பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் திட்டம் விரிவாக்கம்: புதியதோர் திட்டம் அறிமுகம்!

|

பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் சேவையை விரிவுபடுத்துவதோடு புதிய திட்டம் ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது. புதிதாக குஜராத்தின் 10 பகுதிகளில் பாரத் ஃபைபர் சேவை தற்போது கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) தனது பாரத் ஃபைபர் சேவை அதிவேகமாக இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் விரிவுப்படுத்து வருகிறது. அதன்படி தற்போது பிஎஸ்என்ள் குஜராத்தின் சில புதிய பகுதிகளில் பாரத் ஃபைபர் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரத் ஃபைபர் சேவை குஜராத்தில் விரிவாக்கம்

பாரத் ஃபைபர் சேவை குஜராத்தில் விரிவாக்கம்

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) தனது பாரத் ஃபைபர் சேவை அதிவேகமாக இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் விரிவுப்படுத்து வருகிறது. அதன்படி தற்போது பிஎஸ்என்ள் குஜராத்தின் சில புதிய பகுதிகளில் பாரத் ஃபைபர் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாமே அவர்களுடையது: 52 சீன செயலிகளை புறக்கணிக்க அறிவுறுத்தல்!எல்லாமே அவர்களுடையது: 52 சீன செயலிகளை புறக்கணிக்க அறிவுறுத்தல்!

புதிய நகரங்கள் இணைப்பு

புதிய நகரங்கள் இணைப்பு

குஜராத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய நகரங்களானது கச் மாவட்டத்தில் உள்ள பூஜ், மாண்ட்வி, அஞ்சர், ஆதிபூர், முந்த்ரா, ராக்பார் மற்றும் காந்திகம் போன்ற பகுதிகளில் பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

குஜராத்தின் பல பகுதிகளில் விரிவுப்படுத்த திட்டம்

குஜராத்தின் பல பகுதிகளில் விரிவுப்படுத்த திட்டம்

பாரத் ஃபைபர் சேவையானது குஜராத்தில் ஆரம்பக் கட்டத்தில் அகமதாபாத், ஆனந்த், பர்தோலி, கலோல், மெஹ்சானா, படான், சூரத் மற்றும் வதோதராவில் கிடைத்தது. இருப்பினும், பி.எஸ்.என்.எல் இப்போது தனது சேவைகளை குஜராத்தின் பல பகுதிகளுக்கு சமீபத்திய மாதங்களில் விரிவுபடுத்தி வருகிறது.

48 மணி நேரத்தில் நிறுவப்படும்

48 மணி நேரத்தில் நிறுவப்படும்

பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் சேவையானது 48 மணி நேரத்தில் கச் பகுதியில் உள்ள சந்தாதாரர்களுக்கு உத்திரவாத வேகத்துடன் ஃபைபர் சேவை தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு 48 மணி நேரத்தில் நிறுவப்படும் என ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

750 ஜிபி வரை 100 எம்.பி.பி.எஸ் வேகம்

750 ஜிபி வரை 100 எம்.பி.பி.எஸ் வேகம்

அதேபோல் பல பகுதிகளில் 50 எம்.பி.பி.எஸ் வேகத்துடன் ரூ.777 திட்டம் உட்பட இரண்டு திட்டங்கள் மட்டுமே வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. கூடுதலாக, புதிய பயனர்களுக்கு 750 ஜிபி வரை 100 எம்.பி.பி.எஸ் வேகத்துடன் ரூ.1277 திட்டமும் வழங்கப்படுகிறது என்று பி.எஸ்.என்.எல் சந்தைப்படுத்தல் குழு தெரிவித்துள்ளது.

புதிதாக 40 எம்.பி.பி.எஸ் திட்டம்

புதிதாக 40 எம்.பி.பி.எஸ் திட்டம்

அதேபோல் பி.எஸ்.என்.எல் குஜராத்தில் புதிய 40 எம்.பி.பி.எஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள புதிய பயணர்களுக்கு மட்டும் வழங்கப்படும் இந்த புதிய திட்டம், பயனர்களுக்கு மாதத்திற்கு 250 ஜிபி வரை 40 எம்.பி.பி.எஸ் வேகத்திலும், வரம்பு முடிந்த பிறகு 1 எம்.பி.பி.எஸ் வேகத்தில் இணைய சேவை தரப்படுகிறது.

குறித்த நாளுக்கு முன்பே முடித்துவிட்டோம்:பெருமையுடன் முகேஷ் அம்பானி- எதற்கு தெரியுமா?குறித்த நாளுக்கு முன்பே முடித்துவிட்டோம்:பெருமையுடன் முகேஷ் அம்பானி- எதற்கு தெரியுமா?

ரூ.475 என்ற விலையில் திட்டம்

ரூ.475 என்ற விலையில் திட்டம்

அதோடு இந்த புதிய திட்டம் பயனர்களுக்கு இந்தியா முழுவதும் வரம்பற்ற அழைப்புகளை மேற்கொள்ள உதவுகிறது. 40 எம்.பி.பி.எஸ் திட்டம் 12 மாத சந்தாவில் ரூ.5700 விலையில் கிடைக்கும் எனவும் மாத சந்தாவாக ரூ .475 என்ற விலையில் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. குஜராத்தின் பிற தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் இந்த புதிய 40 எம்.பி.பி.எஸ் திட்டம் ஜூன் 22 வரை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
BSNL expanded bharat fiber services broadband with new plan

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X