தமிழ்நாடு பயனர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த பிஎஸ்என்எல் நிறுவனம்.!

|

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து சிறப்பான சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி இந்நிறுவனம் தனது ரூ.135 ப்ரீபெய்ட் வவுச்சருக்கு கூடுதல் அழைப்பு சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த டெலிகாம் ஆபரேட்டர் விளம்பர சலுகையின் கீழ் அதன் நான்கு பிரீபெய்ட் திட்டங்களின் செல்லுபடியையும் அதிகரித்துள்ளது.

300 நிமிட அழைப்பு நன்மைகளை அளித்தது என்பது குறிப்பிடத்தக்

தற்போது பிஎஸ்என்எல் ரூ.135 பிரீபெய்ட் வவுச்சர் ஆனது 1440 நிமிட ஆஃப்-நெட் மற்றும் ஆன்-நெட் அழைப்பை வழங்குகிறது. முன்னதாக இதே பிரீபெய்ட் திட்டம் 300 நிமிட அழைப்பு நன்மைகளை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு எம்.டி.என்.எல் மும்பை, எம்.டி.என்.எல் டெல்லி உட்பட எந்த நெட்வொர்க் உடனும் இது அழைப்பு நன்மைகளை வழங்கும். இந்த திட்டம் 24 நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது.

புதிய சலுகையை பிஎஸ்என்எல்

மேலும் இந்த புதிய சலுகையை பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு சுற்றறிக்கை மூலம் மக்களுக்கு அறிவித்துள்ளது. கூடுதல் நன்மைகள் சேர்க்கப்பட்டாலும் கூட திட்டத்தின் செல்லுபடியாகும் காலத்தில் எந்த மாற்றமும் இருக்காது. டெலிகாம் டாக் வலைத்தளம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இப்போது கூடுதலாக நீட்டிக்கப்பட்ட நிமிடங்கள் சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டாரங்களில் உள்ள பயனர்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கும்.

மீண்டும் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி: பிளிப்கார்ட் தசரா விற்பனை அறிவிப்பு!

முதல் 2020 நவம்பர் 30

அதேபோல் பிஎஸ்என்எல் அதன் நான்கு பிரீபெய்ட் திட்டங்களின் செல்லுபடியை அதிகரித்துள்ளது. இது 2020 அக்டோபர் 17 முதல் 2020 நவம்பர் 30 வரை செல்லுபடியாகும் ஒரு விளம்பர பண்டிகை சலுகையாகும். குறிப்பாக இந்த சலுகை ரூ.1999, ரூ.699, ரூ.247 மற்றும் ரூ.147 பிரீபெய்ட் திட்டங்களில் அணுக கிடைக்கும் மற்றும் இந்த சலுகை நாடு முழுவதும் செல்லுபடியாகும்.

ரூ.1999 பிரீபெய்ட்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1999 பிரீபெய்ட் திட்டமானது இப்போது 425 நாட்கள் என்கிற செல்லுபடியை வழங்குகிறது. முன்னதாக இது 365 நாட்கள் என்கிற செல்லுபடியை வழங்கியது. இந்த திட்டம் தினசரி 3ஜிபி டேட்டாவுடன் பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் மற்றும் இரண்டு மாதங்களுக்கான ஈரோஸ் என்டர்டெயின்மென்ட் சந்தா போன்ற நன்மைகளுடன் வருகிறது.

நிறுவனத்தின் ரூ.699

அடுத்து பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.699 பிரீபெய்ட் திட்டம் ஆனது இப்போது 180 நாட்கள் செல்லுபடியை வழங்குகிறது. முன்னதாக இது 160 நாட்கள் என்கிற என்கிற செல்லுபடியை வழங்கியது. இந்த திட்டம் வரம்பற்ற அழைப்புகள், ஒரு நாளைக்கு 0.5 ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் ஆகியவற்றை வழங்குகிறது.

ரூ.247 பிரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.247 பிரீபெய்ட் திட்டம் ஆனது இப்போது 40 நாட்கள் செல்லுபடியை வழங்குகிறது. முன்னதாக இது 30 நாட்கள் என்கிற என்கிற செல்லுபடியை வழங்கியது. இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும்.

நிறுவனத்தின் ரூ.147

கடைசியாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.147 பிரீபெய்ட் திட்டம் ஆனது இப்போது 35 நாட்கள் செல்லுபடியை வழங்குகிறது. முன்னதாக இது 30 நாட்கள் என்கிற என்கிற செல்லுபடியை வழங்கியது. இந்த திட்டத்தில் 10 ஜிபி அளவிலான மொத்த டேட்டா மற்றும் 30 நாட்களுக்கு பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் போன்ற நன்மைகள் கிடைக்கும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
BSNL Enhances STV 135 Voucher, Users to Get Additional Minutes and More Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X