பிஎஸ்என்எல் 5ஜி புரட்சி : மிகப்பெரிய ஆப்டிகல் பைபர் நெட்வொர்க் மூலம் 5ஜி சேவை.!

பிஎஸ்என்எல் நிறுவனம் மிகப்பெரிய ஆப்டிகல் பைபர் நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது என்பதும், இது 7 லட்சத்திற்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தொலைவு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

|

அரசுக்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம், இந்த நிதியாண்டின் இறுதிக்குள் 5ஜி சேவைகளை தொடங்க வேண்டுமென்று திட்டமிட்டுள்ளது" என்று நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அனுப்பா ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

பிஎஸ்என்எல் புரட்சி : மிகப்பெரிய ஆப்டிகல் பைபர் நெட்வொர்க் மூலம் 5ஜி.!

"கடந்த வாரம் நோக்கியாவுடன் நாங்கள் (5ஜி சேவை தொடக்கம் சார்ந்த) தொடர்பு கொண்டிருந்தோம், அடுத்த கட்ட நடவடிக்கையாக நாங்கள் எங்களுடைய தேவைகளைப் பற்றி தெரிவிக்கப்போகிறோம். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 5ஜி சேவை இந்த நிதியாண்டின் இறுதிக்குள் தொடங்கப்பட வேண்டும்" என்றும் ஸ்ரீவஸ்தவா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

5ஜி சேவைகளுக்கு தேவையான

5ஜி சேவைகளுக்கு தேவையான

அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் அதன் 5ஜி சேவைகளுக்கு தேவையான இறுதி சாதனங்களுக்கு லார்சன் & டூப்ரோ மற்றும் ஹெச்பி உடன் கலந்துரையாடத் தொடங்கியுள்ளது. மற்றும் நெட்வொர்க் நிறுவனமான கோரியன்ட் உடன் 5ஜி தொழில்நுட்பத்தில் அதன் அறிவு பகிர்வு ஒப்பந்தம் ஒன்றிலும் கையொப்பமிட்டுள்ளது.

கோரியண்ட் மற்றும் பிஎஸ்என்எல் இணைந்து பணியாற்றும்.

கோரியண்ட் மற்றும் பிஎஸ்என்எல் இணைந்து பணியாற்றும்.

ஒப்பந்தத்தின் அடிப்படையில், 5ஜி சேவைகளுக்கான நெட்வொர்க் கட்டிடக்கலை மற்றும் சேவை கண்டுபிடிப்பு ஆகியவற்றை விரைவுபடுத்துவதற்கு கோரியண்ட் மற்றும் பிஎஸ்என்எல் இணைந்து பணியாற்றும்.

விளம்பரங்களில் நாங்கள் ஈடுபடவில்லை.

விளம்பரங்களில் நாங்கள் ஈடுபடவில்லை.

கோரியண்ட் உடனான ஒப்பந்தம் ஒரு அறிவு பகிர்வு சார்ந்த ஒப்பந்தம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அதுசார்ந்த எந்த விளம்பரங்களில் நாங்கள் ஈடுபடவில்லை. நாம் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம். இந்த உடன்படிக்கையின் மூலமும், மற்றும் பிற ஒப்பந்தங்களிடமிருந்தும் 5ஜி பற்றி மேலும் தெரிந்து கொள்ளுவோம்," என்றும் நிறுவனத்தின் இயக்குனர் அனுப்பா ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார்.

5ஜி சேவைக்கான உகந்த வலையமைப்பு

5ஜி சேவைக்கான உகந்த வலையமைப்பு

மேலும், 5ஜி சேவையின் வேகமானது 4ஜி சேவையை விட மிக வேகமாக இருக்கும் எனவும், அது 4ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க்கைப் பயன்படுத்தும் இருப்பினும் 5ஜி சேவைக்கான உகந்த வலையமைப்பு பயன்படுத்தப்படும் என்றும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபடும்

ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபடும்

"5ஜி தொழில்நுட்பமானது ஒரு புள்ளியில் இருந்து மற்றொரு புள்ளியை அடைய எடுக்கும் நேரம் சார்ந்த விடயத்தில் தெளிவுகள் இல்லையெனினும், 5ஜி சுற்றுச்சூழல் வளர்ச்சியானது ஆனது பயன்படுத்தப்படும் ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபடும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

7 லட்சத்திற்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தொலைவு

7 லட்சத்திற்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தொலைவு

பிஎஸ்என்எல் நிறுவனம் மிகப்பெரிய ஆப்டிகல் பைபர் நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது என்பதும், இது 7 லட்சத்திற்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தொலைவு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தானியங்கி கார்களின் சென்சார்களை போல ஆதரிக்கும்.

தானியங்கி கார்களின் சென்சார்களை போல ஆதரிக்கும்.

"5ஜி சேவையின் தரவு வேகமானது நிகழ்நேர கணினி வேகத்திற்கு ஒத்துழைக்கும். அதாவது சாலைவிதிகளை உடனடியாக தெளிந்து செயல்படும் தானியங்கி கார்களின் சென்சார்களை போல ஆதரிக்கும். வயர்லெஸ் கோபுரங்களில் இருந்து தரவு பரிமாற்றத்திற்க்கான நெட்வொர்க்கை வடிவமைப்பதில் (கணினியில் இருந்து பிணையத்திற்கு செல்ல வழிவகுக்கும்) எங்களது அனுபவத்தை பிஎஸ்என்எல் உடன் பகிர்ந்து கொள்வோம்" என்று கோரியண்ட் நிறுனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஷேகன் கேரத்பீர் கூறியுள்ளார்.

Best Mobiles in India

English summary
BSNL expects to start 5G service trials by March 2018. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X