BSNL மலிவு விலையில் வழங்கும் 100 ஜிபி பிராட்பேண்ட் திட்டத்தின் காலம் நீட்டிப்பு!
பரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) விளம்பர ரூ.499 பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டத்தின் கிடைக்கும் நாட்களை ஜூன் 29ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கப்பட்ட இந்த இத்திட்டத்தின் கீழ் 100 ஜிபி டேட்டா நன்மையை 20 எம்.பி.பி.எஸ் என்ற வேகத்துடன் வெறும் ரூ.499 என்ற விலையில் வழங்குகிறது.

பாரத் ஃபைபர் திட்டம்
முதலில் பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த திட்டத்தை மார்ச் 31, 2020 வரை வரையறுக்கப்பட்ட கிடைக்கும் தன்மையுடன் மட்டுமே அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது, நாட்டின் மிகப்பெரிய இணையச் சேவை வழங்குநர் (ஐஎஸ்பி) இந்த ரூ.499 பாரத் ஃபைபர் திட்டத்தின் கிடைக்கும் நாட்களை தற்பொழுது ஜூன் 29ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இடஙக சேவையின் கீழ் என்ன கூடுதல் நன்மைகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.

100 ஜிபி டேட்டா நன்மை
இந்த திட்டம் பாரத் ஃபைபர் திட்டத்தின் வரிசையின் ஒரு பகுதியாக இருப்பதால், ரூ.499 திட்டமும் பிஎஸ்என்எல்லின் லேண்ட்லைன் சேவை வழியாக வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையுடன் வருகிறது. அத்துடன் பயனர்களுக்கு FUP வரம்புடன் 100 ஜிபி டேட்டா நன்மை கிடைக்கப்பெறுகிறது. அதேபோல் FUP வரம்பு முடிந்தபின் பயனர்களுக்கு 2 எம்.பி.பி.எஸ் வேகத்தில் வரம்பற்ற அன்லிமிடெட் டேட்டா நன்மை சர்ப்பிங்கிற்காக வழங்கப்படுகிறது.

அமேசான் பிரைம் சந்தா உண்டா?
இந்த ரூ.499 திட்டம் கிடைக்கும் தன்மையைப் பொறுத்தவரை, அந்தமான் & நிக்கோபார் தவிர அனைத்து வட்டங்களிலும் இத்திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது. இப்பொழுது இத்திட்டம் ஜூன் 29, 2020 வரை செல்லுபடியாகும். இந்த பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டம் அமேசான் பிரைம் சந்தாவுடன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இத்திட்டம் மாதாந்திர அடிப்படையில் மட்டுமே கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பலருக்கும் தெரியாத பிஎஸ்என்எல் சலுகை
பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் சேவை நன்மைகளைப் பற்றித் தெரியாதவர்களுக்கு, பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.999 மதிப்புள்ள அமேசான் பிரைம் சந்தாவை, ரூ.399 மதிப்பிற்கு மேல் விலை கொண்ட அனைத்து பிராட்பேண்ட் திட்டங்களுடன் வழங்குகிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். பயனர்கள் ஒரு வருடத்திற்கு ஒரு திட்டத்தைத் தேர்வுசெய்தால் இந்த நன்மை வழங்கப்படுகிறது.

எட்டு பாரத் ஃபைபர் திட்டங்கள்
இருப்பினும், ரூ.499 பாரத் ஃபைபர் திட்டம் மாத சந்தா மூலம் மட்டுமே என்பதால் அமேசான் பிரைம் சந்தா கிடையாது. பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் ரூ.499 திட்டத்தை முன்பு இருந்த திட்டங்களுடன் சேர்த்து பிஎஸ்என்எல் தற்போது எட்டு பாரத் ஃபைபர் திட்டங்களை தன்வசம் வைத்துள்ளது. பிஎஸ்என்எல் ரூ.499 திட்டத்தில் துவங்கி, ரூ.777, ரூ.849, ரூ.1,277, ரூ.2,499, ரூ.4,499, ரூ.5,999, ரூ.9,999 மற்றும் ரூ.16,999 ஆகிய விலைகளில் உங்களுக்குத் திட்டங்கள் கிடைக்கிறது.

50 எம்.பி.பி.எஸ் வேக டேட்டா நன்மை
பிஎஸ்என்எல் ஒரு குறிப்பிட்ட கால ஊக்குவிப்பு சலுகையாக ரூ.1,999 பிராட்பேண்ட் திட்டத்தைச் சென்னை மற்றும் தமிழக வட்டங்களில் வழங்கி வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அனைத்து பாரத் ஃபைபர் திட்டங்களும் குறைந்தது 50 எம்.பி.பி.எஸ் வேக டேட்டா நன்மையுடனும், வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளுடன் வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications