BSNL தரமான செய்கை.. இனி SIM கார்டே தேவையில்லை.. புது சேவையுடன் அதிநவீனமாகிறது BSNL நெட்வொர்க்.. எப்படி?
பிஎஸ்என்எல் (BSNL) என்று அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) இந்தியாவில் அடிமேல் அடி வைத்து, முன்னேறி நகர்ந்து கொண்டிருக்கிறது. இப்போது பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் eSIM சேவையை (BSNL eSIM) அறிமுகம் செய்யவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. இது உண்மையில் ஒரு மிகப்பெரிய நகர்வாக பார்க்கப்படுகிறது. பிஎஸ்என்எல் eSIM சேவை (BSNL eSIM service) எப்போது அறிமுகம் செய்யப்படும்? எப்போது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று போன்ற கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்திய அரசின் சொந்த தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL), விரைவில் eSIM சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில், பிரைவேட் டெலிகாம் நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பாரதி ஏர்டெல் (Bharati Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) ஆகியவை eSIM சேவைகளை தற்போது பயன்பாட்டிற்கு வழங்கி வருகின்றன. இந்த வரிசையில் விரைவில் BSNL நிறுவனமும் சேரவுள்ளது.

BSNL தரமான செய்கை.. இனி டேட்டா, அழைப்பு, எஸ்எம்எஸ் அனுப்ப SIM கார்டே தேவையில்லை:
இந்தியாவில் பெருமளவிலான மொபைல் (Mobile) மற்றும் ஸ்மார்ட்போன் (Smartphone) பயனர்கள் அட்டை வடிவத்தில் இருக்கும் சிம் கார்டுகளை (physical SIM card) மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது இந்தியாவில் மேக்ரோ சிம் கார்டு (Macro SIM card), மைக்ரோ சிம் கார்டு (Micro SIM card) மற்றும் நானோ சிம் கார்டு (Nano SIM card) என 3 விதமான SIM கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்தகைய பிஸிக்கல் சிம் கார்டுடன் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் eSIM சேவையையும் (private telecom's eSIM service) வழங்கி வருகின்றன. eSIM சேவையை வழங்காத ஒரே டெலிகாம் நிறுவனமாக BSNL மட்டுமே இருந்து வந்தது. இப்போது பிஎஸ்என்எல் நிறுவனம் பிஸிக்கல் சிக் கார்டு உதவியே இல்லாமல் இயங்கும் eSIM சேவையை கொண்டுவரவிருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியாவில் eSIM சந்தை இன்னும் மிகச் சிறியதாகவே இருக்கிறது.
பிஎஸ்என்எல் eSIM சேவை (BSNL eSIM service):
காரணம், விலை உயர்ந்த பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே தற்போது இந்த சேவை பயன்படுத்த கிடைக்கிறது. இருப்பினும், இன்றைய காலத்தில் பிரீமியம் மற்றும் மிட்-பட்ஜெட் செக்மென்ட் போன்களிலும் eSIM சேவைக்கான ஆதரவை மக்கள் பெற துவங்கியுள்ளனர். இதனால், eSIM சேவையின் தேவை அதிகரித்து வருகிறது. eSIM சேவை இணக்கமான மொபைல் வாடிக்கையாளர்கள் eSIM ஐ தங்கள் முதன்மை சிம் (primary SIM) ஆக வைத்திருக்கின்றனர் என்பதனால் பிஎஸ்என்எல் நிறுவனமும் இதில் களமிறங்கவுள்ளது.
பிஎஸ்என்எல் eSIM சேவை வரும் மார்ச் 2025 இல் அறிமுகம் செய்யப்படும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மாத காலத்திற்குள் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் இ-சிம் சேவையை பயன்படுத்தலாம் என்று நிறுவனம் கூறியுள்ளது. இதற்கு நடுவே பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் பான் இந்தியா 4ஜி நெட்வொர்ஜ் சேவையை (BSNL pan India 4G network service) விரிவுபடுத்தும் வேலையை முழுவீச்சில் நடத்தி வருகிறது.
பிஎஸ்என்எல் பான் இந்தியா 4ஜி நெட்வொர்ஜ் சேவையை (BSNL pan India 4G network service):
1 லட்சம் புதிய 4ஜி டவர்களை நிறுவும் பணி முடிவடையும் தருணத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 2025 இல் இந்தியா முழுக்க பிஎஸ்என்எல் 4ஜி கிடைக்குமென்று கூறப்படுகிறது. 4ஜி நெட்வொர்க்குக்கு BSNL மாறியபிறகும் மலிவான விலையில் அதன் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பைட் திட்டங்களை வழங்கும் என்று கூறப்படுகிறது. இதனால், அடுத்த ஆண்டில் இன்னும் அதிகமான வாடிக்கையாளர்களை BSNL ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications








