பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு அடுத்து ஒரு நற்செய்தி:இனி இந்த திட்டம் உங்களுக்கும்!
பிஎஸ்என்எல் அதன் வோல்ட் சேவையை நாட்டின் பல்வேறு பகுதிகளில் விரிவுப்படுத்தியுள்ளது. வோல்ட் செயல்படுத்தும் முறை மற்றும் கிடைக்கும் பகுதிகள் குறித்து பார்க்கலாம்.

4ஜி சேவை விரிவுப்படுத்தும் நடவடிக்கை
பிஎஸ்என்எல் நாட்டில் 4ஜி சேவை விரிவுப்படுத்தும் நடவடிக்கையை மும்முரமாக செயல்படுத்தி வருகிறது. அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நாட்டில் அனைத்து பகுதிகளிலும் 4ஜி சேவையை முழுமையாக வழங்க முடியவில்லை. இதையடுத்து பிஎஸ்என்எல் நாட்டில் வோல்ட் சேவையை அறிமுகப்படுத்தியது.

வோல்ட் சேவை ஒடிசாவில் அறிமுகம்
பிஎஸ்என்எல் இந்தியாவில் 4ஜி சேவையை அறிமுகப்படுத்த பல்வேறு வகையில் அதிதீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வாய்ஸ் ஓவர் லாங் டெர்ம் எவல்யூஷன்., வோல்ட் சேவையை ஒடிசாவில் அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் விரைவான அழைப்பு இணைப்புடன் ஹெச்டி தர வீடியோ அழைப்பை பெற முடியும்.

பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல்
பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல் தனது சேவையை குரல்சேவையில் நீண்ட கால பரிமாணங்களை வழங்க வோல்ட் சேவையை ஒடிசாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. வோல்ட் சேவையை பயன்படுத்துவது குறித்து வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் எஸ்எம்எஸ் மூலம் அறிவித்தது.

பிஎஸ்என்எல் வோல்ட் சேவை
பிஎஸ்என்எல் வோல்ட் சேவை அறிமுகத்தின் மூலம் அதன் பயனர்கள் ஹெச்டி தரமான வீடியோ அழைப்பை வோல்ட் சேவையின் கீழ் விரைவன அழைப்பு இணைப்பை பெறுவார்கள். வோல்ட் சேவை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் அதற்கேற்ற சாதனங்களை பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

விரிவுப்படுத்தப்பட்ட வோல்ட் சேவை
முன்னதாக ஒடிசாவில் அறிமுகப்படுத்திய வோல்ட் சேவை இந்தாண்டு இரண்டாவது முறையாக விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கோயம்புத்தூர், கேரளா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா வட்டங்களை உள்ளடக்கிய தென் மண்டலத்தில் வோல்ட் சேவை கிடைக்கிறது.

53733 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ்
பிஎஸ்என்எல் வோல்ட் சேவை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள், அதை செயல்படுத்துவதற்கான நடைமுறைகள் குறித்து பார்க்கலாம். இந்த சேவை பெற விரும்பும் பயனர்கள் ACTVOLTE என டைப் செய்து 53733 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். இந்த எஸ்எம்எஸ் அனுப்பிய அடுத்த 24 மணி நேரத்தில் சேவை செயல்படுத்தப்படும்.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள்
APN அமைப்பில் இருந்து இந்த சேவை செயல்படுத்த சில செயல்முறைகள் செய்யவேண்டும். ஆண்ட்ராய்டு தொலைபேசி வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மொபைல் நெட்வொர்க்குகள் செட்டிங்கிற்கு சென்று ஏபிஎன் தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.

ரூ.1,499 விலையில் புதிய திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.1,499 விலையில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த விலையில் ரீசார்ஜ் செய்யும் போது 365 நாட்கள் வேலிடிட்டிக்கு பதிலாக 395 நாட்கள் வேலிடிட்டியை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் 24 ஜிபி தரவு, நாள் ஒன்றுக்கு 250 நிமிட அழைப்பு, 100 எஸ்எம்எஸ்கள் உள்ளிட்ட வசதியோடு வருகிறது.


Click it and Unblock the Notifications