Home
News

BSNL 4G-ஐ கட்டாயமாக்க வேண்டும்.. மோடிக்கு பரபரப்பு கடிதம்.. யார் அனுப்பினார்கள்? ஏன்?

இந்திய அரசாங்கத்தின் கீழ் செயல்படும், பிஎஸ்என்எல் (BSNL) என்று சுருக்கமாக அழைக்கப்படும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) ஆனது, சுமார் 1 லட்சம் தளங்களில் 4ஜி சேவையை (BSNL 4G Service) தொடங்கியுள்ளது. இந்த தளங்களில் பெரும்பாலானவை இப்போது செயல்பாட்டில் உள்ளன.

இதற்கிடையில், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் (BSNL employee union) ஆனது அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு ஊழியர்களும் (All Government offices and employees) பிஎஸ்என்எல் 4ஜி சேவையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளது.

BSNL 4G-ஐ கட்டாயமாக்க வேண்டும்.. மோடிக்கு பரபரப்பு கடிதம்!

அரசு அலுவலகங்கள் ஏற்கனவே பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இணைப்புகளை (BSNL broadband connections) தான் பயன்படுத்துகின்றன. இப்போது ஊழியர் சங்கம், அலுவலகங்கள் மற்றும் அதன் ஊழியர்களும், அவர்களுடைய மொபைல் இணைப்பிற்கும் (Mobile Connections) கூட கட்டாயமாக பிஎஸ்என்எல் 4ஜி-ஐ பயன்படுத்த வேண்டும் என்று கோருகிறது.

"பொது நிதியிலிருந்து செலவு திரும்ப பெறப்படும் இடங்களில் - மத்திய மற்றும் மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட - அனைத்து மொபைல் இணைப்புகளுக்கும், பிஎஸ்என்எல்லின் ஸ்வதேசி 4ஜி சேவைகளை கட்டாயமாக்குவது பரிந்துரைக்கப்படுகிறது" என்று பாரதீய தூர்சஞ்சார் மஞ்சின் (Bharatiya Doorsanchar Manch) தலைவர் ரவி ஷில் வர்மா மற்றும் கன்வீனர் ஆர்சி பாண்டே ஆகியோர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இந்த சங்கம் BTEU, AIGETOA, BDPS மற்றும் AIBSNLOBCEWA உட்பட பல பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. "இந்த நடவடிக்கை இந்தியாவின் தொலைத்தொடர்பு இறையாண்மையை வலுப்படுத்துவதிலும், ஆத்மநிர்பர் பாரத் என்ற கனவை நனவாக்குவதிலும் ஒரு மைல்கல்லாக அமையும்" என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கட்டாயம் தேசிய பாதுகாப்பு மற்றும் தரவு இறையாண்மையை ஆதரிப்பதோடு, பிஎஸ்என்எல்லுக்கு நிதி ஆதரவையும் வழங்கும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

BSNL-ன் மறைமுக விலை உயர்வு: சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனமானது, தனது பிரபலமான ரூ.107 மற்றும் ரூ.197 பிளான் வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலத்தை குறைத்து, மறைமுகமான ரீசார்ஜ் விலை உயர்வை அமல்படுத்தியதும் இங்கே குறிப்பிடத்தக்கது. கடைசியாக நவம்பர் 2025 இல் இந்த திட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டு இருந்தது. இப்போது மீண்டும் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது

பிஎஸ்என்எல் ரூ.107 பிளான் வவுச்சர்: பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.107 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது முன்பு 200 நிமிட வாய்ஸ் கால்களையும், அன்லிமிடெட் டேட்டாவையும் (அதாவது 3ஜிபி டேட்டாவிற்கு மேல் இண்டர்நெட் ஸ்பீட் 40 கேபிஎஸ் ஆக குறைக்கப்படும்) 22 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வழங்கியது.

இப்போது, ​​ரூ.107 திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 22 நாட்களில் இருந்து 20 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில், இந்த திட்டம் 35 நாட்கள் என்கிற வேலிடிட்டியை வழங்கியதும் இங்கே குறிப்பிடத்தக்கது, அது பின்னர் 30 நாட்களாகவும், பிறகு 28 நாட்களாகவும், பின்னர் 22 நாட்களாகவும் குறைக்கப்பட்டு, இப்போது வெறும் 20 நாட்களாக்கு இறங்கி வந்த உள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.197 ப்ரீபெய்ட் பிளான் வவுச்சர்: பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ 197 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது, தற்போது 35 நாட்கள் திருத்தப்பட்ட செல்லுபடியாகும் காலத்தை (முன்பு 42 நாட்கள்) வழங்குகிறது. அதனுடன் 300 நிமிட வாய்ஸ் கால்கள், வரம்பற்ற டேட்டா (5ஜிபி டேட்டாவிற்கு மேல் இண்டர்நெட் ஸ்பீட் 40 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்), மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவை நன்மைகளையும் வழங்குகிறது.

முன்னதாக இந்த செல்லுபடியாகும் காலம் 42 நாட்களாக இருந்தபோது, ​​இந்த திட்டத்தில் 4ஜிபி டேட்டா சேர்க்கப்பட்டிருந்தது; இது இப்போது 1ஜிபி அதிகரிக்கப்பட்டுள்ளது. முதலில் 54 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தை வழங்கிய இந்த திட்டம், பின்னர் 48 நாட்களாகவும், பிறகு 42 நாட்களாகவும், இப்போது 35 நாட்களாகவும் குறைக்கப்பட்டுள்ளது என பிஎஸ்என்எல் இணையதளம் தெரிவிக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL employee union Urge PM Modi to direct All Government offices employees to use Only BSNL 4G
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X