Home
News

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு.! அன்லிமிடெட் ஆஃபர்- பயனர்கள் மகிழ்ச்சி.!

வெளிவந்த தகவலின் அடிப்படையில் இந்தியாவில் இன்று (மே 14) காலை 9.00 மணி நிலவரப்படி, கொரோனா பாதிப்பு 78 ஆயிரத்தை கடந்தது. 78,003 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,549 பேர் உயிரிழந்துள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளும்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் வருகிறது, குறிப்பாக இதனை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன. பின்பு பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு ஏற்ப கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்று அரசு தொடர்ந்து கூறி வருகிறது. மேலும் இந்த வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கஉலகின் பல்வேறு நாடுகளும் ஆய்வு செய்து வருகின்றன.

 மாகநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட்

இந்த நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் அன்லிமிடெட் குரல் அழைப்புகள் வழங்கும்படி தனது ப்ரீபெய்ட் திட்டங்களை திருத்தி உள்ளது. பின்பு எம்என்டிஎல் என்று அறியப்படும் மாகநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட் நெட்வொர்க்குக்கு எஸ்எம்எஸ் சலுகைகளை வழங்குவதாகவும் பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை பிரிவு

மேலும் பிஎஸ்என்எல் சென்னை பிரிவு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, நிறுவனம் மொத்தம் 25ப்ரீபெய்ட் திட்டங்கள், ப்ரீபெய்ட் வவுச்சர்கள் மற்றும் பர்ஸ்ட் ரீசார்ஜ் கூப்பன்களில் அன்லிமிடெட் குரல் அழைப்பு சலுகைகளை வழங்குகிறது.

திருத்தத்தின் கீழ்

இப்போது அறிவிக்கப்பட்ட இந்த திருத்தத்தின் கீழ், மும்பை மற்றும் டெல்லியின் எம்.டி.என்.எல் நெட்வொர்க் ரோமிங்உட்பட இலவச ஹோம் மற்றும் தேசிய ரோமிங் அழைப்பு உள்ளிட்டவை கிடைக்கும். பின்பு எஸ்.டி.வி 99, எஸ்.டி.வி 104, எஸ்.டி.வி 349 மற்றும் எஸ்.டி.வி 447 ஆகியவை
தினசரி 250நிமிடங்கள் எஃப்யூபி அழைப்பு வரம்பை வழங்கும் என பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இலவச எஸ்எம்எஸ்

அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.97, ரூ.118, ரூ.187, ரூ.199, ரூ.247, ரூ.298, ரூ.349, ரூ.399, ரூ.447 மற்றும் ரூ.499, மற்றும் ரூ.1,098 போன்ற ப்ரீபெய்ட் திட்டங்களை பயன்படுத்தும் பயனர்களுக்கு எம்டிஎன்எல் ரோமிங்கில் நாள் ஒன்றுக்கு 100எஸ்எம்எஸ் இலவச எஸ்எம்எஸ் நன்மையையும்
அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது

மேலே கூறப்பட்டுள்ள அதே சலுகை ரூ.106, ரூ.107, ரூ.153, ரூ.186, ரூ.365, ரூ.429, ரூ.485, ரூ.666, ரூ.997, ரூ.1,699 மற்றும் ரூ.1,999 போன்ற PVக்கள் மற்றும் FRVக்களுக்கும் பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது.

 பிஸ்என்எல் நிறுவனம் தமிழ்நாட்டில்

ஆனாலும் பிஸ்என்எல் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.96-ப்ரீபெய்ட் திட்டத்தில் செல்லுபடியை குறைத்துள்ளது.ரூ.96 மதிப்புள்ள ப்ரீபெய்ட் வவுச்சர் வசந்தம் கோல்ட் பிளான் என அழைக்கப்படும் இந்த திட்டம் இப்போது 60நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும். முன்னதாக இதே திட்டம்
90நாட்கள் செல்லுபடியை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Extended Prepaid Plans Benefits Unlimited Calls, SMS to MTNL networks: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X