Home
News

மிஸ் பண்ணிடாதீங்க.. BSNL பயனர்களுக்கு கிடைக்கும் இலவச டேட்டா.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?

பிஎஸ்என்எல் (BSNL) பயனர்களுக்கு இந்த தீபாவளி வேற லெவலில் இருக்க போகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது சில ரீசார்ஜ் திட்டங்களுடன் 3ஜிபி மற்றும் 75ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. எந்த திட்டத்தில் எவ்வளவு இலவச டேட்டா கிடைக்கும் என்று விபரங்கள் இதோ.

BSNL தனது பயனர்களுடன் ஒரு சிறப்பு டேட்டா சலுகையை இப்போது அறிமுகம் செய்துள்ளது. தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனமானது, தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.251 மற்றும் அதற்கு மேலான சில திட்டங்களுடன் கூடுதல் டேட்டாவை வழங்குவதாக அறிவித்துள்ளது.

மிஸ் பண்ணிடாதீங்க.. BSNL பயனர்களுக்கு கிடைக்கும் இலவச டேட்டா..

இலவச டேட்டா கிடைக்கும் BSNL ரீசார்ஜ் திட்டங்கள்:

ரூ.251 ரீசார்ஜ் வவுச்சர் மற்றும் இன்னும் 3 கூடுதல் திட்டங்களுடன் பிஎஸ்என்எல் நிறுவனம் இலவச டேட்டாவை வழங்குகிறது. தீபாவளி நெருங்கி வருவதால், BSNL அதன் பயனர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் இணைந்திருப்பதை எளிதாக்க அட்டகாசமான நன்மையை அறிவித்துள்ளது. தற்போது, ​​ரூ.251 ரீசார்ஜ் செய்தால் கூடுதல் டேட்டா சலுகையைப் பெறலாம்.

அதேபோல், பிஎஸ்என்எல் பயனர்கள் ரூ. 299 திட்டம் மற்றும் ரூ. 398 திட்டத்துடனும் கூடுதல் இலவச டேட்டாவை பெற முடியும் என்று நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எக்ஸ் என்று பெயர் மாற்றப்பட்ட டிவிட்டர் இல் BSNL நிறுவனம் தொடர்ச்சியான சில பதிவுகளை பதிவிட்டுள்ளது. இதில் (@BSNLCorporate) தீபாவளி பொனான்சாவுக்கான சிறப்பு டேட்டா சலுகை பற்றிய விபரங்களை அறிவித்துள்ளது.

பிஎஸ்என்எல் செல்ப்-கேர் (BSNL Self-care) ஆப் அல்லது போர்ட்டலைப் பயன்படுத்தி பிஎஸ்என்எல் பயனர்கள் தங்கள் எண்ணை ரீசார்ஜ் செய்தால் மட்டுமே கூடுதல் டேட்டாவைப் பெற முடியும் என்பதை நினைவில் கொள்ளவும். ஆம், ஆப்ஸ் அல்லது அதிகார்பூர்வ ஆன்லைன் தளம் வழியாக ரீசார்ஜ் செய்தால் மட்டுமே இந்த இலவச டேட்டாவை பெற முடியும். பிஎஸ்என்எல் ரீசார்ஜில் ரூ. 251, BSNL கூடுதல் 3GB டேட்டாவை அறிவித்தது.

இது ஜிங் (Zing) உடன் திட்டத்துடன் வரும் 70GB டேட்டாவை விட அதிகமாகும். ரூ. 252 ரீசார்ஜ் வவுச்சர் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். அதன் பிறகு கூடுதல் டேட்டாவும் காலாவதியாகும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கிடையில், கூடுதல் நன்மை வேண்டுமென்ற பயனர்கள், தங்கள் எண்ணை ரீசார்ஜ் செய்ய ரூ. 299 ரீசார்ஜ் வவுச்சரை பயன்படுத்தலாம்.

டெலிகாம் நிறுவனம் மற்றொரு 3ஜிபி இலவச டேட்டாவை அறிவித்துள்ளது. கூடுதல் டேட்டா போனஸை BSNL Self-care ஆப் மூலம் மட்டுமே திறக்க முடியும். ரூ. 299 ரீசார்ஜ் திட்டம் ஏற்கனவே ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி குரல் அழைப்புகளுடன் 30 நாட்கள் செல்லுபடியாகும்.

தீபாவளி போனான்ஸா சலுகையில் சேர்க்கப்படும் சமீபத்திய ரீசார்ஜ் திட்டம் ரூ. 398 வவுச்சர் ஆகும். இது 3ஜிபி கூடுதல் டேட்டாவைத் தருவதோடு, பிஎஸ்என்எல் ஏற்கனவே இந்த ரீசார்ஜ் திட்டத்தில் வரம்பற்ற எஸ்டிடி மற்றும் உள்ளூர் குரல் அழைப்புகளை வழங்குகிறது. இது முழு செல்லுபடியாகும் காலத்திற்கு 120ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இதன் வவுச்சர் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும். இது தினசரி 100 SMSநன்மையை வழங்குகிறது.

இந்த நன்மைகளை பிஎஸ்என்எல் பயனர்கள் எந்தவித தடையும் இல்லாமல் பெற வேண்டும் என்றால், ஆப் ஸ்டோர் மற்றும் ப்ளே ஸ்டோர் இரண்டிலும் பிஎஸ்என்எல் செல்ப்-கேர் ஆப்ஸைப் பதிவிறக்கம் செய்து ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பதை மீண்டும் ஒரு நினைவுபடுத்துகிறோம். இந்த பண்டிகை காலத்தை, சிறந்த நன்மையோடு குறைந்த விலையில் கொண்டாடுங்கள்.

Best Mobiles in India

English summary
BSNL Diwali Bonanza Offer Get Free 3GB Data With Rs 251 Rs 299 Rs 398 Prepaid Recharge Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X