில் கிடைக்கிறது. இந்த திட்டம் மற்றும் பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ள அதிக டேட்டா பயன் கொண்ட திட்டங்களின் விபரங்களைப் பார்க்கலாம்.

பி.எஸ்.என்.எல் வசந்தம் கோல்டு திட்டம்

பி.எஸ்.என்.எல் வசந்தம் கோல்டு திட்டம்

பி.எஸ்.என்.எல் வசந்தம் கோல்டு திட்டம் 90 நாட்கள் திட்ட செல்லுபடியுடன் இலவசங்களுடன் சேர்ந்து, திட்டத்தைச் செயல்படுத்தும் நாளிலிருந்து 21 நாட்களுக்குச் செல்லுபடியாகும். இத்திட்டத்தின் கிடைக்கும் தன்மை இன்னும் 90 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது, அதாவது இப்போது முதல் ஜூன் 30, 2020 வரை இத்திட்டம் கிடைக்குமென்று பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.

சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டங்களில் மட்டும்

சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டங்களில் மட்டும்

இந்த வசந்தம் கோல்டு திட்டம் புதிய, இடம்பெயர்வு மற்றும் செல்லுபடியாகும் நீட்டிப்பு பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை நினைவில் கொள்க. இந்த திட்டம் வரம்பற்ற காம்போ திட்டத்துடன் இருக்கும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்குப் பயனற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிஎஸ்என்எல் ரூ .96 திட்டம் சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டங்களில் மட்டுமே கிடைக்கிறது.

சில்லரை விலையில் அட்டகாச திட்டங்கள்: Jio அதிரடி அறிவிப்புசில்லரை விலையில் அட்டகாச திட்டங்கள்: Jio அதிரடி அறிவிப்பு

பிஎஸ்என்எல் வசந்தம் கோல்டு பிளான் விபரங்கள்

பிஎஸ்என்எல் வசந்தம் கோல்டு பிளான் விபரங்கள்

இந்த பிஎஸ்என்எல் வசந்தம் கோல்டு பிளான் திட்டத்தின் கீழ், பயனர்களுக்கு அனைத்து நெட்வொர்க் பயனிற்கான 250 வாய்ஸ் கால் அழைப்பு நிமிடங்கள் தினமும் வழங்கப்படுகிறது. இந்த நிமிடங்கள் முடிந்த பின் கட்டணம் வசூலிக்கப்படும். இத்துடன் தினமும் 100 எஸ்.எம்.எஸ் வழங்கப்படுகிறது. இந்த நன்மைகள் 21 நாடுகளுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டம் செல்லுபடியாகும் காலம் 90 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரேஸ் காலங்கள் எவ்வளவு தெரியுமா?

கிரேஸ் காலங்கள் எவ்வளவு தெரியுமா?

குறிப்பிட்ட 90 நாட்களுக்குள் பயனர்கள் ஏதேனும் டாக் டைம் ரீசார்ஜ் செய்து அடுத்த 90 நாட்களுக்கு அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தத்திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு அவர்கள் பயன்படுத்தும் 90 நாட்களுக்கும் இன்கம்மிங் அழைப்புகள் முட்டிலும் இலவசம் தான். பயனர்களுக்கு ஏழு நாட்கள் மற்றும் 165 நாட்கள் இரண்டு கிரேஸ் காலங்கள் வழங்கப்படும், அதன் பிறகு அவர்களின் சிம் கார்டு காலாவதியாகும்.

டேட்டா ஒன்லி திட்டங்கள்

டேட்டா ஒன்லி திட்டங்கள்

இந்த ஆண்டு துவக்கம் முதல் பிஎஸ்என்எல் நிறுவனம் மற்ற நிறுவனங்களை விடச் சிறப்பான சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. மேலும் இந்நிறுவனம் சில வட்டங்களில் அதன் போர்ட்ஃபோலியோவின் கீழ் தனிப்பட்ட டேட்டா ஒன்லி திட்டங்களை கொண்டுள்ளது, அதைப் பற்றி இப்பொழுது விரிவாகப் பார்ப்போம்.

