ஜியோவை விட குறைந்த விலையில் ஓராண்டு பிளானை அறிவித்த பிஎஸ்என்எல்.!
தற்போது, முன்னணியில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் போட்டி போடும் வகையில், ஓராண்டு பிளானை மலிவான விலையில் அறிவித்துள்ளது. இதில், ஜியோவை போல தினமும் 1.5ஜிபி டேட்டா பிளான் இருந்தாலும், கூடுதலாக 1
பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றது. மற்ற நிறுவனங்களுக்கு போட்டியாகவும் சலுகைகளை அறிவிப்பதில் முன்னோடியாக இருக்கின்றது.

தற்போது, முன்னணியில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் போட்டி போடும் வகையில், ஓராண்டு பிளானை மலிவான விலையில் அறிவித்துள்ளது.
இதில், ஜியோவை போல தினமும் 1.5ஜிபி டேட்டா பிளான் இருந்தாலும், கூடுதலாக 10ஜிபி வரை வழங்குகின்றது.

பிஎஸ்என்எல் நிறுவனம்:
அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகின்றது. மற்ற நிறுவனங்களுக்கு போட்டியாக பல்வேறு பிளான்களையும் வழங்குவதில் முன்னோடியாக இருக்கின்றது. இதில் பிஎஸ்என்எல் தற்போது எஸ்டிவியில் அறிவித்துள்ள பிளான்கள் நமக்கு அதிக நன்மையளிக்க கூடியதாகவும் இருக்கின்றது.

ஜியோவின் ஓராண்டு பிளான்:
இந்நிலையில், ரூ.1699க்கு ரீசார்ஜ் செய்தால், தினமும் 1.5 ஜிபி டேட்டா 365 நாட்களுக்கு வழங்கப்படுகின்றனது. தினமும் 100 எஸ்எம்எஸ்கள், லோக்கல் மற்றும் எஸ்டிடி வாய்ஸ் கால்களும் அளவில்லாமல் பேசிக் கொள்ளலாம். இந்தியா முழுக்க ரோமிங் ப்ரீ போன்ற வசதிகளும் இருக்கின்றன.

பிஎஸ்என்எல் ரூ.1345 பிளான்:
ரூ.1345 விலையில் ஓராண்டுக்கு புதிய பிளானை எஸ்டிவி 1345 அறிவித்துள்ளது. இதில், தினமும் 1.5 ஜிபி டேட்டாவையும், கூடுதலாக 10ஜிபி டேட்டாவையும், அளிக்கின்றது. ஜியோவை விட விலை குறைவாக இருந்தாலும், இது 4ஜியில் வழங்குவதால், எந்த விதமான இலவச எஸ்எம்எஸ்கள், ப்ரீ காலிங் வசதியும் அளிக்கப்படவில்லை. தற்போது இது கேரளா வட்டாரத்தில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

ஜியோவை விட விலை குறைவு:
ஜியோவை விட விலை குறைவாக இருந்தாலும், ஜியோ நிறுவனம் சார்பில் காலர்டியூன், ரோமிங் ப்ரீ, அளவில்லா லோக்கல், அண்டு நேஷனல் கால்களும் செய்து கொள்ளலாம். தினமும் 100 எஸ்எம்எஸ்கள், மிஸ்டு கால் அலர்ட் போன்ற வசதிகளும் அளிக்கப்படுகின்றன.
ஆனால் ஓராண்டு ஜியோ விலை ரூ.1699 ஆக இருந்தாலும், இத்தனை சலுகைகள் இருக்கின்றன. பிஎஸ்என்எல் விலை குறைவாக இருந்தாலும் ரூ.1345 ஆக இருந்தாலும் டேட்டா சலுகை மட்டும் தான் இருக்கின்றது. இதில் மற்றபடி எந்த சலுகையும் இல்லை என்பது குறிப்பிட தக்கது. கூடுதலாக 10ஜிபி மட்டும் இருக்கின்றது.

பிஎஸ்என்எல் ப்ரீ ஹாட்ஸ்டார் பிளான்:
பிஎஸ்என்எல் நிறுவனம் இலவச ப்ரீ ஹாட்ஸ்டார் பிளானை வழங்குகின்றது. இதில், விலை ரூ.749 மாத வாடகையாகும். 50 எம்பிபிஎஸ் வேகத்தில் ,300ஜிபி டேட்டாவை மாதம் முழுக்க வழங்குன்றது. இதில் இதன் பெயர் பிஎஸ்என்எல் சூப்பர் ஸ்டார் 300 பிளான் என அழைக்கப்படுகின்றது. இதில் நாம் கிரிக்கெட் கண்டு கழிக்க ஹாட் ஸ்டார் ஆப்பும் இலவசமாக வழங்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications