குறைந்த விலையில் அதீத பலன் கொண்ட பிஎஸ்என்எல் "அபிநந்தன் 151" திட்டம்! என்ன ஸ்பெஷல் தெரியுமா?
இந்திய அரசுடைமை தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம், புதிய வவுச்சர் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு அபிநந்தன் 151 என்று பெயரிட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இத்திட்டத்தின் சிறப்பு மற்றும் பலன்களைப் பார்க்கலாம்.

புதிய அபிநந்தன் 151 திட்டம்
இந்த புதிய அபிநந்தன் 151 திட்டத்தின் பெயரே அதன் விலையைக் குறிப்பிட்டுவிட்டது. இந்த புதிய ப்ரீபெய்ட் வவுச்சர் திட்டம் இந்தியச் சந்தையில் வெறும் ரூ.151 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் சேவை, டெல்லி மற்றும் மும்பை வட்டாரத்தில் இலவச ரோமிங் கால்ஸ் சேவையுடன் வழங்கப்பட்டுள்ளது.

எவ்வளவு டேட்டா & வேலிடிட்டி தெரியுமா?
இத்துடன் பயனர்களுக்குத் தினமும் 1ஜிபி 4ஜி டேட்டா பயன்பாடு மற்றும் தினமும் 100 எஸ்.எம்.எஸ்கள் என 181 நாட்கள் வேலிடிட்டியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், குறிப்பிடத்தக்க முக்கிய விஷயம் என்னவென்றால், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த வவுச்சர் சென்னை மற்றும் தமிழ்நாட்டில் மட்டும் அடுத்து வரும் 90 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

என்ன ஸ்பெஷல் தெரியுமா?
மிகக்குறைந்த விலையில் 181 நாட்கள் வேலிடிட்டியுடன், தினமும் 1 ஜிபி டேட்டா மற்றும் 181 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் வழங்கப்படுவது பிஎஸ்என்எல் பயனர்களுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் தான். இந்திய டெலிகாம் சந்தையில் நிலவி வரும் போட்டியைச் சமாளிக்க பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.

கூடுதல் பம்பர் ஆஃப்பர் திட்டங்கள்
பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த சில மாதங்களில் பல புதிய சலுகைகள் மற்றும் பம்பர் ஆஃப்பர்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன் அடிப்படியில் பயனர்களுக்கு கூடுதலாக 2.21ஜிபி டேட்டா பம்பர் சலுகையில் வழங்கப்படுகிறித்து. பிஎஸ்என்எல் இன் ரூ.186 திட்டத்தில் பயனர்களுக்குத் தினமும் 1ஜிபி டேட்டாவுடன் கூடுதல் 2.21ஜிபி டேட்டா சேர்த்து மொத்தமாக 3.21ஜிபி டேட்டா தினமும் வழங்கப்படுகிறது. இதேபோல் ரூ.485, ரூ.666, ரூ.429 மற்றும் ரூ.1,699 திட்டங்களுக்கும் கூடுதலாக 2.21ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications