Home
News

BSNL இறங்கி அடிச்சாச்சு.. மாதாந்திரம் ரூ.126 போதும்.. 1 வருட வேலிடிட்டி.. 2 ஜிபி டேட்டா.. இனி ரீசார்ஜ் இதாங்க!

டெலிகாம் மார்கெட்டே வாய்ஸ் கால்கள் மட்டுமே கிடைக்கும் திட்டங்களை பற்றி பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால், பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் அதை ஏற்கனவே செய்து வருகிறது. அதுமட்டுமல்ல, டேட்டாவுக்கும் பிரத்யேக திட்டங்களை கொடுக்கிறது. அதிலும் மாதாந்திரம் வெறும் ரூ.126 செலவில் 365 நாட்களுக்கு டேட்டா கிடைத்தால், டெலிகாம் மார்கெட்டில் பிஎஸ்என்எல் இறங்கி அடித்தது போலத்தான் கஸ்டமர்களுக்கு தோன்றும்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் டேட்டா மட்டுமே கிடைக்கும் திட்டங்கள் வெறும் ரூ.16 விலையில் தொடங்குகிறது. அதிகபட்சம் ரூ.1515 விலைக்கு கிடைக்கிறது. ஆகவே, 1 நாள் வேலிடிட்டி முதல் 365 நாட்கள் வேலிடிட்டி வரையில் பெற்று கொள்ளலாம். இந்த டேட்டா திட்டங்களில் போஸ்ட் டேட்டாவும் கிடைப்பதால், அன்லிமிடெட் சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம்.

BSNL இறங்கி அடிச்சாச்சு.. மாதம் ரூ.126 போதும்.. 1 வருட வேலிடிட்டி!

பிஎஸ்என்எல் ரூ.16 ப்ரீபெய்ட் திட்டத்தில் 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த டேட்டாவை 1 நாள் வேலிடிட்டியில் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 2 ஜிபிக்கு பிறகு போஸ்ட் டேட்டா கிடைக்காது. பிஎஸ்என்எல் ரூ.58 ப்ரீபெய்ட் திட்டத்தில் 7 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த வாராந்திர நாட்களில் 2 ஜிபி டேட்டாவை தினமும் பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது. இதற்கு அடுத்து பிஎஸ்என்எல் ரூ.151 ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தில் 30 நாட்களுக்கு டேட்டா கிடைக்கும். ஆனால், தினசரி சலுகையில் கிடைக்காது, லம்ப்-சம் சலுகையாக 40 ஜிபி டேட்டா கிடைக்கும். இதிலும் போஸ்ட் டேட்டா எதிர்பார்க்க முடியாது.

பிஎஸ்என்எல் ரூ.198 ப்ரீபெய்ட் திட்டத்தில் 40 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த 40 நாட்களிலும் தினசரிக்கு 2 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, 80 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த டேட்டா திட்டத்துக்கு போஸ்ட் டேட்டா கிடைக்கும். ஆகவே, 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம்.

இதற்கு அடுத்து 90 நாட்கள் வேலிடிட்டியை கொடுக்கும் டேட்டா திட்டம் இருக்கிறது. பிஎஸ்என்எல் ரூ.411 ப்ரீபெய்ட் திட்டம் இந்த 3 மாத வேலிடிட்டி கொடுக்கிறது. இந்த நாட்களில் தினசரிக்கு 2 ஜிபி வீதம் டேட்டாவும், அதற்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவும் கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்திலும் போஸ்ட் டேட்டா உங்களுக்கு கிடைக்கும்.

ஆகவே, 2 ஜிபி முடிந்த பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் உங்களால் டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த டேட்டா திட்டங்களை தூக்கி சாப்பிடும்படியான சலுகைகள் பிஎஸ்என்எல் ரூ.1515 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது. ஏனென்றால், இந்த திட்டம் 365 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கிறது. ஆகவே, வருடம் முழுவதும் குறையில்லாத டேட்டா கிடைக்கும்.

அதாவது, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு 365 நாட்கள் முழுவதும் தினசரிக்கு 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும். ஆகவே, உங்களுக்கு 730 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. இதுபோக போஸ்ட் டேட்டா சலுகையையும் இந்த திட்டம் கஸ்டமர்களுக்கு கொடுக்கிறது. ஆகவே, 2 ஜிபி டேட்டா முடிய முடிய 40 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா தொடர்ந்து கிடைக்கும்.

இந்த விலைக்கு ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களிடம் திட்டங்கள் கிடையாது. ஆகவே, பிஎஸ்என்எல் நிறுவனம் வாய்ஸ் கால்கள் மட்டும் அடங்கிய திட்டங்களில் பட்டையை கிளப்பவில்லை. இதுபோன்ற டேட்டா திட்டங்களிலும் பட்டையை கிளப்பி இருக்கிறது. அதிலும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை கிடைத்துவிட்டால், அடுத்த லெவல்தான்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Data Plan 2025 2GB Daily Data For 365 Days Validity At Rs 1515 Recharge Check Other Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X