Home
News

இதோ ஆரம்பிச்சுட்டாங்க.. ஒவ்வொரு கஸ்டமர்களின் தலையிலும் எக்ஸ்ட்ரா ரூ.49-ஐ ஏற்ற போகும் BSNL.. இது என்ன கணக்கு?

இந்திய அரசின் கீழ் இயங்கும் டெலிகாம் ஆபரேட்டர் ஆன பிஎஸ்என்எல் (BSNL) என்கிற பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) ஆனது, விரைவில் அதன் ப்ரீபெய்ட் திட்டங்களுக்கான விலைகளை உயர்த்தும் (prepaid plans tariff hike) என எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் எப்போதுமே நேரடி கட்டண உயர்வுகளை தவிர்த்து வந்துள்ளது. ஜியோ, ஏர்டெல் , வோடாபோன் ஐடியா போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆனது தங்கள் திட்டங்கள் அனைத்திலும் கட்டணங்களை உயர்த்தும் சுழற்சிகளை கொண்டிருக்கும் வேளையில், பிஎஸ்என்எல் அதை செய்வதற்கு ஒரு வித்தியாசமான வழியை கொண்டுள்ளது.

ஒவ்வொரு கஸ்டமர்களின் தலையிலும் எக்ஸ்ட்ரா ரூ.49-ஐ ஏற்ற போகும் BSNL!

அரசுக்கு சொந்தமான இந்த தொலைத்தொடர்பு நிறுவனம், கட்டணங்களை நேரடியாக உயர்த்தி, அதன் பலன்களை அப்படியே வைத்திருப்பதற்கு பதிலாக, காலப்போக்கில் பல திட்டங்களின் பலன்களை குறைப்பதன் மூலம் மறைமுகமாக கட்டணங்களை உயர்த்துகிறது. இது பொதுவாக, பயனர்கள் தாங்கள் சேவைகளுக்கு அதே தொகையை செலுத்துவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் உள்ள வளங்களோ அல்லது நெட்வொர்க் ஆதரவோ /உள்கட்டமைப்போ பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இல்லாத நிலையில், இது ஒரு மோசமான உத்தி அல்ல. தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் 2027 நிதியாண்டில் அதன் கட்டணங்களை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது ஏனென்றால் இந்நிறுவனம் 2027 நிதியாண்டில், ஏஆர்பியு (ARPU) என்கிற ஒரு வாடிக்கையாளருக்கான சராசரி வருவாயை (Average Revenue Per User) 50% உயர்த்த விரும்புகிறது.

பிஎஸ்என்எல்-இன் தற்போதைய - ஒரு வாடிக்கையாளருக்கான சராசரி வருவாய் ரூ.101 ஆகும். இது 2026 நிதியாண்டின் இறுதியில் இருந்த நிலை. வருகிற 2027 நிதியாண்டில் இது ரூ.150-ஐ எட்ட வேண்டும் என்று பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் ""தலையிலும்" ரூ.49-ஐ அதிகம் ஏற்ற வேண்டும் என்கிற திட்டத்தை கொண்டுள்ளது. நேரடி அல்லது மேற்குறிப்பிட்ட மறைமுகமான விலை உயர்வு இல்லாமல் இது சாத்தியம் இல்லை!

தொலைத்தொடர்பு அமைச்சர் சிந்தியா நடத்திய ஆய்வு கூட்டத்தில் இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாக தெரிகிறது. இது ஒரு வாடிக்கையாளருக்கான சராசரி வருமானத்தில் 50% அதிகரிப்பாகும், இதற்காக அனைத்து வகை திட்டங்களிலும் ஒரு பெரிய கட்டண உயர்வு தேவைப்படும். இந்த விலை உயர்வை நியாயப்படுத்த, தொலைத்தொடர்பு நிறுவனம் தனது நெட்வொர்க் உள்கட்டமைப்பு மற்றும் கவரேஜை தொடர்ந்து மேம்படுத்த வேண்டியிருக்கும்.

ஒரு நிதியாண்டிற்குள் ஒரு வாடிக்கையாளருக்கான சராசரி வருமான இலக்கை 50% உயர்த்துவதற்கு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கூட இருமுறை யோசிக்கும். பிஎஸ்என்எல்-ஐ பொறுத்தவரை, அது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணங்களை மட்டும் கொண்டிருக்கவில்லை, குறைந்த கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது.

ஒரு நுகர்வோர் தனது டிவைஸில் பிஎஸ்என்எல் சிம்மை முதன்மை சிம்மாக வைத்திருப்பது மிகவும் அரிதான ஒரு சூழலாகும். நாட்டில் உள்ள பெரும்பாலான நுகர்வோருக்கு இது (பிஎஸ்என்எல்) பெரும்பாலும் இரண்டாவது சிம் கார்டாகவே உள்ளது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏற்கனவே கிராமப்புறங்களை அடைய தொடங்கிவிட்டதால், பிஎஸ்என்எல்-க்கு இப்போது அங்கேயும் போட்டியிடுவது கடினமாக இருக்கும்.

தனியார் நிறுவங்களின் விலை உயர்வு எப்போது? ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய 2 நிறுவனங்களுமே ஏற்கனவே சைலன்ட் ஆக சில வேலைகளை பார்த்துவிட்டது. மிகவும் சமீபத்தில், ஏர்டெல் நிறுவனம் ரூ.799 மற்றும் ரூ.859 திட்டங்களை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக வெறும் ரூ.899 திட்டத்தை மட்டுமே வழங்கி, பயனர்களுக்கான ரூ.40 கட்டண விலை உயர்வை அமல்படுத்தி இருந்தது. இது ஒரு அமைதியான - மொபைல் ரீசார்ஜ் கட்டண விலை உயர்வாகும்; இது பெரிய உயர்வாக இல்லாவிட்டாலும், பயனர்கள் கவனிக்க வேண்டிய ஒரு குறிப்பிடத்தக்க உயர்வாக உள்ளது.

இதேபோல முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவும் கூட சமீபத்தில் தனது ரூ.195 டேட்டா வவுச்சரின் செல்லுபடியாகும் கால அளவில் ஒரு மாற்றத்தை செய்தது. இந்த தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ரூ.195 டேட்டா வவுச்சர், முன்பு இருந்த 90 நாட்களுக்கு பதிலாக, இப்போது 30 நாட்கள் என்ற தனிப்பட்ட செல்லுபடியாகும் காலத்தை கொண்டுள்ளது. இதில் டேட்டா மற்றும் ஓடிடி (ஓவர்-தி-டாப்) நன்மைகள் ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தாலும், இந்த திட்டத்தை பயன்படுத்துவதற்கான செலவில் இது ஒரு குறிப்பிடத்தக்க விலை உயர்வை காட்டுகிறது.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க இந்த ஆண்டின் முதல் பாதியில், அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களின் திட்டங்கள் முழுவதும் கிட்டத்தட்ட 15 சதவீத பரந்த அளவிலான கட்டண உயர்வை எதிர்பார்க்கப்படுவதாக தொழில்துறை ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

Best Mobiles in India

English summary
BSNL expected to raise tariffs in FY27 Wants to Raise ARPU by 50 Percent From Rs 101 to Rs 150
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X