Home
News

ஜனவரி 31 கடைசி.. நான்கு திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. அள்ளி கொடுக்கும் BSNL.. விட்றாதீங்க..

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் சில வாரங்களுக்கு நான்கு ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா நன்மையை வழங்கியது. அதாவது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு முன்னிட்டு நான்கு திட்டங்களில் கூடுதல் டேட்டா வழங்கப்பட்டது. இந்நிலையில் எக்ஸ்ட்ரா டேட்டா நன்மை வரும் ஜனவரி 31-ம் தேதி வரை மட்டுமே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியான தகவலின்படி, பிஎஸ்என்எல் ரூ.225, ரூ.347, ரூ.485 மற்றும் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டங்களில் வழங்கப்பட்ட எக்ஸ்ட்ரா டேட்டா நன்மை வரும் ஜனவரி 31 முடிவடையும். எனவே எக்ஸ்ட்ரா டேட்டா விரும்பும் பயனர்கள் இந்த திட்டங்களில் இப்போதே ரீசார்ஜ் செய்வது நல்லது. மேலும் இப்போது இந்த நான்கு திட்டங்களில் வழங்கப்படும் எக்ஸ்ட்ரா டேட்டா நன்மையைப் பார்க்கலாம்.

நான்கு திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. அள்ளி கொடுக்கும் BSNL..

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.225 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 225 prepaid plan) முன்பு தினமும் 2.5ஜிபி டேட்டா நன்மையை வழங்கியது. ஆனால் தற்போது இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே இந்த பிஎஸ்என்எல் ரூ.225 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.225 ப்ரீபெய்ட் திட்டம். இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படும்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ 347 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 347 Prepaid plan) ஆனது 50 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இந்த திட்டம் முன்பு தினமும் 2ஜிபி டேட்டா வழங்கியது. ஆனால் இந்த திட்டத்தில் தற்போது ரீசார்ஜ் செய்தால் தினமும் 2.5ஜிபி டேட்டா கிடைக்கும். ஆகவே நீங்கள் இந்த ரூ 347 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் 125ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த திட்டத்தில் உள்ளன. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 485 Prepaid Plan) முன்பு தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்கியது. ஆனால் தற்போது இந்த திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 72 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 180ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும்.

நான்கு திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. அள்ளி கொடுக்கும் BSNL..

பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2399 Prepaid Plan) முன்பு தினமும் 2ஜிபி டேட்டா வழங்கியது. ஆனால் தற்போது இந்த திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL extended the extra data offer on four prepaid plans till January 31 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X