அவ்ளோ தான் முடிஞ்சது.. இனி BSNL நம்பர்களில் இந்த சேவை கிடைக்காது.. எந்த ரீசார்ஜிலும் கிடைக்காது!
பிஎஸ்என்எல் (BSNL) கஸ்டமர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு சேவை சத்தம் இல்லாமல் நிறுத்தப்பட்டு உள்ளது. தற்போது அந்த சேவை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் எந்த திட்டங்களிலும் இல்லை. அது என்ன சேவை? ஏன் நிறுத்தப்பட்டது? இதோ விவரங்கள்:
பிஎஸ்என்எல் நிறுவனம் ஆனது பிஆர்பிடி (PRBT) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பெர்சனலைஸ்டு ரிங்பேக் டோன் (Personalised Ringback Tone) சேவையை நிறுத்தி உள்ளது; ஷட்டவுன் செய்துள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி, இது பிஎஸ்என்எல் சந்தாதாரர்களிடையே மிகவும் பிரபலமான அம்சமாகும்.

இடி டெலிகாம் வழியாக கிடைத்த அறிக்கையின்படி, பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் பிஆர்பிடி சேவையை கடந்த மாதம் அமைதியான முறையில் நிறுத்தப்பட்டது. மேலும் பிஎஸ்என்எல் அதன் எந்தவொரு ரீசார்ஜ் பேக்குகளுடனும் இந்த சேவையை வழங்குவதையும் நிறுத்திவிட்டது.
பிஆர்பிடி சேவை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, பிஎஸ்என்எல்-இன் கஸ்டமர் கேர் மையங்கள் ஏராளமான புகார்களையும், கேள்விகளையும் பெற்றதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக வணிகத்திற்காக அல்லது பெர்சனலைஸ்டு காலர் அனுபவங்களுக்காக பிஆர்பிடியை நம்பியிருந்த பயனர்களிடமிருந்து அதிக புகார்கள் எழுந்துள்ளது.
பிஆர்பிடி சேவைக்கு பதிலாக, பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் நெக்ஸ்ட் ஜெனெரஷன் ஏஐ அடிப்படையிலான தளத்தை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த கிளவுட்-நேட்டிவ் சொல்யூஷன் ஆனது வாடிக்கையாளர் சார்ந்த மற்றும் விளம்பரங்களால் நிதியளிக்கப்பட்ட மாடலில் கட்டமைக்கப்படும், இது தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு ஒரு புதிய வருவாய் ஓட்டத்தை உருவாக்கும்.
பிஎஸ்என்எல் தலைவர் ஏ. ராபர்ட் ரவியின் கூற்றுப்படி, வரவிருக்கும் புதிய அமைப்பானது ஏஐ ஆல் இயக்கப்படும் பெர்சனலைஸ்டு அனுபவங்களை வழங்கும் மற்றும் ஓடிடி ஆப்களுடன் தடையின்றி ஒருங்கிணைக்கப்படும். இந்த ஏஐ-பவர்டு காலர் எக்ஸ்பீரியன்ஸ் ஆனது மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக மட்டுமல்லாமல், டிஜிட்டல் யுகத்தில் வளர்ந்து வரும் பயனர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யம்.
பிஎஸ்என்எல் தொடர்பான மற்ற லேட்டஸ்ட் அப்டேட்களை பொறுத்தவரை.. 2025 அன்னையர் தினத்தை (Mother's Day 2025) கொண்டாடும் விதமாக பிஎஸ்என்எல் நிறுவனம், அதன் 3 ரீசார்ஜ் பிளான்கள் மீது 5% தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது இந்த சலுகை மே 14 ஆம் தேதி வரை அணுக கிடைக்கும். இதன்கீழ் 3 திட்டங்கள் அசல் விலையை விட குறைக்கப்பட்ட தள்ளுபடி விலையின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்,.
பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்ட் வழியாக, அதன் 3 ரீசார்ஜ் திட்டங்களில் 5% தள்ளுபடியை அறிவித்துள்ளது. அந்த திட்டங்கள் ரூ.2399, ரூ.997 மற்றும் ரூ.599 ரீசார்ஜ் திட்டங்கள் ஆகும். இந்த 3 திட்டங்களும் தற்போது 5% தள்ளுபடி விலையில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. பிஎஸ்என்எல்-ன் செல்ப் கேர் ஆப் அல்லது பிஎஸ்என்எல் -ன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக ரீசார்ஜ் செய்தால் மட்டுமே இந்த தள்ளுபடி கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தை போலவே ஏர்டெல் நிறுவனமும் கூட அதன் காலிங் சேவையில் ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது: ஏர்டெல் நிறுவனம் பிஸ்னஸ் நேம் டிஸ்பிளே (Business Name Display) என்கிற புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது. இது வணிக நிறுவனங்களின் வெளிச்செல்லும் அழைப்புகளின் (Outgoing Calls) போது பெறுநரின் மொபைல் ஸ்க்ரீனில் தங்கள் பிராண்ட் பெயரை காட்ட அனுமதிக்கும் ஒரு அம்சமாகும்.
இந்த அம்சம் ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்-ஆல் இயங்கும் ஸ்பேம் பில்டர்-ஐ பயன்படுத்தி, ஏர்டெல் பயனர்களுக்கு வரும் அழைப்புகள் மற்றும் மெசேஜ்களை "சந்தேகத்திற்குரிய ஸ்பேம்" என அடையாளம் கண்டு வகைப்படுத்த, ஒரு தனியுரிம வழிமுறையை (proprietary algorithm) பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. ஸ்பேம் என்று நினைத்து அல்லது தெரியாத எண்களிலிருந்து வரும் அழைப்புகளை புறக்கணிக்கும் பழக்கத்தால் நம்பகமான பிராண்டுகளின் முக்கியமான அழைப்புகள் தவறவிடப்படுவதை குறைக்கவே இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








