Home
News

BSNL SIM இருக்கா? கவனியுங்க.. ஜனவரி 15 முதல் இன்டர்நெட் சேவை நிறுத்தம்.. யாருக்கெல்லாம் பாதிப்பு? தீர்வு என்ன?

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) சமீபத்தில் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு பல மில்லியன் வாடிக்கையாளர்களை கவலை அடைய செய்துள்ளது. பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் வரும் ஜனவரி 15, 2025 ஆம் தேதி முதல் அதன் பிஎஸ்என்எல் 3ஜி சிம் கார்டு (BSNL 3G SIM Card) பயனர்களுக்கு இன்டர்நெட் சேவையை அடியோடு நிறுத்தவுள்ளதாக (BSNL will discontinue 3G service) அறிவித்துள்ளது. தொடர்ந்து இன்டர்நெட் சேவையை பயன்படுத்த பிஎஸ்என்எல் என்ன செய்ய வேண்டுமென்ற தீர்வையும் BSNL தற்போது வழங்கியுள்ளது. இது தொடர்பான தகவலை இப்போது பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு (Telecom) நிறுவனம் இந்தியாவில் அசுரர் வேகத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் விளைவாக இந்தியாவில் உள்ள பல நகரங்கள் (city) மற்றும் கிராமப்புறங்களில் (villages) பிஎஸ்என்எல் தனது நெட்வொர்க் சேவையை மேம்படுத்தி (BSNL network upgraded service) வருகிறது. குறிப்பாக, பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் 4ஜி சேவையை (BSNL 4G) நாடு முழுவதும் விரிவுபடுத்தும் திட்டத்தில் மும்முரமாக பணியாற்றி வருகிறது.

BSNL SIM இருக்கா? கவனியுங்க.. ஜனவரி 15 முதல் இன்டர்நெட் சேவை நிறுத்தம்

BSNL SIM இருக்கா? கவனியுங்க.. ஜனவரி 15 முதல் இன்டர்நெட் சேவை நிறுத்தம்:

கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் பல புதிய மலிவு விலை திட்டங்களை அறிமுகம் செய்து, மக்களுக்கு நிறைய சந்தோஷமான செய்திகளை பகிர்ந்து வந்த பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது பல மில்லியன் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றத்தை வழங்கும்படியான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி, பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் அதன் 3ஜி சேவையை (BSNL 3G Service) நிறுத்த போவதாக அறிவித்துள்ளது.

குறிப்பாக, வரும் ஜனவரி 15, 2025 (January 15, 2025) ஆம் தேதி முதல் பிஎஸ்என்எல் நிறுவனம் பாட்னாவில் (Patna) அதன் 3ஜி சேவையை நிறுத்தவுள்ளதாக (BSNL 3G service stopped) கூறியுள்ளது. குறிப்பாக, இன்னும் பிஎஸ்என்எல்-ன் 3ஜி சிம் கார்டுடன் (BSNL 3G SIM card) சேவையை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

BSNL 3G சிம் கார்டு பயனர்களுக்கு இதனால் என்ன பாதிப்பு?

பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது 1 லட்சம் புதிய 4ஜி டவர்களை (BSNL new 4G tower installing) நிறுவும் திட்டத்தில் 75% டவர்களை நிறுவி முடிந்துவிட்டது. பிஹார் போன்ற இடங்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை முதற்கட்டமாக நிறுவனம் துவங்கியுள்ளது. இதற்கிடையே, மோதிஹாரி (Motihari), கதிஹார் (Katihar), ககாரியா (Khagaria) மற்றும் முங்கர் (Munger) போன்ற மாவட்டங்களில் 3ஜி சேவையை நிறுவனம் நிறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து, பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் பாட்னா மற்றும் சில இடங்களில் அதன் 3ஜி சேவையை நிறுத்தவிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த சேவை குறிப்பாக 3ஜி சிம் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இன்டர்நெட் சேவையை (BSNL 3G SIM Card Internet Service Discontinued) துண்டிப்பதில் இருந்து துவங்குகிறது. பிஎஸ்என்எல் 3ஜி சிம் கார்டு வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வாய்ஸ் (Voice calls) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சேவையை பயன்படுத்தலாம்.

தொடர்ந்து இன்டர்நெட் சேவையை பயன்படுத்த பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

ஆனால், ஜனவரி 15ம் தேதிக்கு பிறகு இன்டர்நெட் சேவையை தொடர்ந்து பயன்படுத்த முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்டர்நெட் சேவையை பயன்படுத்த பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் அவர்களின் 3ஜி சிம் கார்டில் இருந்து பிஎஸ்என்எல் 4ஜி சிம் கார்டிற்கு அப்கிரேட் (Upgrade Immediately to BSNL 4G SIM Card) செய்துகொள்ள வேண்டும் என்று BSNL அறிவித்துள்ளது.

புதிய பிஎஸ்என்எல் 4ஜி சிம் கார்டை (BSNL 4G SIM Card) பெற, வாடிக்கையாளர்கள் அவர்கள் வட்டத்தில் உள்ள பிஎஸ்என்எல் அழுகழகத்திற்கு நேரில் சென்று 4ஜி சிம் கார்டை வாங்கிக்கொள்ளலாம். பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களில் இன்டர்நெட் சேவை தேவையில்லை, வெறும் வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் சேவை மட்டும் கிடைத்தால் போதும் என்று கருதுபவர்கள் 4ஜி சிம் கார்டிற்கு மாறவேண்டிய அவசியமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Discontinues 3G Service For BSNL 3G SIM Card Users Upgrade To BSNL 4G SIM Soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X