Home
News

லட்சுமி வெடியை போட்ட BSNL.. அடுத்த 3 மாசத்துக்கு ரூ.100 தள்ளுபடி.. மொத்தம் ரூ.300 லாபம்.. எந்த திட்டத்தில்?

ரூ.1 க்கு அறிவிக்கப்பட்டுள்ள பிஎஸ்என்எல் தீபாவளி ஆபரை தூக்கி சாப்பிடும் படியாக இன்னொரு புதிய பிஎஸ்என்எல் தீபாவளி ஆபர் (BSNL Diwali Offer 2025) அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் ஒரு குறிப்பிட்ட மாதாந்திர ரீசார்ஜிற்கு அடுத்த 3 மாதங்களுக்கு ரூ.100 தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அது பிஎஸ்என்எல் ஃபைபர் பேஸிக் பிளான் ஆகும். இந்த திட்டத்தின் அசல் விலை ரூ.499 ஆகும். ஆனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இது ரூ.100 தள்ளுபடியை பெற்று ரூ.399 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்று பிஎஸ்என்எல் அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளம் வழியாக அறிவித்துள்ளது.

லட்சுமி வெடியை போட்ட BSNL.. அடுத்த 3 மாசத்துக்கு ரூ.100 தள்ளுபடி!

இதுகுறித்த எக்ஸ் தள பதிவில் "ரூ.399 க்கு 3300 ஜிபி டேட்டாவை அனுபவிக்கவும் (3 மாதங்களுக்கு ரூ.100 தள்ளுபடி) - இந்தியா முழுவதும் அதிவேக 60 எம்பிபிஎஸ் இணையம்! அனைத்து வட்டங்களிலும் இந்த சலுகை செல்லுபடியாகும்" என்று பிஎஸ்என்எல் நிறுவனம் கூறியுள்ளது.

பிஎஸ்என்எல் குறிப்பிடுவது போலவே ரூ.399 (தள்ளுபடி செய்யப்பட்ட விலை) திட்டத்தின் கீழ் 3.3டிபி அல்லது 3300ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் 60 எம்பிபிஎஸ் ஆகும். டேட்டா லிமிட்டை தாண்டிய பின்னர் இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீடா ஆனது 4 எம்பிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

பிஎஸ்என்எல் ரூ.1 தீபாவளி ஆபர் குறித்த விவரங்கள்: 2025 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அரசாங்கத்திற்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அருமையான புதிய சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகை அக்டோபர் 15 ஆம் தேதி முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு "வெறும் ரூ.1 க்கு" 4ஜி சேவையை வழங்குகிறது.

ரூ.1 திட்டத்தில் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இந்த திட்டம் பயனர்கள் பிஎஸ்என்எல்-ன் 4ஜி நெட்வொர்க் கவரேஜ் மற்றும் சேவைகளை முழுமையாக அனுபவிக்க அனுமதிக்கும் ஒரு விரிவான தொகுப்பை வழங்குகிறது. இதன் கீழ் இந்தியாவிற்குள் வரம்பற்ற வாய்ஸ் கால்கள், டெய்லி 2ஜிபி அதிவேக டேட்டா, டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் 1 இலவச சிம் கார்டு ஆகியவைகள் கிடைக்கும்.

சில மாதங்களுக்கு பின்னர் இதேபோன்ற திட்டம் மிகவும் வெற்றிகரமாக பலரையும் சென்றடைந்ததால், பிஎஸ்என்எல் நிறுவனம் மீண்டும் இந்த விளம்பர சலுகையை மிகவும் நம்பிக்கையுடன் கொண்டு வந்துள்ளது. நினைவூட்டும் வண்ணம் ஆகஸ்ட் 2025 இல் இதேபோன்ற ரூ.1 திட்டம் ரீசார்ஜ் செய்ய கிடைத்தது

இது நிறைய புதிய சந்தாதாரர்களை பெற உதவியது, இதன் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனமானது தனியார் டெலிகாம் நிறுவனமான ஏர்டெல்லை விஞ்சி புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதன் அடிப்படையில் இரண்டாவது பெரிய மொபைல் சேவை வழங்குநராக உருமாறியது. அந்த நேரத்தில், பிஎஸ்என்எல் 1,38,000 க்கும் மேற்பட்ட புதிய பயனர்களை சேர்த்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.

வெறும் ரூ.99 க்கு கூட சிம் கார்ட்டை ஆக்டிவ் ஆக வைத்துக்கொள்ள முடியும்: பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம் உள்ளது. நன்மைகளை பொறுத்தவரை பிஎஸ்என்எல்-ன் ரூ.99 திட்டம் ஆனது அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மற்றும் "அன்லிமிட்ட் டேட்டா" உடன் வருகிறது.

உண்மையில் இதன் கீழ் 50எம்பி டேட்டா மட்டுமே ஹை-ஸ்பீட் டேட்டாவாக கிடைக்கும். அதன் பிறகு 40 கேபிபிஎஸ் என்கிற ஸ்பீடின் கீழ் டேட்டா கிடைக்கும். மலிவான விலைக்கு, வாய்ஸ் கால் நன்மைகள் மட்டுமே தேவைப்பட்டால் அல்லது ரூ.100 க்குள் என்கிற பட்ஜெட்டில் உங்கள் சிம் கார்ட்டை ஆக்டிவ் ஆக வைத்திருக்க விரும்பினால் - இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Diwali Offer 2025 Fiber Basic Plan Get Rs 100 Off for 3 Months Now 3300GB Data For Rs 399
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X