சத்தமில்லாமல் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலைகுறைப்பு.! இதோ அந்த திட்டங்கள்.!

|

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து சிறப்பான திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனங்கள் அறிமுகம் செய்யும் சில ப்ரீபெய்ட் திட்டங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் மூன்று திட்டங்களின் விலையை குறைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.

 விலைகுறைக்கப்பட்ட

குறிப்பாக இப்போது விலைகுறைக்கப்பட்ட திட்டங்கள் மிகவும் மலிவு விலை திட்டங்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டங்களின்புதிய விலைகள் அக்டோபர் 18, 2021 முதல் நடைமுறைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டன. இப்போது அந்த
திட்டங்களின் முழுவிவரங்களையும் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.56 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.56 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.56 எஸ்.டி.வி திட்டத்தை அதிக பயனர்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த திட்டத்திற்கு ரூ.2 விலைகுறைப்பு
அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இனிமேல் இந்த திட்டம் ரூ.54-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தின்நன்மைகள் குறித்து பார்க்கையில் 8 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 5600 வினாடிகள் அழைப்பு நேரத்துடன் வருகிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.

பிரமிக்க வைக்கும் கீழடி: பாண்டிய மன்னனின் 'மீன்' சின்னத்துடன் உறைக்கிணறு.. சங்ககாலத்தின் சான்றா இது?பிரமிக்க வைக்கும் கீழடி: பாண்டிய மன்னனின் 'மீன்' சின்னத்துடன் உறைக்கிணறு.. சங்ககாலத்தின் சான்றா இது?

பிஎஸ்என்எல் ரூ.57 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.57 திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.57 எஸ்.டி.வி ஆனது ரூ.1 என்கிற விலைகுறைப்பை பெற்றுள்ளது. எனவே இந்த திட்டம் இனிமேல் ரூ.56-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் பயனர்களுக்கு 10ஜிபி டேட்டா, ஸிங் என்டர்டெயின்மென்ட் ம்யூசிக்கிற்கான இலவச சந்தாபோன்ற நன்மைகள் கிடைக்கும். இதுதவிர ரூ.56 திட்டத்தின் வேலிடிட்டி 10 நாட்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.6999 மட்டுமே- ரூ.10,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள் இதுதான்- அமேசானில் புகுந்து விளையாடுங்கரூ.6999 மட்டுமே- ரூ.10,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள் இதுதான்- அமேசானில் புகுந்து விளையாடுங்க

பிஎஸ்என்எல் ரூ.58 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.58 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.58 எஸ்.டி.வி ஆனது ரூ.1 என்கிற விலைகுறைப்பை பெற்றுள்ளது. எனவே இந்த திட்டம் இனிமேல்ரூ.57-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். அதேபோல் இந்ததிட்டம் ப்ரீபெய்ட் சர்வதேச ரோமிங் பேக்கை ஆக்டிவேட் செய்ய அல்லது அதை நீட்டிக்கும் வசதியையும் வழங்குகிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர கால் அழைப்பு நன்மைகளையும் வழங்குகிறது ரூ.57 திட்டம். மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் அதிக டேட்டா நன்மையை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.

இது யோகா பதிப்பு பாஸ்- 7500 எம்ஏஎச் பேட்டரி உடன் லெனோவா யோகா டேப் 11 அறிமுகம்: உயர்ரக அம்சங்கள் சரியான விலை!இது யோகா பதிப்பு பாஸ்- 7500 எம்ஏஎச் பேட்டரி உடன் லெனோவா யோகா டேப் 11 அறிமுகம்: உயர்ரக அம்சங்கள் சரியான விலை!

 பிஎஸ்என்எல் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. மேலும்இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த திட்டத்தில்தினசரி டேட்டா நுகர்வுக்குப் பிறகு, இணைய வேகம் 80 Kbps ஆக குறைக்கப்படும். பின்பு ரூ.187 ப்ரீபெய்ட் திட்டத்தின்வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

ரூ.10,000 விலைப்பிரிவில் 4ஜிபி ரேம், 5000 mAh பேட்டரி உடன் அட்டகாச ஸ்மார்ட்போன்- ஹூவாய் என்ஜாய் 20இ அறிமுகம்!ரூ.10,000 விலைப்பிரிவில் 4ஜிபி ரேம், 5000 mAh பேட்டரி உடன் அட்டகாச ஸ்மார்ட்போன்- ஹூவாய் என்ஜாய் 20இ அறிமுகம்!

பிஎஸ்என்எல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் எஸ்டிவி ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தில் தனிசரி 2ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் உள்ளது. இது தவிர தினசரி 100 எஸ்எம்எஸ், ஜிங் மற்றும் பிஎஸ்என்எல் ட்யூன்களின் கூடுதல் நன்மைகளும் இந்த திட்டத்தில் உள்ளன. அதேபோல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ.599 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.599 திட்டம்

பிஎஸ்என்ல் வழங்கும் STV_WFH_599 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 5ஜிபி டேட்டா மற்றம் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா நுகர்வுக்குப் பிறகு, இணைய வேகம்80 Kbps ஆக குறைக்கப்படும். அதேபோல் தினசரி 100 எஸ்எம்எஸ், ஜிங்கின் கூடுதல் நன்மைகள் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான பிஎஸ்என்எல் ரூ.599 திட்டம்.
குறிப்பாக பிஎஸ்என்எல் ரூ.599 திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
BSNL discounts on three prepaid plans! Here is the full details.: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X