ஜூன் 30 வரை இருக்கு: பிஎஸ்என்எல் வழங்கும் அந்த சலுகையின் காலம் நீட்டிப்பு!
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) தனது 6 பைசா கேஷ்பேக் சலுகையை நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இந்த சலுகை இப்போது ஜூன் 30, 2020 வரை கிடைக்கிறது.

6 பைசா கேஷ்பேக் திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனம் தற்சமயம் தனது 6 பைசா கேஷ்பேக் திட்டத்தை வருகிற ஜூன் 30, 2020 வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு கேஷ்பேக் திட்டத்தை வழங்கியது, இது லேண்ட்லைன் மற்றும் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் செய்யும் குரல் அழைப்புகளின் வழியாக ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கு 6 பைசா என்ற விகிதத்தில் கேஷ்பேக்கை வழங்குகிறது.

முன்னதாக மே 30 வரை அறிவிப்பு
அதாவது பான்-இந்தியா அடிப்படையிலான இந்த அற்புதமான திட்டம் மே 30 வரை மட்டுமே நீடிக்கப்படும் என முன்னதாக என்று அறிவிக்கப்பட்டு இருந்தது, ஆனால் பிஎஸ்என்எல் சத்தீஸ்கர் டுவிட்டர் தளத்தின்படி இந்த திட்டம் வரும் ஜூன் 30 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்து நமிட குரல் அழைப்புகளுக்கு ஆறு பைசாக்கள்
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பயனர்கள் செலவு செய்யும் ஐந்து நமிட குரல் அழைப்புகளுக்கும் ஆறு பைசாக்களை கேஷ்பேக்காக வழங்குவதாக அறிவித்தது, இது முகேஷ் அம்பானியின் தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு நேரடியாக போட்டி கொடுக்கும் வகையில் அறிவிக்கப்பட்டது.

ரிலையன்ஸ் ஜியோ அறிவித்த 6 பைசா
அதாவது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் இலவச அழைப்பு நன்மையை நிறுத்திக் கொண்டு, பிற தொலைத் தொடர்பு நிறுவன அழைப்புகளுக்கு 6 பைசா வசூலிக்கப்படும் என அறிவித்தது. அதன் பின்னரே பிஎஸ்என்எல் இந்த 6 பைசா கேஷ்பேக் சலுகையை அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்ட் 6 பைசா என எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்
சலுகையின் படி, பி.எஸ்.என்.எல் ஐந்து நிமிடங்களுக்கு மேல் லேண்ட்லைன் அழைப்புகளைச் செய்வதற்கு 6 பைசாக்களை கேஷ்பேக்காக வழங்கும். பயனர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 9478053334 என்ற எண்ணிற்கு ‘ஆக்ட் 6 பைசா' என எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் இந்த சலுகையைப் பெறலாம்.

வயர்லைன், பிராட்பேண்ட், ஃபைபர்-டு-ஹோம்
பணம் சந்தாதாரருக்கு கேஷ்பேக் வடிவில் வரவு வைக்கப்படுகிறது. நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல் வயர்லைன், பிராட்பேண்ட் மற்றும் ஃபைபர்-டு-ஹோம் (எஃப்.டி.டி.எச்) பயனர்களுக்கு கேஷ்பேக் சலுகை கிடைக்கிறது.

பாரத் ஃபைபர் ரூ.777 திட்டம்
பிஎஸ்என்எல் சமீபத்தில் தனது பாரத் ஃபைபர் ரூ.777 திட்டத்தை செப்டம்பர் 20 வரை நீட்டித்து அறிவித்தது. ஃபைப்ரோ 500 ஜிபி என்று அழைக்கப்படும் இந்த திட்டம் இந்தியாவில் பல பிஎஸ்என்எல் வட்டங்களில் கிடைக்கிறது.

50 எம்.பி.பி.எஸ் வேகத்தில் டேட்டா
இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு 500 ஜிபி மாதாந்திர டேட்டா 50 எம்.பி.பி.எஸ் வேகத்தில் வழங்குகிறது. டேட்டா வரம்பு முடிந்தவுடன் 2Mbps இணைய வேகத்தில் இந்த நன்மைகளைப் பெறலாம். கூடுதலாக, இந்த திட்டத்தின் மூலம் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் இலவச அழைப்புகளை மேற்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications