கேபிள் TV கதம் கதம்.. மாதம் ரூ.166 போதும்.. BSNL-ன் 90 நாள் பிளான்.. எந்த திட்டம்? என்னென்ன நன்மை?
இந்திய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் டெலிகாம் ஆபரேட்டர் ஆன பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது ஐபிஎல் 2026 (IPL 2026) கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பிக்கும் நேரம் பார்த்து சரியாக அதன் "90 நாள் வேலிடிட்டி திட்டம்" (90 Days Validity Plan) ஒன்றை விளம்பரப்படுத்த தொடங்கி உள்ளது.
அது ரூ.499 மதிப்புள்ள பிஎஸ்என்எல் எண்டர்டெயின்மென்ட் பேக் (BSNL Rs.499 Entertainment Pack) ஆகும். இது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஓடிடி பேக் ஆகும். இதன் கீழ் ஐபிஎல் 2026 போட்டிகளை லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய உதவும் ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar), சோனி லைவ் (SonyLIV) மற்றும் ஜீ5 (ZEE5) ஆகிய ஓடிடி தளங்களுக்கான இலவச அணுகல்கள் கிடைக்கும்.

பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் எக்ஸ் (X) பக்கம் வழியாக பகிர்ந்துள்ள விவரங்களின் படி, ரூ.499 திட்டத்தின் கீழ் கிடைக்கும் 3 ஓடிடி தளங்களையும் 2 ஸ்க்ரீன்களில் காணலாம். முன்னரே குறிப்பிட்டப்படி இந்த திட்டம் 90 நாட்கள் என்கிற வேலிடிட்டியை கொண்டுள்ளது. அதாவது மாதாந்திரம் ரூ.166 என்கிற செலவின் கீழ் 3 மாதங்களுக்கு இந்த திட்டத்தை பயன்படுத்தலாம்.
இந்த திட்டத்தை "கேபிள் டிவி கட்டர்" என்றும் கூறலாம். ஏனென்றால், இதன் கீழ் கிடைக்கும் ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar), சோனி லைவ் (SonyLIV) மற்றும் ஜீ5 (ZEE5) ஆகிய 3 தளங்களுமே தற்போது தமிழ் மொழியில் வெளியாகும் பெரும்பாலான மற்றும் பிரபலமான டிவி சீரியல்களை பார்க்க அனுமதிக்கின்றன.
பிஎஸ்என்எல் சிஎன்ஏபி: இந்நிறுவனம் தொடர்பான மற்ற சமீபத்திய அப்டேட்களை பொறுத்தவரை பிஎஸ்என்எல்-ன் கீழ் சிஎன்ஏபி என்கிற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்படவுள்ளது சிஎன்ஏபி (CNAP) என்பது காலர் நேம் பிரசன்டேஷன் (Caller Name Presentation) என்பதன் சுருக்கம் ஆகும். பெயர் குறிப்பிடுவது போலவே இது - உங்களுடைய பிஎஸ்என்எல் நம்பருக்கு யார் போன் செய்கிறார்களோ, அவர்களுடைய பெயரை காட்சிப்படுத்தும் ஒரு அம்சம் ஆகும்.
இந்த வசதிக்கு கூடுதல் சந்தா கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியது இல்லை; முற்றிலும் இலவசமாக கிடைக்கும் சேவையாக இருக்கும் . இந்தியாவில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் சந்தாதாரர்களுக்காக இந்த அம்சத்தை செயல்படுத்தியுள்ளன. இப்போது அந்த பட்டியலில் இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமும் இணைகிறது; கூடிய விரைவில் இந்த அம்சத்தை நாடு தழுவிய அளவில் அறிமுகப்படுத்த உள்ளது.
பிஎஸ்என்எல் - வி கூட்டணி: முன்னதாக பிஎஸ்என்எல் மற்றும் வோடாபோன் ஐடியா ஆகிய இரண்டும் - இனிமேல் தங்கள் நெட்வொர்க்குகளை உருவாக்கும் விதத்தை மாற்றக்கூடிய ஒரு கூட்டாண்மையை ரகசியமாக ஆராய்ந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. மின்ட் பத்திரிகையின் அறிக்கையின்படி, இவ்விரு நிறுவனங்களும் டவர்களை மட்டுமல்லாமல், ஃபைபர் மற்றும் "ஒருவேளை" ஸ்பெக்ட்ரத்தையும் கூடப் பகிர்ந்துகொள்வது குறித்து ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக - இவ்விரு டெலிகாம் நிறுவனங்களுமே - இதற்கு மேல் வேறு வழியில்லை என்கிற மிகவும் அவசியமான சூழ்நிலையில் மட்டுமே செய்ய கூடிய கட்டத்திற்குள் நுழைகின்றன. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்களிடம் பயனாளர்களை இழந்த பிறகு, வோடாபோன் ஐடியா நிறுவனமானது தன்னை நிலைப்படுத்திக்கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கும் வேளையிலும், தனது நெட்வொர்க்கை மேம்படுத்துவதற்காக ரூ.45,000 கோடி மதிப்பிலான திட்டத்தை வகுத்து வரும் வேளையிலும் இந்த "கூட்டணி" நிகழ்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications








