ஏன்., எதுக்கு., அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள்: அதெல்லாம் எப்பவோ நீக்கியாச்சு- பிஎஸ்என்எல்!

|

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) செப்டம்பர் 1, 2021 முதல் ரூ.99 திட்டத்தை நிறுவனத்துவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பை வெளியிட்டது. பிளான் 99 ஆனது நிறுவனத்தின் போஸ்ட்பெய்ட் சலுகையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை ரூ.99 திட்டத்தை பயன்படுத்திய வாடிக்கையாளர்கள் ரூ.199 போஸ்ட்பெய்ட் திட்டத்திற்கு மாற்றப்படுவார்கள் என அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனம் அறிவித்திருந்தது. இதனால் திடீரென கூடுதல் கட்டணம் அதாவது ரூ.99 வாடிக்கையாளர்களுக்கு ரூ.199 என மாற்றம் செய்யப்பட்ட பில் அனுப்பப்படுகிறது. ரூ.99 திட்டம் நீக்கப்பட்டது அறியாத வாடிக்கையாளர்கள் இந்த கூடுதல் கட்டணம் குறித்து அதிர்ச்சி அடைந்தினர்.

ரூ.199 போஸ்ட்பெய்ட் திட்டம்

ரூ.199 போஸ்ட்பெய்ட் திட்டம்

திட்டம் 99-ல் பிஎஸ்என்எல் பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்கள் பிளான் 99-ல் இருந்த ரூ.199 போஸ்ட்பெய்ட் திட்டத்திற்கு மாற்றப்பட்டனர். கேரளா டெலிகாம் அறிக்கையின்படி, வாடிக்கையாளர்கள் ரூ.299+ ஜிஎஸ்டி செலுத்த வேண்டியிருந்தது. ரூ.199 திட்டத்துடன் வாடிக்கையாளர்கள் கூடுதலாக ரூ.100 செலுத்த வேண்டியிருந்தது. இதற்கான காரணம் குறித்து பார்க்கையில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படும் ஒருமுறை கூடுதல் பாதுகாப்பு வைப்புத் தொகையாக இருந்தது.

நிலையான மாத தொகை

நிலையான மாத தொகை

இதன்மூலம் திட்டத்தின் நிலையான மாத தொகை ரூ.199 ஆகும். ரூ.99+ ஜிஎஸ்டி செலுத்துவதற்கு பதிலாக வாடிக்கையாளர்கள் ரூ.299+ ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். ரூ.99 திட்டம் நீக்கப்பட்டது தெரியாத வாடிக்கையாளர்கள் இந்த பில் பார்த்து ஆச்சரியமடைந்தனர்.

சிறப்பான திட்டங்கள் மற்றும் சலுகைகள்

சிறப்பான திட்டங்கள் மற்றும் சலுகைகள்

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து சிறப்பான திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனங்கள் அறிமுகம் செய்யும் சில ப்ரீபெய்ட் திட்டங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் மூன்று திட்டங்களின் விலையை குறைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். பிஎஸ்என்எல் ரூ.56 எஸ்.டி.வி திட்டத்தை அதிக பயனர்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த திட்டத்திற்கு ரூ.2 விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இனிமேல் இந்த திட்டம் ரூ.54-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தின்நன்மைகள் குறித்து பார்க்கையில் 8 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 5600 வினாடிகள் அழைப்பு நேரத்துடன் வருகிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.

விலைகுறைப்பை பெற்றுள்ள பிஎஸ்என்எல் திட்டம்

விலைகுறைப்பை பெற்றுள்ள பிஎஸ்என்எல் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.57 எஸ்.டி.வி ஆனது ரூ.1 என்கிற விலைகுறைப்பை பெற்றுள்ளது. எனவே இந்த திட்டம் இனிமேல் ரூ.56-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் பயனர்களுக்கு 10ஜிபி டேட்டா, ஸிங் என்டர்டெயின்மென்ட் ம்யூசிக்கிற்கான இலவச சந்தாபோன்ற நன்மைகள் கிடைக்கும். இதுதவிர ரூ.56 திட்டத்தின் வேலிடிட்டி 10 நாட்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் ரூ.58 எஸ்.டி.வி ஆனது ரூ.1 என்கிற விலைகுறைப்பை பெற்றுள்ளது. எனவே இந்த திட்டம் இனிமேல்ரூ.57-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். அதேபோல் இந்ததிட்டம் ப்ரீபெய்ட் சர்வதேச ரோமிங் பேக்கை ஆக்டிவேட் செய்ய அல்லது அதை நீட்டிக்கும் வசதியையும் வழங்குகிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர கால் அழைப்பு நன்மைகளையும் வழங்குகிறது ரூ.57 திட்டம். மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் அதிக டேட்டா நன்மையை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. மேலும்இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த திட்டத்தில்தினசரி டேட்டா நுகர்வுக்குப் பிறகு, இணைய வேகம் 80 Kbps ஆக குறைக்கப்படும். பின்பு ரூ.187 ப்ரீபெய்ட் திட்டத்தின்வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் எஸ்டிவி ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தில் தனிசரி 2ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் உள்ளது. இது தவிர தினசரி 100 எஸ்எம்எஸ், ஜிங் மற்றும் பிஎஸ்என்எல் ட்யூன்களின் கூடுதல் நன்மைகளும் இந்த திட்டத்தில் உள்ளன. அதேபோல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும்.

Best Mobiles in India

English summary
BSNL Discontinued its Rs 99 plan: Customers shocked by New bill

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X