Home
News

சம்பவம் செய்த BSNL.. சிம் கார்டே இல்லாமல் இனி போன் பேசலாம்.. எப்படி தெரியுமா?

பிஎஸ்என்எல் (BSNL) சமீபத்தில் சிம் கார்டே இல்லாமல் போன் பேசும் சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளதாகத் தெரிவித்தது. அதாவது இந்தியாவின் சாட்டிலைட் நிறுவனமான வியாசட் (Viasat) உடன் இணைந்து பிஎஸ்என்எல் தனது டைரக்ட் டு டிவைஸ் தொழில்நுட்ப சோதனை வெற்றிகரமாக முடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால், டைரக்ட் டு டிவைஸ் (Direct to Device) எனும் தொழில்நுட்பம் ஆனது எவ்வித கேபிள் இணைப்புகள் மற்றும் செல்போன் டவர்களர் இல்லாமல் சாதனங்களை நேரடியாகச் செயற்கைக்கோள் உடன் இணைக்கப் பயன்படுகிறது. இதன் தொழில்நுட்பம் மூலம் நாம் அனைத்து இடங்களிலும் நெட்வொர்க்கை பெறமுடியும் என்று கூறப்படுகிறது.

சம்பவம் செய்த BSNL.. சிம் கார்டே இல்லாமல்  இனி போன் பேசலாம்..

அதாவது காடுகள், கடல் பான்ற பகுதிகளிலும் இருந்து கொண்டு நேரடியாக செயற்கைக்கோள் மூலம் நெட்வொர்க் பெற முடியும். பின்பு இந்த தொழில்நுட்பத்தின் மூலம் அதிவேக இணையதள நெட்வொர்க் சேவையைக் கூட பெறமுடியும் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த புதிய தொழில்நுட்பம் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு செல்போன்களில் பயன்படுத்தலாம் எனவும், சாட்லைட் போன்களை போன்றே பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இந்த அதிநவீன தொழில்நுட்பம் மூலம் ஸ்மார்ட்வாட்ச்களையும் இணைத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் Viasat நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து நடத்திய இந்த டைரக்ட் டு டிவைஸ் சோதனை வெற்றி பெற்றுள்ளதாகவும், இனி வரும் காலங்களில் இந்தியா முழுமைக்கும் இந்த சேவை விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற தொழில்நுட்பத்தை ஏற்கனவே எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் அமெரிக்கா, கனடா,இங்கிலாந்து, ஜெர்மனி,ஆஸ்திரேலியா போன்ற முக்கிய நாடுகளில் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளது.

மேலும் இந்தியாவில் பிஎஸ்என்எல் மட்டுமல்லாமல் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களும் செயற்கைக்கோள் மூலம் நேரடியாகச் சாதனங்களுக்கு நெட்வொர்க் வழங்கும் தொழில்நுட்பத்தை வருகாலத்தில் கொண்டுவர உள்ளன எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

சம்பவம் செய்த BSNL.. சிம் கார்டே இல்லாமல்  இனி போன் பேசலாம்..

அதேசமயம் நாடு முழுவதும் 4ஜி சேவைகளை வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். 2024 அக்டோபர் 29ம் தேதி நிலவரப்படி பிஎஸ்என்எல் நிறுவனம் 50,000க்கும் மேற்பட்ட 4ஜி தளங்களை நிறுவியுள்ளது. அவற்றில் 41,000க்கும் மேற்பட்டவை இப்போது செயல்பாட்டில் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 25,000க்கும் மேற்பட்ட புதிய 4ஜி தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன என தகவல் வெளியானது

அடுத்த ஆண்டு துவக்கத்தில் பிஎன்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கிய பின்பு 5ஜி சேவையும் விரைவில் அறிமுகம் செய்யும் பிஎஸ்என்எல் நிறுவனம். தற்போது 5ஜி சோதனையும் செய்து வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம்.

Best Mobiles in India

English summary
BSNL Direct to Device Service: Calls can be made without a SIM card: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X