Home
News

அசத்தும் BSNL! ரூ.100க்கு கீழ் இத்தனை டேட்டா திட்டங்களா? Jio-வே தெறித்து ஓடிடும் போலயே!

மொபைல் டேட்டா (Mobile Data) என்பது இப்போது அனைவருக்கும் தேவையான ஒரு அத்தியாவசிய பொருள் ஆகிவிட்டது. குறைந்த விலையில் அதிக டேட்டா நன்மை கிடைக்கும் திட்டங்களை தான் மக்கள் விரும்புகிறார்கள். அப்படி தான் நீங்களும் குறைந்த விலையில் அதிக டேட்டாவை விரும்புகிறீர்கள் என்றால், இதை படியுங்கள்.

குறைந்த விலையில் அதிக டேட்டா என்றதும் பலரின் நினைவுகள் ஜியோவை நாடி செல்லலாம், ஆனால், உண்மையிலேயே இந்தியாவில் BSNL தான் குறைந்த விலையில் அதிக டேட்டாவை வழங்குகிறது. இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள சிலருக்கு வேகம் ஒரு குறையாகத் தோன்றினாலும், இனி BSNL வேகம் பற்றி மக்கள் கவலைப்பட வேண்டியதில்லை. காரணம், BSNL-ன் இப்போதைய நிலைமையே வேறு.

அசத்தும் BSNL! ரூ.100க்கு கீழ் இத்தனை டேட்டா திட்டங்களா? Jio-வே அலறுது

BSNL அசத்தலாக அறிமுகம் செய்துள்ள 4 புதிய டேட்டா வவுச்சர் திட்டங்கள்.!

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட், பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் இப்போது அதன் பயனர்களுக்கு நான்கு 4ஜி டேட்டா வவுச்சர்களை வழங்குகிறது. இவை ரூ.100 என்ற விலைக்கும் குறைவான விலையில் வருகிறது. Jio, Airtel, Vi போன்ற அனைத்து தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது சலுகைகளின் கட்டணத்தை அதிகரித்து வரும் இந்த நேரத்தில், இதுபோன்ற திட்டங்கள் நுகர்வோருக்கு நிம்மதியை அளிக்கிறது.

BSNL ஏற்கனவே இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் 4G ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. அதேபோல், 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில், பல நகரங்களில் 4G ஐ வெளியிடத் திட்டமிட்டுள்ளது. எனவே, BSNL இன் 4G டேட்டா வவுச்சர்களை நீங்கள் நம்பும் நேரம் இது தான் என்றே கூறலாம். உங்கள் பகுதியில் BSNL 4G இன்னும் வரவில்லை என்றால், அது வெகு தொலைவில் இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

BSNL 4G அல்லது 3G சேவைகளை வழங்கும் பகுதியில் நீங்கள் வசிக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு கூடுதல் டேட்டா தேவைப்பட்டால், கீழே குறிப்பிடப்பட்டுள்ள வவுச்சர்களை நீங்கள் கட்டாயம் ரீசார்ஜ் செய்யலாம். இவை அனைத்தும் ரூ.100 விலைக்குள் கிடைக்கிறது என்பதனால், ட்ரை செய்து பார்ப்பதில் தவறில்லை தானே.! இந்த டேட்டா வவுச்சர்கள் இயற்கையில் 4G இல்லை என்பதை நினைவில் கொள்ளவும்.

அசத்தும் BSNL! ரூ.100க்கு கீழ் இத்தனை டேட்டா திட்டங்களா? Jio-வே அலறுது

இனி 4ஜி வேகத்திலும் டேட்டா எடுக்கும்.. 3ஜி வேகத்திலும் டேட்டா எடுக்கும்.. BSNL உறுதி.!

இது டேட்டாவின் வேகத்தை பற்றியது, நீங்கள் BSNL இன் 4G நெட்வொர்க் கவரேஜின் கீழ் வாழ்ந்தால், நீங்கள் 4G நெட்வொர்க் சேவையைப் பெறுவீர்கள். இல்லையெனில், அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனத்திடமிருந்து 3ஜி அல்லது 2ஜி சேவையைப் பெறுவீர்கள். நீங்கள் BSNL வாடிக்கையாளராக இருந்தால் ரூ.100-க்குள் ரீசார்ஜ் செய்யக்கூடிய டேட்டா-வவுச்சர் திட்டங்களைப் பற்றி பார்ப்போம்.

இந்த பட்டியலில் இருக்கும் முதல் திட்டம் ரூ.16 திட்டமாகும். இது வெறும் 1 நாள் செல்லுபடியாகும் மற்றும் 2ஜிபி டேட்டாவுடன் வருகிறது. உங்கள் அடிப்படை திட்டத்தின் FUP (நியாயமான பயன்பாட்டுக் கொள்கை) வரம்பு தீர்ந்துவிட்டால், ஒரு நாளுக்கு தேவையான டேட்டாவை இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் அனுபவிக்கலாம்.

பட்டியலில் உள்ள இரண்டாவது திட்டம் ரூ.94 திட்டமாகும். இது 30 நாட்கள் சேவை செல்லுபடியாகும். இந்த திட்டத்தில், பயனர்கள் டேட்டாவை மட்டுமின்றி 200 நிமிட குரல் அழைப்பையும் பெறுகிறார்கள். இந்த திட்டத்துடன் இணைக்கப்பட்ட தரவு 3ஜிபி ஆகும். பிஎஸ்என்எல்-ஐ இரண்டாம் சிம் ஆக பயன்படுத்துவோருக்கு இது நல்லது.

அசத்தும் BSNL! ரூ.100க்கு கீழ் இத்தனை டேட்டா திட்டங்களா? Jio-வே அலறுது

ரூ.100-க்கு கீழ் கிடைக்கும் பெஸ்டான டேட்டா திட்டங்கள் இது தானா?

மூன்றாவது திட்டம் 97 ரூபாய்க்கு வருகிறது. இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் செல்லுபடியாகும் காலம் 15 நாட்கள். ஆனால் குரல் அழைப்புகள் மீதான வரம்புக்கு பதிலாக, பயனர்கள் உண்மையிலேயே வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினசரி 2 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். FUP தரவு நுகர்வுக்குப் பிறகு, வேகம் 40 Kbps ஆக குறைகிறது. லோக்துன் உள்ளடக்கமும் சேர்க்கப்பட்டுள்ளது.

கடைசியாக, ரூ 98 திட்டம் உள்ளது. இந்த திட்டத்தில், பயனர்கள் 22 நாட்களுக்கு தினசரி 2 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். FUP தரவு நுகர்வுக்குப் பிறகு வேகம் 40 Kbps ஆக குறைகிறது. இந்த திட்டத்தில் குரல் அழைப்பு பலன் எதுவும் சேர்க்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளவும். இந்த நான்கு திட்டங்களும், மிக குறைந்த விலையில் அதிக டேட்டாவை வழங்குகின்றன. BSNL இப்போது 4ஜி வேகத்தையும் ஆதரிப்பதனால், உண்மையில் இது சிறந்த தேர்வாகும்.

Best Mobiles in India

English summary
BSNL Data Voucher Plans Under Rs 100 Can Be Your Money Saver Packs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X