அடடா! Google-ல் இப்படி ஒரு அம்சம் இருக்கா: இத்தனை நாளா இது தெரியாம போச்சே!அடடா! Google-ல் இப்படி ஒரு அம்சம் இருக்கா: இத்தனை நாளா இது தெரியாம போச்சே!

ரூ.693 மற்றும் ரூ.1,212 திட்டங்கள்

ரூ.693 மற்றும் ரூ.1,212 திட்டங்கள்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் டேட்டா ஒன்லி எஸ்.டி.வி திட்டங்கள், ரூ.693 மற்றும் ரூ.1,212 என்கிற விலைக்கு ரீசார்ஜ் செய்யக் கிடைக்கும். தினசரி டேட்டா வரம்பைக் கொண்ட பிஎஸ்என்எல் ஆனது மற்ற டேட்டா எஸ்.டி.விகளைப் போலல்லாமல் ரூ.693 மற்றும் ரூ.1,212 திட்டங்கள் ஆனது ரீசார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து சரியாக 365 நாட்களுக்குச் செல்லுபடியாகும் காலத்தின் கீழ் டேட்டா நன்மையை வழங்கும் என்பதே உண்மை ஆகும். மேலும் இந்த திட்டங்களைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

ரூ.693 ப்ரீபெய்ட் டேட்டா எஸ்.டி.வி திட்டம்

ரூ.693 ப்ரீபெய்ட் டேட்டா எஸ்.டி.வி திட்டம்

இந்த ரூ.693 ப்ரீபெய்ட் டேட்டா எஸ்.டி.வி திட்டம் ஆனது மொத்தம் 300ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும், பின்பு 365நாட்கள் வேலிடிட்டி-ஐ அடிப்படையாகக் கொண்டு இந்த திட்டம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக இந்த திட்டம் பல்வேறு மக்களுக்குப் பயனுள்ள வகையில் இருக்கும்.

ரூ.1,212 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.1,212 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.1,212 திட்டம் ஆனது மொத்தம் 500ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. பின்பு இந்த திட்டம் 365நாட்கள் வேலிடிட்டியுடன் வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.693 மற்றும் ரூ.1,212 திட்டங்களில் எந்த விதமான குரல் அழைப்பு நன்மைகளோ, எஸ்எம்எஸ் நன்மைகளோ வழங்கப்படமாட்டாது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், வெறுமனே டேட்டா நன்மைகளை மட்டுமே வழங்கும்.

ரொம்ப போர் அடிக்குதா? Nikon உடன் இலவசமாக போட்டோகிராபி கற்றுக்கொள்ள நல்ல சான்ஸ்!ரொம்ப போர் அடிக்குதா? Nikon உடன் இலவசமாக போட்டோகிராபி கற்றுக்கொள்ள நல்ல சான்ஸ்!

தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் மட்டுமே

தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் மட்டுமே

வெளிவந்த தகவலின் அடிப்படையில் இந்த இரண்டு டேட்டா எஸ்.டி.விகள் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் மட்டுமே கிடைக்கின்றன. அதன்படி இந்த திட்டங்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானா வட்டத்தில் இந்த திட்டங்கள் ரீசார்ஜ் செய்யக் கிடைக்கிறது.

வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு நன்மை

வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு நன்மை

மேலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள லாக்வுடன் காலத்தில் ஏராளமான பயனர்கள் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள் மற்றும் சில பயனர்கள் மொபைல் டேட்டாவை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். இந்த சமயத்தில் இதுபோன்ற ஒரு வருடம் செல்லுபடியாகும் திட்டங்களைத் தேர்வு செய்வது மிகவும் நல்லது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
BSNL Extends Availability of Rs 96 Vasantham Gold Prepaid Voucher In Tamilnadu Circle : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X