தினமும் எக்ஸ்ட்ரா 2.2ஜிபி டேட்டா.! சலுகை தேதி இன்னும் முடியல குயிக்கா போங்க.!
பிஎஸ்என்எல் தன்னுடைய பயனர்களுக்கு கூடுதல் டேட்டா வழங்கும் பம்பர் சலுகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
பிஎஸ்என்எல் தன்னுடைய பயனர்களுக்கு கூடுதல் டேட்டா வழங்கும் பம்பர் சலுகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பிட்ட ப்ரீபெய்ட் திட்டத்திற்கு மட்டும் இத்திட்டத்தின் படி வாடிக்கையாளருக்குத் தினமும் 2.2 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.

அவகாசத்தை நீட்டித்த பி.எஸ்.என்.எல்
இத்திட்டத்தில் பயனடைய வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல் நிறுவனம் ஜனவரி 31 ஆம் தேதி வரை மட்டுமே கால அவகாசம் கொடுத்திருந்தது, தற்பொழுது அந்த அவகாசத்தை பி.எஸ்.என்.எல் நிறுவனம் ஏப்ரல் 31 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

பம்பர் சலுகை
பி.எஸ்.என்.எல் இல் உள்ள 11 ப்ரீபெய்ட் திட்டத்திற்கு இந்த பம்பர் சலுகை செல்லுபடியாகும். தற்பொழுது பி.எஸ்.என்.எல் அறிமுகம் செய்துள்ள 2 புதிய லைப் டைம் திட்டத்திற்கும் இந்த கூடுதல் டேட்டா பேக் பம்பர் சலுகை பொருந்தும் என்று அறிவித்துள்ளது. பி.எஸ்.என்.எல் அறிமுகம் செய்துள்ள ரூ.1,699 மற்றும் ரூ.2,099 லைப் டைம் திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.

பம்பர் சலுகை பொருந்தும் திட்டங்கள்
முன்னதாக, பி.எஸ்.என்.எல் தனது ரூ.186, ரூ.429, ரூ.485, ரூ.666 மற்றும் ரூ.999 ஆகிய திட்டங்களுடன் பம்பர் சலுகையை வழங்கி வருகிறது. மேலும் தற்பொழுது எஸ்.டி.விக்கு ரூ.187, ரூ.333, ரூ.349, ரூ.444 மற்றும் ரூ.448 ஆகிய திட்டங்களுக்கும் பம்பர் சலுகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

6.2 ஜிபி வரை தினமும் கூடுதல் டேட்டா
பி.எஸ்.என்.எல் இன் அறிவிப்பின் படிரூ.1,699 திட்டத்துடன் பம்பர் சலுகை திட்டத்தை இணைக்கும் பொழுது வாடிக்கையாளருக்குத் தினமும் 4.2 ஜிபி வழங்கப்படுகிறது. அதே போல் ரூ.2,099 லைப் டைம் திட்டத்துடன் பம்பர் சலுகை திட்டத்தை இணைக்கும் பொழுது வாடிக்கையாளருக்குத் தினமும் 6.2 ஜிபி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications