பிஎஸ்என்எல் ரூ.98 திட்டம்: தினசரி 1.5ஜிபி டேட்டா- 26நாட்களுக்கு.!
பிஎஸ்என்எல் ரூ.399 திட்டத்தில் 3.21ஜிபி கூடுதல் டேட்டா நன்மையுடன், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். பிரத்யேக ரிங் பேக் டோன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் இன்று ரூ.98 திட்டத்தில் புத்தம் புதிய சலுகையை அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டம் கண்டிப்பாக பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும். மேலும் விரைவில் இந்நிறுவனம் பல்வேறு
புதிய திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.98 திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.5ஜிபி டேட்டா வீதம் 26 நாட்களுக்க வழங்கப்படுகிறது, இருந்தபோதிலும் எஸ்எம்எஸ் மற்றும் கால் அழைப்புகள் போன்ற சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை.

ஜியோ:
ஜியோ நிறுவனத்தின் ரூ.98-திட்டத்தில் 2ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும், குறிப்பாக இந்த திட்டத்தில் இலவச கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற நன்மைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும்
பிஎஸ்என்எல் நிறுவனம் இதற்குமுன்பு அறிவித்த சலுகைகள் மற்றும் திட்டங்களைப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.399 திட்டம்:
பிஎஸ்என்எல் ரூ.399 திட்டத்தில் 3.21ஜிபி கூடுதல் டேட்டா நன்மையுடன், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். பிரத்யேக ரிங் பேக் டோன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவை டெல்லி மற்றும் மும்பை போன்ற வட்டாரங்களுக்கும் பொருந்தும்.

ரூ.798 போஸ்ட்பெயிட் திட்டம்
இதற்குமுன்பு பிஎஸ்என்எல் ரூ.798 விலையில் போஸ்ட்பெயிட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகை என்னவென்றால், தினசரி 100எஸ்எம்எஸ், 120ஜிபி 2ஜி/3ஜி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ.155 ரீசார்ஜ்
பிஎஸ்என்எல் ரூ.155 ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா வீதம் 17 நாட்களுக்கு 34ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications